Home
Mobile

வெயிடிங்லயே வெறி ஏத்தும் இந்த Samsung போன்.. வெறும் 2 நாடுகளில் மட்டுமே அறிமுகம் ஆகுமாம்.. எந்த மாடல்?

கடைசியாக நடந்த கேலக்ஸி அன்பேக்டு 2025 நிகழ்வில், சாம்சங் (Samsung) நிறுவனமானது ஒரு மல்டி-ஃபோல்டு ஸ்மார்ட்போனில் (Multi Fold) வேலை செய்வதை பற்றி வெளிப்படையாகவே பேசி இருந்தது. அறியாதோர்களுக்கு இரண்டு டிஸ்பிளேக்களை கொண்ட ஸ்மார்ட்போன் ஃபோல்ட் ஸ்மார்ட்போனாகும்; இரண்டிற்கும் மேற்பட்ட டிஸ்பிளேக்களை கொண்ட ஸ்மார்ட்போன் மல்டி-ஃபோல்டுஸ்மார்ட்போனாகும்.

உலகளவில், ஃபோல்ட் ஆகக்க்கூடிய ஸ்மார்ட்போன்களை பெருமளவில் உற்பத்தி செய்யும் ஒரே ஸ்மார்ட்போன் பிராண்டான சாம்சங், மல்டி-ஃபோல்டு ஸ்மார்ட்போன் சந்தையிலும் - ஒரு சிறப்பான டிவைஸ்-ஐ அறிமுகப்படுத்தும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். இதற்கிடையில் ஸ்மார்ட்பிரிக்ஸ் வழியாக கிடைத்துள்ள சமீபத்திய அறிக்கையின்படி, சாம்சங்கிலிருந்து வரவிருக்கும் இந்த ட்ரை-ஃபோல்டு ஸ்மார்ட்போன் 6 முதல் 7 மாதங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறுகிறது.

இந்த Samsung போன் 2 நாடுகளில் மட்டுமே அறிமுகம் ஆகுமாம்!

ஆனால் இது உலகளாவிய அறிமுகத்தை காணாதாம். மாறாக சாம்சங் நிறுவனத்தின் சொந்த சந்தையான தென்கொரியா மற்றும் சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்படும் என்கிற தகவல் கிடைத்துள்ளது. சாம்சங் நிறுவனம் வெறும் 2 சந்தைகளில் மட்டுமே அதன் ட்ரை-ஃபோல்ட் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துவதை பார்ப்பது சற்று ஏமாற்றமளிக்கிறது. இந்த இடத்தில் ஹவாய் நிறுவனம் அதன் மேட் எக்ஸ்டி அல்டிமேட் (Huawei Mate XT Ultimate) ஸ்மார்ட்போனை உலகளாவில் அறிமுகம் செய்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஹூவாய் மேட் எக்ஸ்டி அல்டிமேட் டிசைன் ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: டூயல் சிம் (நானோ + நானோ) ஆதரவுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் ஹார்மனிஓஎஸ் 4.2 அவுட்-ஆஃப்-தி-பாக்ஸில் இயங்குகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை இது மொத்தம் 3 டிஸ்பிளேக்களை கொண்டுள்ளது. முழுமையாக விரித்தால் இது 10.2-இன்ச் (3184 x 2232 பிக்சல்கள்) பிலெக்ஸிபிள் LTPO OLED டிஸ்பிலேவாக இருக்கும்.

அதை ஒருமுறை மடித்தால் 7.9-இன்ச் (2048 x 2232 பிக்சல்கள்) டிஸ்பிளேவாக மாறும். இரண்டாவது முறை மடித்தால் இது 6.4-இன்ச் திரை (10328 x 22308 x 2232, பிக்சல்கள்) டிஸ்பிளேவாக மாறும். ஹூவாய் மேட் எக்ஸ்டி அல்டிமேட் டிசைன் ஸ்மார்ட்போன் ஆனது எந்த சிப்செட் கொண்டு இயக்கப்படுகிறது என்கிற விவரங்களை ஹூவாய் இன்னும் வெளிப்படுத்தவில்லை. ஆனால் அது 16ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இன்டர்னல் ஸ்டோரேஜை பொறுத்தவரை, இது 256GB, 512GB மற்றும் 1TB என மொத்தம் 3 வகைகளில் கிடைக்கும்.

கேமராக்களை பொறுத்தவரை, வெளிப்புறத்தில், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS - optical image stabilization) கொண்ட 50-மெகாபிக்சல் கேமரா உள்ளது. இது 12-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா (Ultra-wide camera) மற்றும் 12-மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவையும் (Periscope Telephoto camera) கொண்டுள்ளது. செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்காக ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவில் 8 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை, இது 5ஜி, 4ஜி LTE, வைஃபை 6, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது. பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் (Fingerprint Scanner) உள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை, இது 66W வயர்டு சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,600mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. கடைசியாக, அளவீடுகளில் இது சிங்கிள் ஸ்க்ரீனின் போது 156.7x73x12.8மிமீ, டபுள் ஸ்க்ரீனின் போது 156.7x143x7.45மிமீ மற்றும் ட்ரிபிள் ஸ்க்ரீனின் போது 156.7x219x3.6மிமீ உள்ளது. எடையை பொறுத்தவரை 298 கிராம் உள்ளது.

ஹூவாய் மேட் எக்ஸ்டி அல்டிமேட் டிசைன் ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்: இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 16ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது CNY 19,999 க்கு (அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.2,35,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் 512ஜிபி மற்றும் 1டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்களிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அவற்றின் விலை முறையே CNY 21,999 (தோராயமாக ரூ.2,59,500) மற்றும் CNY 23,999 (தோராயமாக ரூ.2,83,100) ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Tri Fold Phone to Launch in 6 to 7 Months Available Only in Two Countries Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X