Samsung போட்டான் பாரு.. 200MP கேமரா.. 16GB ரேம்.. 5000mAh பேட்டரி.. போல்டு டிஸ்பிளே.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனத்தின் போல்டபிள் ஸ்மார்ட்போனை விரும்பும் பிரியர்களை தட்டித்தூக்கும்படி சாம்சங் டபுள்யூ27 (Samsung W27) வெளியாகி இருக்கிறது. இப்போது, சீன மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. இருப்பினும், பீச்சர்களில் பட்டையை கிளப்புவதால், மற்ற மார்கெட்டுகளில் எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.
சாம்சங் டபுள்யூ27 அம்சங்கள் (Samsung W27 Specifications): 8 இன்ச் (2504 x 2256 பிக்சல்கள்) டைனாமிக் அமோலெட் (Dynamic AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு கியூஎக்ஸ்ஜிஏபிளஸ் (QXGA+) ரெசொலூஷன், 422 பிபிஐ பிக்சல் டென்சிட்டி 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. அவுட்டரில் 6.5 இன்ச் (2520 x 1080 பிக்சல்கள்) டைனாமிக் அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 422 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.
இந்த டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் செராமிக் 3 (Corning Gorilla Glass Ceramic 3) புரொடெக்சன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, டிஸ்பிளேவில் பிரீமியம் அனுபவத்தை இந்த சாம்சங் டபுள்யூ27 ஸ்மார்ட்போன் கொடுக்க இருக்கிறது. ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் (Android 17 OS) மட்டுமல்லாமல், ஒன் யுஐ 9 (One UI 9) கிடைக்கிறது.
ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 3என்எம் (Octa Core Qualcomm Snapdragon 8 Elite Gen 5 3nm) சிப்செட் கொண்ட மாடலாக இந்த சாம்சங் டபுள்யூ27 ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது. 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொடுக்கிறது.
மேலும், 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொடுக்கப்பட்டு உள்ளது. டூயல் சிம் சப்போர்ட் கிடைக்கிறது. ஈசிம் பயன்படுத்தலாம். நானோ சிம் சிலாட் கிடைக்கிறது. 200 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி மட்டுல்லாமல், குவாட் பிக்சல் ஆட்டோ போகஸ் சப்போர்ட் கிடைக்கிறது.
50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 10 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. இந்த டெலிபோட்டோ கேமராவுக்கும் ஓஐஎஸ் டெக்னாலஜி மற்றும் 3எக்ஸ் ஆப்டிகல் ஜூமிங் கிடைக்கிறது. 30X ஸ்பேஸ் ஜூமிங் கிடைக்கிறது. 10 எம்பி இன்னர் மற்றும் அவுட்டர் கேமராக்களை செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக கொடுத்துள்ளது.
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கிடைக்கிறது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 20W வயர்லெஸ் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்கிறது. அன்போல்டு செய்தால் 4.1 எம்எம் தடிமன், போல்டு செய்தால் 8.9 எம்எம் தடிமன் உள்ளது.
215 கிராம் எடை உள்ளது. 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.2,71,320ஆகவும், 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி மாடலின் விலை ரூ.3,14,160ஆகவும் இருக்கிறது. சீனாவில் வெளியாகி இருக்கிறது, குளோபல் மற்றும் மற்ற மார்கெட்டில் விரைவில் எதிர்பார்க்கலாம். போல்டபிள் மாடல்களில் முக்கிய இடத்தை இது பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications
