Home
Mobile

ப்ளீஸ் வெயிட்.. பட்ஜெட் விலையில் வரும் 2 புது Samsung போன்கள்.. ஒன்னு 4ஜி.. இன்னொன்னு 5ஜி.. எப்போது அறிமுகம்?

"கேப்பு விட்டா தானே வேற கம்பெனி போன்களை வாங்குவீங்க.. மாசத்துக்கு 4, 5 புது போன்களை அறிமுகம் செய்வோம்ல" என்று கூறாத குறையாக.. பல சீன நிறுவனங்கள், தொடர்ச்சியான முறையில் தத்தம் புதிய ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து வருகின்றன. ஆனாலும் கூட சாம்சங் என்கிற பிராண்ட்டின் மீது இந்தியர்களுக்கு இருக்கும் நம்பிக்கையை எந்த நிறுவனத்தாலும் அசைத்து பார்க்க முடியவில்லை. ஆகையால் தான் "யார் எவ்வளவு ஸ்மார்ட்போன்களை வெளியிட்டால் எனக்கென்ன?" என்று, சாம்சங் நிறுவனம் மிகவும் கூலாக, ஆண்டுதோறும் தான் பின்பற்றும் லான்ச் டைம்லைனை தொடர்ந்து பின்பற்றிவருகிறது.

அப்படியாக சாம்சங் நிறுவனம், மிகவும் பிரபலமான அதன் ஏ-சீரிஸின் கீழ் 2 புதிய மாடல்களை அறிமுகம் செய்யவுள்ளது. அது சாம்சங் கேலக்ஸி ஏ16 மாடல்கள் ஆகும். இது 4ஜி மற்றும் 5ஜி வெர்ஷன்களில் அறிமுகமாகும். அதாவது சாம்சங் கேலக்ஸி ஏ16 4ஜி (Samsung Galaxy A16 4G) மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ16 5ஜி (Samsung Galaxy A16 5G) மாடல்களாக அறிமுகமாகும்.

ப்ளீஸ் வெயிட்.. பட்ஜெட் விலையில் வரும் 2 புது Samsung போன்கள்!

புதிய சாம்சங் கேலக்ஸி ஏ16 4ஜி மாடல் ஆனது முந்தைய சாம்சங் கேலக்ஸி ஏ15 4ஜி (Samsung Galaxy A15 4G) மாடலை விட சிறந்த அம்சங்களை வழங்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஏனென்றால்.. சாம்சங் கேலக்ஸி ஏ14 4ஜி (Samsung Galaxy A14 4G) மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ15 4ஜி ஆகிய மாடல்களுக்கு இடையே நிறையே வேறுபாடுகள் இருந்தன!

நினைவூட்டும் வண்ணம் சாம்சங் கேலக்ஸி ஏ15 4ஜி ஆனது 6.5 இன்ச் சூப்பர் அமோஎல்இடி டிஸ்பிளேவுடன் ( 6.5-inch Super AMOLED display) வருகிறது. இந்த டிஸ்பிளே 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate) மற்றும் 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் (800 nits brightness) போன்ற உயர்நிலை அம்சங்களை கொண்டுள்ளது.

ப்ராசஸரை பொறுத்தவரை, இது மீடியாடெக் ஹீலியோ ஜி99 (Mediatek Helio G99) சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் 8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான ஸ்டோரேஜ் ஆப்ஷன்களையும் கொண்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை, இது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை (Triple Rear Camera Setup) பேக் செய்கிறது.

அதில் 50எம்பி ப்ரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைட்-ஆங்கிள் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா உள்ளன. முன்பக்கத்தில் 13எம்பி செல்பீ கேமரா உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை, இது 5000எம்ஏஎச் பேட்டரியை (5000mAh Battery) கொண்டுள்ளது. இந்த பேட்டரி 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை (25W Fast Charging Support) வழங்குகிறது.

கடைசியாக சாம்சங் கேலக்ஸி ஏ15 4ஜி ஆனது ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) அடிப்படையிலான ஒன்யு 6 (One UI 6) இன்டர்பேஸ் உடன் வருகிறது. சாம்சங் நிறுவனமானது இந்த ஸ்மார்ட்போனிற்கு 4ஆண்டுகளுக்கான சாப்ட்வேர் அப்டேட்கள் (Software Updates) மற்றும் 5 ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் (Security Updates) கிடைக்கும் என்று வாக்குறுதி அளித்துள்ளது.

மேற்கண்ட அம்சங்களை போலவே அல்லது இதைவிட சிறந்த அம்சங்கள் சாம்சங் கேலக்ஸி ஏ16 4ஜி ஸ்மார்ட்போனில் நாம் எதிர்பார்க்கலாம். சாம்சங் கேலக்ஸி ஏ15 சீரிஸ் (Galaxy A15 Series) ஆனது கடந்த 2023 ஆன் ஆம் ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டதை கருத்தில் கொண்டால்.. புதிய சாம்சங் கேலக்ஸி ஏ16 4ஜி மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ16 5ஜி ஆகிய இரண்டும் கூட 2024 ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் அறிமுகப்படுத்தப்படலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung working on 2 new smartphones Galaxy A16 4G and Galaxy A16 5G
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X