விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்

Posted By: Staff

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்
சாம்சங் வெம்ப்ளி என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது சாம்சங் நிறுவனம். இந்த மொபைல் வின்டோஸ் 7.5 மேங்கோ ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டது.

ஆன்ட்ராய்டு மொபைல்களில் உள்ள அனைத்து வசதிகளையும் இந்த புதிய மேங்கோ ஆப்பரேட்டிங் சிஸ்டமும் வழங்கும் என்பது கூடுதல் விஷேசம். இது அமோல்டு டச் ஸ்கிரீன் திரை கொண்டது. 480 X 800 பிக்ஸல் துல்லியத்தை வழங்குகிறது. 3.7 இஞ்ச் திரை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

16 எம்பி கலர்களுக்கு சப்போர்ட் செய்கிறது. இந்த மொபைல் 1.5 ஜிஎச்இசட் கியூவல்காம் எம்எஸ்எம்8255 பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இதன் 5 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் மிகவும் துல்லியமான புகைப்படத்தையும், வீடியோவையும் பெறலாம்.

சாம்சங் வெம்ப்ளி ஸ்மார்ட்போனில் லெட் ப்ளாஷ் மற்றும் ஏஎப் வசதியினையும் கொண்டது. இதில் முகப்புக் கேமராவும் உள்ளது. இதனால் ஆட்டோ ப்ளாஷ், ஜியோ டேகிங், இமேஜ் ஸ்டெபிலைசேஷன் போன்ற வசதிகளையும் கொடுக்கும். இதன் யூஎஸ்பி வசதியினால் கணினியில் உள்ளவற்றை மொபைலுக்கு எளிதாக பதிவேற்றம் செய்ய முடியும். துல்லியமான ஆடியோ ட்ராக் வசதியினைப் பெற 3.5 மிமீ ஸ்டீரியோ ஜேக் பயன்படுகிறது.

பொழுது போக்கு அம்சமாக இதில் எப்எம் ரேடியோ வசதியைப் பெற முடியும். வைபை வசதியும் உள்ளது. சாம்சங் வெம்ப்ளி மொபைலில் ஹப், சூன் பிளேயர், எக்ஸ்பாக்ஸ் கேம்ஸ் போன்ற புதிய அப்ளிக்கேஷன்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன.

வாடிக்கையாளர்களுக்கு இதில் இன்னும் ஒரு விருப்பமான விஷயம் என்னவென்றால் இந்த மொபைல் 2ஜி மற்றும் 3ஜி எச்எஸ்டிபிஏ வசதிக்கு சப்போர்ட் செய்கிறது. இந்த புதிய மொபைல் 16 ஜிபி மெமரி வசதி கொண்டுள்ளது. இதன் மெமரி வசதியை 32ஜிபி வரை வேண்டுமானாலும் விரிவுபடுத்திக் கொள்ளலாம்.

இதில் மைக்ரோ எஸ்டி இன்ஸ்டாலேஷன் வசதி அளிக்கப்படவில்லை. நீடித்து உழைக்கும் எல்ஐ-இயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த மொபைலின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. சாம்சங் வெம்ப்ளி இந்த மாத இறுதிக்குள் வெளிவரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot