ஸ்னாப்டிராகன் 835 செயலியுடன் வெளிவரும் சாம்சங் ஃப்ளிப் போன்.!
இந்த ஃப்ளிப் போன் பொறுத்தவரை கைரேகை ஸ்கேனர் மற்றும் ஒற்றை கேமரா அமைப்புடன் வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த ஃப்ளிப் போனில் இடம்பெற்றுள்ளது.
ஃப்ளிப் போன் பொறுத்தவரை இப்போது கூட அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர், அந்தவகையில் இப்போது சாம்சங் நிறுவனம் புதிய பிளிப்போன் மாடலை அறிமுகப்படுத்த தயார் நிலையில் உள்ளது. சாம்சங் விரைவில் அறிமுகப்படுத்தும் டபள்யு2018 ஃபிளாக்ஷிப் ஃப்ளிப் போன் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.
டபள்யு2018 ஃபிளாக்ஷிப் ஃப்ளிப் போன் பற்றிய பல்வேறு தகவல்கள் மற்றும் புகைபடங்கள் இப்போது ஆன்லைனில் வெளிவந்துள்ளது. மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள்.

மெட்டல் வடிவமைப்பு:
இந்த டபள்யு2018 ஃபிளாக்ஷிப் ஃப்ளிப் போன் பொதுவாக மெட்டல் வடிவமைப்பு கொண்டவையாக உள்ளது, மேலும் ஸ்டைலான மற்றும் பிரீமியம் தோற்றத்தை கொடுக்கும்.

கைரேகை ஸ்கேனர்:
இந்த ஃப்ளிப் போன் பொறுத்தவரை கைரேகை ஸ்கேனர் மற்றும் ஒற்றை கேமரா அமைப்புடன் வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது,அதன்பின்பு பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த ஃப்ளிப் போனில் இடம்பெற்றுள்ளது.

ஸ்னாப்டிராகன் 835:
இக்கருவியில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக
கொண்டு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியர் கேமரா:
இந்த ஃப்ளிப் போன் ரியர் கேமரா 12மெகாபிக்சல் கொண்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

நினைவகம்:
இந்த டபள்யு2018 ஃபிளாக்ஷிப் ஃப்ளிப் போன் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

2300எம்ஏஎச்:
டபள்யு2018 ஃபிளாக்ஷிப் ஃப்ளிப் போனில் 2300எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications