சூடுபிடிக்கும் A-சீரிஸ்.. பக்காவான பட்ஜெட் விலையில்.. 2 புதிய Samsung போன்கள்.. என்ன மாடல்கள்? என்ன விலை?
சாம்சங் நிறுவனத்தின் பெஸ்ட் பட்ஜெட்-விலை சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் எது என்றால் பலரும் எம்-சீரீஸ் மாடல்களை தான் சுட்டிக்காட்டுவார்கள்; பரிந்துரைப்பார்கள். அது உண்மைதான். ஆனால் சாம்சங்கின் ஏ-சீரிஸின் கீழும் சில நல்ல பட்ஜெட்-விலை ஸ்மார்ட்போன்கள் உள்ளன. அதே ஏ-சீரீஸின் கீழ் மிட்-ரேன்ஜ் மாடல்களும் இருப்பதால் பலரும் ஏ-சீரீஸில் பட்ஜெட்-விலை மாடல்களை தேடுவது இல்லை. அந்த போக்கை மாற்றும் நோக்கத்தின் கீழ்.. பக்காவான பட்ஜெட் விலையில்.. 2 புதிய சாம்சங் கேலக்ஸி ஏ-சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. என்ன மாடல்கள்? என்ன விலைக்கு அறிமுகமாகும்? இதோ விவரங்கள்:
என்ன மாடல்கள்? நாம் இங்கே பேசுவது சாம்சங் கேலக்ஸி ஏ16 (Samsung Galaxy A16) மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ06 (Samsung Galaxy A06) ஸ்மார்ட்போன்களை பற்றித்தான். பெயர் குறிப்பிடுவது போலவே, இவ்விரு ஸ்மார்ட்போன்களும் முறையே கேலக்ஸி ஏ15 மற்றும் கேலக்ஸி ஏ05 மாடல்களின் அப்கிரேட்டட் வெர்ஷன்களாக இருக்கும்.

நினைவூட்டும் வண்ணம் சாம்சங் கேலக்ஸி ஏ05 (Samsung Galaxy A05) மாடலானது கடந்த அக்டோபர் 2023 இல் வெளியிடப்பட்டது; மறுகையில் உள்ள சாம்சங் கேலக்ஸி ஏ15 (Samsung Galaxy A15) ஸ்மாட்போன் ஆனது 4ஜி மற்றும் 5ஜி வேரியண்ட்களில் கடந்த டிசம்பர் 2023 இல் அறிமுகப்படுத்தப்பட்டன.
என்ன விலைக்கு வரும்? இதுதொடர்பான ஒரு லீக் தகவலானது சாம்சங் கேலக்ஸி ஏ16 மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ06 ஆகிய 2 மாடல்களுமே ரூ18,000 அல்லது அதற்கும் குறைவான விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம். குறிப்பாக கேலக்ஸி ஏ16 மாடலானது அதன் முந்தைய வெர்ஷனை போலவே 4ஜி மற்றும் 5ஜி வேரியண்ட்களில் வரும் என்று ம் எதிர்பார்க்கப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக சாம்சங் கேலக்ஸி ஏ16 மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ06 ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள் குறித்து எந்த விவரங்களும் இல்லை.
எப்போது அறிமுகமாகும்? கேலக்ஸி கிளப் வழியாக வெளியான அறிக்கையின்படி, சாம்சங் கேலக்ஸி ஏ16 மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ06 ஆகிய இரண்டும் இந்த 2024 ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் வெளியிடப்படும்.அதை தொடர்ந்து சாம்சங் கேலக்ஸி ஏ56 (Samsung Galaxy A36) அல்லது சாம்சங் கேலக்ஸி ஏ56 (Samsung Galaxy A56) போன்ற பிற சாம்சங் ஏ-சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் 2025 மார்ச் - ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம்.
பழைய சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6100+ சிப்செட், அதிகபட்சம் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ், 90ஹெர்ட்ஸ் 6.5 இன்ச் FHD+ டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ், 50எம்பி ட்ரிபிள் கேமரா செட்டப், 13எம்பி செல்பீ கேமரா, 25W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி போன்றவைகளை கொண்டுள்ளது.
பழைய சாம்சங் கேலக்ஸி ஏ05 விரிவான அம்சங்கள்: இது 720 x 1600 பிக்சல் ரெசல்யூஷனை கொண்ட 6.7 இன்ச் எச்டி+ டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வருகிறது: 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 6ஜிபி ரேம் +128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்.
ஒருவேளை 128ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உங்களுக்கு போதவில்லை என்றால், மைக்ரோ எஸ்டி கார்டை பயன்படுத்தி இதன் மெமரியை மேலும் விரிவாக்கலாம். ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட நிறுவனத்தின் சொந்த லேயர் ஒன் யுஐ கோர் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது.
இதன் கேமரா செட்டப்பில் 50எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் கேமரா உள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை 8எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. கடைசியாக சாம்சங் கேலக்ஸி ஏ05 ஸ்மார்ட்போன் ஆனது 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications