20 பட்ஜெட் போன்கள் வாங்கும் விலை.. 3 டிஸ்பிளே கொண்ட Samsung-ன் முதல் Tri-Fold ஸ்மார்ட்போன்!
சாம்சங் (Samsung) நிறுவனத்தின் தீவீர ரசிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை பார்த்து "கண்ணா 4வது லட்டு சாப்பிடணுமா!" என்று கேட்கும்படியான ஒரு தகவல் வெளியாகி உள்ளது. வருகிற ஜூலை 9 ஆம் தேதி அன்று சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வை நடத்தவுள்ளது என்பது பலருக்கும் தெரிந்த விஷயமே!
இந்நிகழ்வில் சாம்சங் கேலக்ஸி இஸட் போல்ட் 7 (Samsung Galaxy Z Fold 7), சாம்சங் கேலக்ஸி இஸட் பிளிப் 7 (Samsung Galaxy Z Flip 7), சாம்சங் கேலக்ஸி இஸட் பிளிப் 7 எப்இ (Samsung Galaxy Z Flip 7) ஆகிய 3 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது (முதல் 2 மாடல்கள் நிச்சயமாக அறிமுகமாகும்).

இதற்கிடையில் ஜூலை 9 நடக்கும் வெளியீட்டு நிகழ்வில் - சாம்சங் நிறுவனத்தின் முதல் ட்ரை-ஃபோல்ட் ஸ்மார்ட்போனும் (Samsung First Tri-fold Smartphone) அறிமுகம் செய்யப்படலாம் என்று ஒரு டிப்ஸ்டர் (Instant Digital) தெரிவித்துள்ளார். சாம்சங் அதன் ட்ரை-ஃபோல்ட் ஸ்மார்ட்போனை வெளியிட்டாலும் கூட அது இந்த ஆண்டின் பிற்பகுதியில் தான் வாங்க கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
வணிக ரீதியாகக் கிடைக்கும் முதல் ட்ரை-ஃபோல்ட் ஸ்மார்ட்போன் ஆக ஹவாய் மேட் எக்ஸ்டி அல்டிமேட் (Huawei Mate XT Ultimate) அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வருடம் கழித்து, சாம்சங் நிறுவனம் அதன் முதல் ட்ரை-ஃபோல்ட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது
சாம்சங் நிறுவனத்தின் முதல் ட்ரை-ஃபோல்ட் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம் (Samsung Tri-fold Phone Specifications Expected)? நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான @PandaFlashPro, இது அனைத்து சந்தைகளிலும் டைட்டானியம் பிரேம் மற்றும் ஸ்னாப்டிராகன் ஃபிளாக்ஷிப் சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்பட்டாலும் கூட "பொதுவாக எதிர்பார்க்கப்படும்" ஒரு அம்சம் இதில் இடம்பெறலாம் போகலாம் என்கிறார்.
பாண்டா பிளாஷ் ப்ரோவின் கூற்றுப்படி, சாம்சங்கின் முதல் ட்ரை-ஃபோல்டு போன் ஆனது ஃப்ரேம் மற்றும் சேசிஸுக்கு டைட்டானியம் மற்றும் அலுமினியத்தின் கலவையைப் பயன்படுத்தும். இந்த கலவை நீடித்துழைக்கும் தன்மையை மேம்படுத்த வேண்டும். இது பெரிய அளவில் உள்ள போல்டபிள் டிவைஸ்களுக்கான ஒரு முக்கிய கவலையாகும்.

சிப்செட்டை பொறுத்தவரை சாம்சங் ட்ரை-ஃபோல்ட் ஸ்மார்ட்போன் ஆனது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 எலைட் மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது கேலக்ஸி எஸ்25 சீரீஸிக் காணப்படும் அதே ஃபிளாக்ஷிப் சிப் ஆகும். இது 16 ஜிபி LPDDR5X ரேம் உடன் இணைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது
சாம்சங் ட்ரை-ஃபோல்ட் ஸ்மார்ட்போனில் என்ன அம்சம் இடம்பெறாமல் போகலாம்? இந்த ஸ்மார்ட்போனில் அண்டர்-டிஸ்ப்ளே கேமரா (UDC) இடம்பெறாமல் போகலாம். அதற்கு பதிலாக, இந்த ஸ்மார்ட்போனில் 12MP சென்சார் கொண்ட பஞ்ச்-ஹோல் கேமரா பேக் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் ட்ரை-ஃபோல்ட் ஸ்மார்ட்போனின் பேட்டரி குறித்த விவரங்கள் இன்னும் மறைக்கப்பட்டுள்ளன. ஆனால் ஆரம்பத்தில் வெளியான தகவல்கள், இதில் புதிய சிலிக்கான்-கார்பன் செல் அல்லது இன்னும் உருவாக்கத்தில் சாலிட் ஸ்டேட் பேட்டரி பயன்படுத்தப்படலாம். இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி கெப்பாசிட்டி சுமார் 4,400mAh ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விலையை (Samsung Tri-fold Phone Price) பொறுத்தவரை.. சாம்சங் ட்ரை-ஃபோல்ட் ஸ்மார்ட்போன் ஆனது சுமார் $2,800 க்கு, அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.2,39,400 க்கு அறிமுகம் செய்யப்படலாம். மீதமுள்ள விவரங்கள் ஜூலை 9 ஆம் தேதியன்று அதன் கேலக்ஸி அன்பேக்டு 2025 நிகழ்வில் அறிவிக்கப்படலாம். இந்த நிகழ்வு ஜூலை 9 ஆம் தேதி அன்று இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு தொடங்கும். இது சாம்சங்கின் யூட்யூப் சேனல், சாம்சங்.காம் (Samsung.com) மற்றும் சாம்சங் நியூஸ்ரூம் வழியாக நேரடியாக ஒளிபரப்பப்படும்.


Click it and Unblock the Notifications