Home
Mobile

சும்மா செதுக்கி இருக்கான்.. புதுசா 1 பைக் வாங்கும் விலையில் Samsung W26 போன் அறிமுகம்!

சாம்சங் நிறுவனம் சைலன்ட் ஆக ஒரு ஸ்பெஷல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அது சாம்சங் டபுள்யூ26 (Samsung W26)ஸ்மார்ட்போன் ஆகும். இது சர்வதேச அளவில் விற்பனையாகும் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 7 மாடலின் சீனா-ஒன்லி வேரியண்ட் ஆக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

அதாவது இது சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது; சீனாவில் மட்டுமே வாங்க கிடைக்கும். சுவாரசியமான விஷயம் என்னவென்றால் இது வெறுமனே ஒரு ஸ்பெஷல் எடிஷன் மட்டுமல்ல; கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 7-ஐ விட மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் மற்றும் சில முக்கிய வடிவமைப்பு மாற்றங்களையும் பெற்றுள்ளது.

புதுசா 1 பைக் வாங்கும் விலையில் Samsung W26 போன் அறிமுகம்!

சாம்சங் டபுள்யூ26 ஸ்மார்ட்போன் ஆனது இரண்டு கலர் ஆப்ஷன்களில் வருகிறது - சிவப்பு மற்றும் கருப்பு. இரண்டு கலர்களிலுமே கேமரா யூனிட்டில் கோல் ஃபிரேம் மற்றும் டிரிம் உள்ளது. இது ஒரு ஆடம்பரமான லுக்கை வழங்கும் டிசைனாக உள்ளது. இருப்பினும் அளவீடுகளில் மாற்றங்கள் இல்லை. இது இஸட் ஃபோல்ட் 7 மாடலை போலவே - 8.9 மிமீ தடிமன் மற்றும் 215 கிராம் எடையை கொண்டுள்ளது

இந்த டிசைன் மாற்றத்துடன் சேர்த்து சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் சாட்டிலைட் காலிங் மற்றும் மெசேஜிங் ஆதரவுடன் வருகிறது, இது அவசர காலங்களில் (நெட்வொர்க் இல்லாத இடங்களில் மற்றும் நெட்வொர்க் கிடைக்காத நேரத்தில்) பயனுள்ளதாக இருக்கும்.

அடுத்தபடியாக சாம்சங் டபுள்யூ26 மாடலானது இஸட் ஃபோல்ட் 7 மாடலில் உள்ள பேஸிக் 12ஜிபி ரேம்-க்கு பதிலாக 16ஜிபி ரேம் உடன் வருகிறது. இதுதவிர்த்து இவ்விரு ஸ்மார்ட்போன்களுக்கான ஸ்பெக் ஷீட்கள் ஒரே மாதிரியாகவே உள்ளன. அதாவது ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் மற்றும் 200 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா போன்றவைகள் இதிலும் உள்ளன.

சாம்சங் டபுள்யூ26 ஸ்மார்ட்போனின் விலை: சீனாவில் இது 16ஜிபி ரேம் உடனான 512ஜிபி மற்றும் 1டிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 512ஜிபி வேரியண்ட் ஆனது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ. 2,11,00க்கும், 1டிபி ஆப்ஷன் சுமார் ரூ.2,35,000 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

மேலும் சாம்சங் W26 உடன் நல்ல அன்-பாக்ஸிங் அனுபவமும் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் கெவ்லர் கேஸ் (Kevlar case), சார்ஜிங் கேபிள் (Charging cable) மற்றும் பவர் அடாப்டர் (Power adapter) உடன் வருகிறது. இப்போதெல்லாம் இவைகள் எல்லாமே நவீன ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் மிகவும் அரிதாகவே காணப்படுகிறது.

இந்தியாவில் வாங்க கிடைக்கும் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7 ஸ்மார்ட்போனின் விலை என்ன?
பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.1,74,999
12ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.1,86,999
ஹை-எண்ட் 16ஜிபி ரேம் + 1டிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.2,10,99

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 8 இன்ச் QXGA+ டைனமிக் AMOLED 2X இன்ஃபினிட்டி ஃப்ளெக்ஸ் டிஸ்பிளே
- 6.5 இன்ச் FHD+ டைனமிக் AMOLED 2X கவர் டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- 3 எக்ஸ்டர்னல் கேமரா யூனிட்

- குவாட் பிக்சல் ஆட்டோஃபோகஸ், ஓஐஎஸ் ஆதரவு மற்றும் 85-டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூவுடன் கூடிய 200எம்பி ப்ரைமரி சென்சார்
- 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா
- 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 10 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ சென்சார்
- கவர் டிஸ்பிளேவில் 10 மெகாபிக்சல் கேமரா
- இன்னர் ஸ்க்ரீனில் மற்றொரு 10 மெகாபிக்சல் கேமரா
- 25W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 4400mAh பேட்டரி

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung W26 Launched in China We Can Buy New Bike in India With This Smartphone Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X