7.3 இன்ச் டிஸ்பிளேவுடன் தெறிக்கவிடும் கேலக்ஸி மடிக்கும் ஸ்மார்ட்போன்.!
இந்நிலையில், 7.3இன்ச் இன்பினிட்டி பிளெக்ஸ் டிஸ்பிளேவுடன் கேலக்ஸி போல்டு மடிக்கக் கூடிய ஸ்மாரட்போனை அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை பார்க்கலாம்.
சாம்சங் நிறுவனத்தின் லேக்ஸி ஸ்மார்ட்போன்களுக்கு பெரும் வரவேற்பு இருக்கின்றது. மேலும் இந்த நிறுவனம் புதிய மாடல்களையும் அறிமுகம் செய்து வருகின்றதது. இது மற்ற நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள போட்டியை சமாளிக்கும் வகையில் இருக்கின்றது.

இந்நிலையில், 7.3இன்ச் இன்பினிட்டி பிளெக்ஸ் டிஸ்பிளேவுடன் கேலக்ஸி போல்டு மடிக்கக் கூடிய ஸ்மாரட்போனை அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை பார்க்கலாம்.

அறிமுகம் மற்றும் விளக்கம்:
சாம்சங் நிறுவனம் அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்ட மடிக்ககூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் எவ்வாறு காட்சியளிக்கும் என்பதை மட்டும் கடந்த ஆண்டு நம்பவரில் நடந்த டெவலப்பர்கள் நிகழ்வில் சாம்சங் காட்சிப்படுத்தியது.

இரண்டு டிஸ்பிளேக்கள்:
கேலக்ஸி போல்டு என அழைக்கப்டும் புதிய ஸ்மார்ட்போனில் 7.3இன்ச் மற்றும் 4.6 இன்ச் அளவுகளில் இரண்டு டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றிக்கு இரண்டு புறங்களிலும் இரண்டு பேட்டரிகள் வழங்கப்பட்டுள்ளது.

திரை அம்சம்:
சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 7.3இன்ச் இன்பினிட்டி பிளெக்ஸ் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இந்த திரையை நமது தேவைக்கு ஏற்ப மடித்துக் கொள்ளலாம். 7.3 இன்ச் மற்றும் 4.6 இன்ச் என்று மடிக்கும் திரையாக இருக்கின்றது.

கீல் வழங்கப்பட்டுள்ளது:
ஸ்மார்ட்போனை தேவைப்படும் போது மடித்து பயன்படுத்த ஏவதுவாக மிக கடினமான கீல் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போனின் முதுகெலும்பு போல் இருக்கின்றது.
கீல் தெரியாதபடி மிக நேரத்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது இதனால் ஸ்மார்ட்போன் பார்க்க அழகாக காட்சியளிக்கின்றது.

சிறப்பு அம்சம்:
12ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி, 16 எம்பி அல்டரா வைடு கேமரா எப்/2.2, 12 எ;பி வைடு ஆங்கிள் கேமரா, டூயல் சிம், 12எம்பி டெலிபோட்டே கேமரா, 10 எம்பி செல்பி கேமரா, ஆண்ட்ராய்டு பை, 4380 எம்ஏஹெச் பேட்டரி ( இரண்டு ) வழங்கப்பட்டுள்ளது.

கூகுள் இணைவு:
தனது ஸ்மார்ட்போன் செயலிகள் சீராக இயங்க வைக்க கூகுளுடன் இணைந்து பணியாற்றி இருக்கின்றது. மேலும் வாட்ஸ்ஆப், யூடியூப் மைக்ரோசாப்ட் ஆபீஸ் உள்ளிட்ட மடிக்ககூடிய ஸ்தார்ட்போனிகள் சீராக இயங்க வைக்க செயலிலகள் பிரத்யேகமாக ஆப்டிமைஸ் செய்யப்பட்டள்ளன.

கேலக்ஸி விலை:
இதன் விலை ரூ.1,41,300 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஏப்ரல் 26ம் தேதி முதல் விற்பனைக்கு வருகின்றது.

புதிய கேலக்ஸி போல்டு :
கிரீன், புளு, சில்வர் மற்றும் பிளாக் என நான்கு வித நிறங்களில் கிடைக்கின்றது 5ஜி வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் என சாம்சங் அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications