நவம்பர் 9: மிரட்டலான சாம்சங் W2019 ஃப்ளிப் போன் அறிமுகம்.!
ஃப்ளிப் போன் சாதனத்தில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் வசதி மற்றும் 6ஜிபி ரேம் மற்றம் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் நிறுவனம் தொடர்ந்து புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகிறது, அந்தவரிசையில் புதிய தொழில்நுட்ப கொண்ட W2019 ஃப்ளிப் போன் மாடலை வரும் நவம்பர் 9-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

அதன்படி தென்கொரிய நிறுவனமான சாம்சங் சாங்காய் நகரில் நடைபெற உள்ள W2019 ஃப்ளிப் போன் அறிமுக நிகழ்ச்சிகான அழைப்புகளை விடுத்து வருகிறது என்பத குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனத்தில் சில அம்சங்கள்
ஆன்லைன்ல் வெளிவந்துள்ளது.

டிஸ்பிளே:
இந்த சாதனம் 4.2-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டு வெளிவரும், பின்பு 1080x1920 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிப்செட்:
W2019 ஃப்ளிப் போன் சாதனத்தில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் வசதி மற்றும் 6ஜிபி ரேம் மற்றம் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு
இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

கேமரா
இந்த போனில் 12எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா இடம்பெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதே சமயம் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்று அந்நிறுவனம்
சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேட்டரி:
W2019 ஃப்ளிப் போனில் 2300எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications