Home
Mobile

பத்தல பத்தல.. இன்னும் கருப்பா வேணும்.. Samsung அறிவித்துள்ள புதிய கலர் ஆப்ஷன்.. எந்த மாடலுக்கு?

சாம்சங் (Samsung) நிறுவனம் கடந்த ஜனவரி 2025 இல் அதன் கேலக்ஸி எஸ்25 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை உலகளவில் அறிமுகம் செய்திருந்தது. கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களுக்கு பிறகு சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா (Galaxy S25 Ultra) மாடலுக்கான புதிய கலர் ஆப்ஷனை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது போல் தெரிகிறது.

சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனிற்கான ஒரு புதிய டார்க் கலர் ஆப்ஷனை (New Dark Color Option) உருவாக்கி வருவதாக, எக்ஸ் தளம் வழியாக டீஸ் செய்துள்ளது. இதுகுறித்த எக்ஸ் தள பதிவில் தென் கொரிய தொழில்நுட்ப சாம்சங், பளபளப்பான தோற்றம் மற்றும் கருப்பு வண்ணத்திலான தயாரிப்புகளின் தொகுப்பை ஷேர் செய்துள்ளது. மேலும் "சிறிது புதிய பாணியை தழுவ தயாராகுங்கள்!" என்றும் குறிப்பிட்டுள்ளது.

Samsung அறிவித்துள்ள புதிய கலர் ஆப்ஷன்.. எந்த மாடலுக்கு?

சாம்சங் நிறுவனம் ஏற்கனவே கேலக்ஸ் எஸ்25 அல்ட்ராவை டைட்டானியம் பிளாக் கலர் ஆப்ஷனில் விற்பனை செய்கிறது. ஆகையால் வரவிருக்கும் புதிய டார்க் கலர் ஆப்ஷன் ஆனது இன்னும் டார்க் ஆன பிளாக் கலரையும் மற்றும் பேக் பேனலில் பளபளப்பான பூச்சையும் கொண்டிருக்க அதிக வாய்ப்புள்ளது.

நினைவூட்டும் வண்ணம் சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது டைட்டானியம் சில்வர், டைட்டானியம் கிரே, டைட்டானியம் சில்வர் ப்ளூ, டைட்டானியம் ஜெட் பிளாக், டைட்டானியம் ஜேட் கிரீன், டைட்டானியம் பிங்க் கோல்ட் மற்றும் டைட்டானியம் வைட் சில்வர் ஆகிய கலர்களில் அறிமுகம் செய்யப்பட்டு, வாங்க கிடைக்கிறது.

துரதிர்ஷ்டவசமாக, எஸ்25 அல்ட்ராவின் இந்த புதிய டார்க் கலர் ஆப்ஷன் எப்படி இருக்கும் அல்லது இது எப்படி அழைக்கப்படும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. ஆனால் விரைவில் மேலும் பல புதிய டீஸர்கள் அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கலாம். அதுமட்டுமின்றி - புதிய கலர் ஆப்ஷனை தவிர்த்து எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் அம்சங்களில் எந்த மாற்றமும் இருக்காது.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் இந்திய விலை விவரங்கள்: பேஸிக் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ரூ.1,29,999 க்கும், 12ஜிபி ரேம் + 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ரூ.1,41,999 க்கும் மற்றும் ஹை-எஎண்ட் 12ஜிபி ரேம் + 1 டிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ரூ.1,65,999 க்கும் வாங்க கிடைக்கிறது.

முன்னரே குறிப்பிட்டபடி கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது டைட்டானியம் பிளாக், டைட்டானியம் க்ரே, டைட்டானியம் சில்வர்ப்ளூ மற்றும் டைட்டானியம் ஒயிட்சில்வர் என்கிற 4 கலர்களில் வாங்க கிடைக்கும். சாம்சங் இணையதளத்தில் இருந்து பிரத்தியேகமான டைட்டானியம் ஜேட்க்ரீன், டைட்டானியம் ஜெட்பிளாக் மற்றும் டைட்டானியம் பிங்க்கோல்ட் கலர்களில் வாங்க கிடைக்கும்.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: பெரிய 6.9 இன்ச் டிஸ்ப்ளே, எஸ் பென் சப்போர்ட், டைட்டானியம் பில்ட் மற்றும் கார்னிங்கின் கொரில்லா ஆர்மர் 2 பாதுகாப்பு, 5000mAh பேட்டரி, 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி, 512 ஜிபி மற்றும் 1 டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள், 200 மெகாபிக்சல் பிரைமரி சென்சார்.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 ஸ்மார்ட்போனின் இந்திய விலை விவரங்கள்: பேஸிக் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ரூ.80,999 க்கும், 12 ஜிபி ரேம் +512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.92,999 க்கும் வாங்க கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: 6.2-இன்ச் டிஸ்ப்ளே, 12 ஜிபி ரேம், 256 ஜிபி மற்றும் 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், மிதமான பயன்பாட்டின் கீழ் ஒரு நாள் முழுவதும் நீடிக்கும் 4,000mAh பேட்டரி, முன் மற்றும் பின் இரண்டிலும் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரொடெக்ஷன்.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 பிளஸ் ஸ்மார்ட்போனின் இந்திய விலை விவரங்கள்: பேஸிக் 12 ஜிபி ரேம் +256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.99,999 க்கும் மற்றும் 12 ஜிபி ரேம் +512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ரூ.1,11,999 க்கும் வாங்க கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 பிளஸ் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: 6.7-இன்ச் டிஸ்பிளே, 4,900mAh பேட்டரி, 12ஜிபி ரேம் மற்றும் 256GB மற்றும் 512GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள், வெண்ணிலா எஸ்25 மாடலில் உள்ளதை போலவே 50 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் + 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 10 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 12 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung To Launch New Dark Color Option of Galaxy S25 Ultra Soon in India Check Out Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X