சியோமியை காலி செய்ய ரூ.5000/- என்ற விலைப்புள்ளியில் புதிய சாம்சங் தொடர்.!

|

சாம்சங் இந்தியா நிறுவனமானது சியோமி நிறுவனத்துடன் கடுமையான போட்டியொன்றை நிகழ்த்தும் நிலைப்பாட்டில் உள்ளது போல தெரிகிறது. அதாவது சியோமி நிறுவனத்திற்கு எதிராக ஒரு புதிய ஆன்லைன்-பிரத்தியேக ஸ்மார்ட்போன் தொடரை வெளியிடும் பணிகளில் சாம்சங் இந்தியா நிறுவனம் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரூ.5000/- என்ற விலைப்புள்ளியில் புதிய சாம்சங் தொடர்.!

இந்த புதிய சாம்சங் தொடரானது, நிச்சயமாக ஒரு பட்ஜெட் மைய ஸ்மார்ட்போனாக இருக்குமென்றும், அது சியோமி நிறுவனத்தின் சிறந்த விற்பனையாகும் ஸ்மார்ட்போன்களுக்கு இணையான மிகவும் ஆக்கிரோஷமாக விலை நிர்ணயத்தை கொண்டிருக்குமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தி எகனாமிக்ஸ் டைம்ஸ் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின்படி, இந்த புதிய சாம்சங் தொடரில் சியோமி ஸ்மார்ட்போன்களை விட சில உயர் வன்பொருள் விவரக்குறிப்புகள் சேர்க்கப்படலாம். விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில் ரூ 5,000/- தொடங்கி ரூ.15,000 வரை என்கிற புள்ளிக்குள் வெளியாகலாம். தற்பொழுது வரையிலாக, சாம்சங் நிறுவனமானது அதன் ஆன் தொடர் வரிசை ஸ்மார்ட்போன்கள் மற்றும் சில ஜே தொடர் ஸ்மார்ட்போன்களை மட்டுமே ஆன்லைனில் சேனல்களின் வழியாக விற்பனை செய்து வருகிறதென்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

How To Increase the Speed of your Laptop (TAMIL)

இ-காமர்ஸ் விற்பனையை விரிவாக்குவதன் மூலம் சியோமி நிறுவனத்தை பின்தள்ள திட்டமிடும் சாம்சங் இந்தியா நிறுவனத்தின் இந்த பலே ஐடியாவானது கிட்டத்தட்ட சாத்தியமான ஒரு வெற்றியே ஆகும். மறுகையில், ஆன்லைன் விற்பனை மூலம் சியோமி நிறுவனத்தை பின்தள்ளுவதென்பது அவ்வளவு எளிய காரியமாக இருக்காதென்பதையும் சாம்சங் இந்தியா நன்கு அறியுமென நம்பலாம்.

ரூ.5000/- என்ற விலைப்புள்ளியில் புதிய சாம்சங் தொடர்.!

எது எப்படியோ சாம்சங் நிறுவனத்திடமிருந்து சூப்பர் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் வெளியாகப்போவது மட்டும் உறுதி, அதற்கு சியோமி நிறுவனத்திற்கு நன்றிகள். இன்டெர்நெட் டேட்டா கார்பரேஷன் (ஐடிசி) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, இந்த இரு நிறுவனங்களுமே தற்போதைய ஸ்மார்ட்போன் சந்தையின் 23.5 சதவீத பங்குகளை கொண்டுள்ளன.

இதுவரையிலாக சியோமி நிறுவனத்திற்கு விலைப்புள்ளி சார்ந்த கடுமையான போட்டியை எந்தவொரு நிறுவனமும் வழங்கியதில்லை. அதை சாம்சங் இந்தியா நிறுவனம் வழங்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
Samsung working on an online-exclusive smartphone series to counter Xiaomi: Report. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X