ஆவலைத்தூண்டும் 'படா' ஓஎஸ் கொண்ட சாம்சங் மொபைல்!

மொபைல் தயாரிப்பில் பல புதிய யுக்திகளை சாம்சங் கையாளப்போவதாக, தகவல்கள் வெளியாகின. அந்த வகையில் அனைவரும், படா ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் மொபைலை பற்றி தெரிந்து கொள்ள ஆவலுடன் இருக்கின்றனர். அத்தகைய வாடிக்கையாளர்களுக்கு ஒரு ருசிகரமான தகவல்.
சாம்சங் வேவ்-3 என்ற புதிய மொபைல், அனைவரும் ஆவலாக எதிர் பார்க்கும் படா ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டதாக இருக்கும். இந்த மொபைலை விரைவில் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த புதிய மொபைல் சாம்சங் வேவ்-3 மொபைல் 2.0 வெர்ஷன் படா ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும். இது 4.0 இஞ்ச் திரையை கொண்டதாக இருக்கும்.
இந்த திரை டபிள்யுவிஜிஏ சூப்பர் அமோல்டு தொழில் நுட்பம் கொண்டது. இந்த புதிய படா ஆப்பரேட்டிங் சிஸ்டம்
இயங்க, இதன் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் பெரிதும் துணை புரியும். இதில் 5 மெகா பிக்ஸல் கேமரா உள்ளது. ஆனால் இதன் செகன்டரி கேமராவை பற்றி எந்த விதமான தகவல்களும் கூறப்படவில்லை. 512எம்பி கொண்ட இந்த மொபைல் 4ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதிக்கும் சப்போர்ட் செய்யும்.
மின்னல் வேக செயல்திறனை இந்த புதிய வேவ்-3 மொபைல் கொடுக்கும். அதிக ஆற்றலை கொடுக்கும் பேட்டரியையும் இந்த மொபைல் வழங்கும். எந்த அளவு மக்கள் சிறந்த வசதிகளை ஸ்மார்ட்போன் மூலமாக எதிர் பார்க்கின்றனரோ அந்த வசதிகள் இதில் இருக்கும் என்று மிகுந்த நம்பிக்கையுடன் எதிர் பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications