Samsung பின்னுறானே.. டபுள் கிளாஸ் டிஸ்பிளே உடன் புதிய போன்.. என்ன யூஸ்? எந்த மாடல்?
சாம்சங் (Samsung) நிறுவனமானது.. இந்த 2026 ஆம் ஆண்டில் "சில தரமான சிறப்பான சம்பவங்களை செய்ய உள்ளது" என்பது குறித்த தகவல்கள் நாளுக்கு நாள் வெளியாகி கொண்டே இருக்கிறது. முன்னதாக எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு இல்லை என்பதற்காக அதன் அடுத்த அல்ட்ரா ஸ்லிம் ஸ்மார்ட்போன் ஆன - கேலக்ஸி எஸ்26 எட்ஜ் மாடலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
அதாவது கேலக்ஸி எஸ்25 எட்ஜ் மாடலுக்கு அடுத்தபடியாக கேலக்ஸி எஸ்26 எட்ஜ் மாடல் இந்தாண்டு வராது என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் நேற்று சாம்சங் கேலக்ஸி எஸ்26 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் அனைத்து முக்கிய அம்சங்களும் ஆன்லைனில் லீக் ஆகி இருந்தது. இன்று சாம்சங் நிறுவனம் டபுள் கிளாஸ் டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த "புதிய" டிஸ்பிளே - சாம்சங் நிறுவனத்தின் அடுத்த போல்டபிள் ஸ்மார்ட்போனில் இடம்பெறவுள்ளது. அது சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 8 (Samsung Galaxy Z Fold 8) ஸ்மார்ட்போன் ஆகும். 2026 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்மார்ட்போனில் டூயல் அல்ட்ரா-தின் கிளாஸ் (UTG) ஓஎல்இடி பேனல் இடம்பெறலாம்என்று தொழில்துறை அறிக்கைகள் தெரிவிக்கின்றன
இந்த டிஸ்பிளே - போல்ட் சீரீஸில் உருவாகும் புலப்படும் மடிப்பை குறைப்பதை நோக்கமாக கொண்ட ஒரு மாற்றமாகும். டீல்சைட் வழியாக கிடைத்துள்ள அறிக்கையின்படி, சாம்சங் ஒரு போல்டபிள் ஓஎல்இடி பேனலை உருவாக்கி வருகிறது, இது டிஸ்பிளே அடுக்கின் இருபுறமும் அல்ட்ரா-தின் கிளாஸ் அடுக்குகளை வைக்கிறது.
தற்போதைய போல்டபிள் ஸ்மார்ட்போன்கள் பொதுவாக டாப் கவர் விண்டோவில் சிங்கிள் அல்ட்ரா தின் கிளாஸ் அடுக்கை நம்பியுள்ளன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஓஎல்இடி பேனலுக்கு அடியில் இரண்டாவது அடுக்கை சேர்ப்பதன் மூலம் ஸ்மார்ட்போனை மடிக்கும்போது - அதற்கான அழுத்தம் ஆனது இன்னும் சமமாக விநியோகிக்கப்படும்.
எக்ஸ் தளம் வழியாக, நன்கு அறியப்பட்ட டிப்ஸ்டர் கேஜெட்ஸ் டேட்டா (Gadgetsdata) வழியாக கிடைத்த தகவலின்படி - கேலக்ஸி எஸ்26 ஸ்மார்ட்போன் ஆனது LTPO தொழில்நுட்பத்துடன் கூடிய சிறிய 6.3-இன்ச் எம்14 AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், FHD+ ரெசல்யூஷன் மற்றும் HDR10+ ஆதரவுடன் வரும் என்றும் கூறப்படுகிறது.
மறுகையில் உள்ள கேலக்ஸி எஸ்26 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 120Hz ரெஃப்ரெஷ் ரேட், HDR10+ ஆதரவு உடனான பெரிய 6.7-இன்ச் எம்14 AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். இது 2கே ரெசல்யூஷன் உடன் வருமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இத கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரொடெக்ஷனையும் பெறலாம். மேலும் இந்த இரண்டு மாடல்களும் நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான IP68 ரேட்டிங்கை தக்கவைத்து கொள்ளலாம்.
சிப்செட்டை பொறுத்தவரை சாம்சங்கின் அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் ஆனது எக்ஸினோஸ் 2600 அல்லது ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 ஆல் இயக்கப்படும் என்று டிப்ஸ்டர் நம்புகிறார். நினைவூட்டும் வண்ணம் சாம்சங் நிறுவனம் ஆனது ஸ்னாப்டிராகன் மாறுபாட்டை அமெரிக்கா மற்றும் சீனா போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் வெளியிடுகிறது, அதே நேரத்தில் உலகின் பிற பகுதிகள் எக்ஸினோஸ் வெர்ஷனை வெளியிடுகிறது
கேமராக்களை பொறுத்தவரை கேலக்ஸி எஸ்26 மற்றும் கேலக்ஸி எஸ்26 பிளஸ் ஆகிய இரண்டுமே 50எம்பி (மெயின்) + 12எம்பி (அல்ட்ரா வைட்) + 50எம்பி (டெலிஃபோட்டோ) கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கலாம். பேட்டரியை பொறுத்தவரை 4300mAh பேட்டரியை பேக் செய்யலாம். இது 25W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கலாம்; கேலக்ஸி எஸ்26 பிளஸ் ஆனது 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் பெரிய 4,900mAh பேட்டரியை கொண்டிருக்கலாம்.


Click it and Unblock the Notifications








