இசையில் புதிய அவதாரம் எடுக்கும் சாம்சங் மொபைல்கள்!

ஸ்மார்ட் டியூவல் சிம் வசதியில் கலக்கும் இந்த புதிய குரு மியூசிக் மற்றும் குரு-1207 மொபைல்கள் சிறந்த தொழில் நுட்ப வசதிகளை கொடுக்கும். குரு மியூசிக் மொபைலில் சூப்பராக ஜிபிஆர்எஸ் வசதிக்கு சப்போர்ட் செய்யும். குரு மியூசிக் என்பதற்கேற்ப இந்த மொபைல், இனிமையான இசையை வழங்குவதில் சிறந்த நுட்பம் கொண்டதாக இருக்கும்.
இதில் பிரத்தியேகமாக மியூசிக் பட்டனும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எளிதாக மியூசிக் ஆப்ஷனில் நுழைந்து நொடியில் பாடல்களை கேட்க முடியும். அதே போல் சில சிறப்பான மியூசிக் வசதிகளுடன் குரு-1207 மொபைலும் உருவாக்கப்பட்டுள்ளது.
குரு மியூசிக் மொபைலில் உள்ள 1,000 எம்ஏஎச் பேட்டரியின் மூலம் 12 மணி நேரம் டாக் டைம் வசதியினையும், குரு-1207 மொபைலில் இருக்கும் 800 எம்ஏஎச் பேட்டரியின் மூலம் 8 மணி நேரம் டாக் டைமினையும் பெறலாம்.
சாம்சங் குரு மியூசிக் மொபைல் ரூ. 1,730 விலையினையும், சாம்சங் குரு-1207 மொபைல் ரூ. 1,250 விலையினையும் கொண்டதாக இருக்கும். இந்த செய்தியினை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications