ஆஹா! இந்த மேட்டர் தெரிஞ்சா.. Samsung லவ்வர்களை கையில் பிடிக்க முடியாதே!

|

7, 8 ஸ்மார்ட்போன்களை பார்த்து விட்டு.. "எதுக்குப்பா வம்பு.. வழக்கம் போல சாம்சங் ஸ்மார்ட்போனையே வாங்கிடலாம் - என்கிற முடிவுக்கு வரும் வாடிக்கையாளர்களை, சாம்சங் லவ்வர்ஸ் (Samsung Lovers) என்று கூறுவதில் எந்த தவறும் இல்லை!

ஏனென்றால், சமீபத்தில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தைக்குள் நுழைந்த நத்திங் (Nothing) தொடங்கி.. அதற்கு முன் வந்த ரியல்மி, ஒன்பிளஸ் போன்ற பல நிறுவனங்களை 'அசால்ட்' ஆக ஓரங்கட்டும் அளவிலான "புகழ்" மற்றும் Smartphone-கள் சாம்சங் நிறுவனத்திடம் உண்டு!

சாம்சங்கில்

சாம்சங்கில் "சேரும்" புது சமாச்சாரம்!

"சாம்சங் ஸ்மார்ட்போன்கள் தான் பெஸ்ட்டு" என்று கூறுவதற்கு ஏற்கனவே நிறைய காரணங்கள் இருக்கும் நிலைப்பாட்டில், தற்போது ஒரு புதிய தொழில்நுட்பம் சாம்சங் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்பட உள்ளது.

இது சாம்சங் லவ்வர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை அளிக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்! அதென்ன தொழில்நுட்பம்? அது எப்போது, எந்த ஸ்மார்ட்போனில் அறிமுகமாகும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

வெறும் ரூ.12,499-க்கு இப்படி ஒரு Samsung TV-ஆ! 2 வாங்கலாம் போலயே!வெறும் ரூ.12,499-க்கு இப்படி ஒரு Samsung TV-ஆ! 2 வாங்கலாம் போலயே!

அதென்ன தொழில்நுட்பம்?

அதென்ன தொழில்நுட்பம்?

சாம்சங் நிறுவனத்தின் ஒரு புதிய காப்புரிமை ஆனது, கொரியா இன்டெலெக்சுவல் ப்ராப்பெர்ட்டி ரைட்ஸ் இன்பர்மேஷன் சர்வீசால் (Korea Intellectual Property Rights Information Service - KIPRIS) அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

காப்புரிமை பெற்றுள்ள சாம்சங்கின் புதிய தொழில்நுட்பமானது, டூயல் அண்டர் டிஸ்பிளே கேமரா (Under Display Camera - UDC) செட்டப்பை பயன்படுத்தி, ஸ்மார்ட்போன்களின் பாதுகாப்பு (Safety) மற்றும் ஃபேஷியல் ரிகக்நேஷன் (Facial recognition) மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.

இந்த தொழில்நுட்பம் எப்படி வேலை செய்யும்?

இந்த தொழில்நுட்பம் எப்படி வேலை செய்யும்?

சாம்சங் ஸ்மார்ட்போன்களில் உள்ள ஃபேஷியல் ரிகக்நேஷனை மேம்படுத்த, இந்த தொழில்நுட்பம், டூயல்-யுடிசி செட்டப்பை பயன்படுத்தி யூசரின் முகத்தை ஒரே நேரத்தில், வெவ்வேறு கோணங்களில் ஸ்கேன் செய்யும்.

அதாவது இந்த தொழில்நுட்பம் இது 3டி (முப்பரிமாணம்) அல்லது ஸ்டீரியோஸ்கோபிக் ஸ்கேனுக்கு உதவும்; இறுதியில் அது பயோ-வெரிஃபிகேஷன் சிஸ்டமை (Bio-verification System) மேம்படுத்த உதவும்.!

5G கட்டணம்: அக்.1 முதல் ஒவ்வொரு ரீசார்ஜ்-க்கும் எவ்வளவு செலவு ஆகும்?5G கட்டணம்: அக்.1 முதல் ஒவ்வொரு ரீசார்ஜ்-க்கும் எவ்வளவு செலவு ஆகும்?

இந்த தொழில்நுட்பம் எந்த ஸ்மார்ட்போனுடன் வரும்?

இந்த தொழில்நுட்பம் எந்த ஸ்மார்ட்போனுடன் வரும்?

சாம்சங் நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த புதிய ஃபேஷியல் ரிகக்நேஷன் தொழில்நுட்பமானது "செயல்பாட்டில்" தான் உள்ளது.

ஆக இதை வரவிருக்கும் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களான Galaxy S23 சீரீஸில் எதிர்பார்க்க முடியாது. ஆனால், அதற்கு பின் வெளியாகும் ஹை-எண்ட் சாம்சங் ஸ்மார்ட்போன்களில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது!

மனித கண்களுக்கு தெரியாத கேமரா!

மனித கண்களுக்கு தெரியாத கேமரா!

தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங், அதன் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 ஸ்மார்ட்போனில் தான் 4எம்பி அண்டர் டிஸ்ப்ளே கேமராவை முதன்முறையாக பயன்படுத்தியது.

இருந்தாலும், இந்நிறுவனம், கேலக்ஸி இசட் ஃபோல்ட் 4-இல் அந்த கேமராவை மேம்படுத்தவில்லை, ஆனால். மனித கண்களுக்கு தெரியாதபடி அதை இன்னும் சிறப்பாக மறைத்திருந்தது.

விலை குறைக்கலாம்! அதுக்காக இப்படியா? Amazon ஆபர் மழையில் 4 Samsung போன்கள்!விலை குறைக்கலாம்! அதுக்காக இப்படியா? Amazon ஆபர் மழையில் 4 Samsung போன்கள்!

ஆப்பிளும் இதே போன்ற ஒரு வேலையை செய்துள்ளது!

ஆப்பிளும் இதே போன்ற ஒரு வேலையை செய்துள்ளது!

இதேபோல. சமீபத்தில் அறிமுகமான ஆப்பிள் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஐபோன் 14 ப்ரோ சீரீஸில், டிஸ்பிளே கட்அவுட்களை "மறைக்க" டைனமிக் ஐலேண்ட் (Dynamic Island) என்ற "சாஃப்ட்வேர் வித்தை" பயன்படுத்தப்பட்டு இருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆப்பிளின் இந்த Dynamic Island ஆனது, ஐபோன் ப்ரோ மாடல்களில் அணுக கிடைக்கும் மிக முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்றாகும். இது பயனர்களை மட்டுமின்றி, டெவலப்பர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதெல்லாம் இருக்கட்டும்... Galaxy S23 சீரீஸ் எப்போது அறிமுகமாகும்?

இதெல்லாம் இருக்கட்டும்... Galaxy S23 சீரீஸ் எப்போது அறிமுகமாகும்?

கடந்த பல ஆண்டுகளாகவே, சாம்சங் தனது புதிய கேலக்ஸி எஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை ஒவ்வொரு ஆண்டின் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதங்களில் தான் அறிமுகம் செய்கிறது.

அதை அடிப்படையாக கொண்டு பார்த்தால், வருகிற 2023 ஆம் ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரியில் எஸ்23 சீரீஸ் அறிமுகமாகும்.

அலெர்ட்! Jio, Airtel-ஐ விட்டு.. திடீர்னு கொத்து கொத்தாக வெளியேறும் மக்கள்! ஏன்?அலெர்ட்! Jio, Airtel-ஐ விட்டு.. திடீர்னு கொத்து கொத்தாக வெளியேறும் மக்கள்! ஏன்?

கேலக்ஸி எஸ்23 அல்ட்ராவின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்?

கேலக்ஸி எஸ்23 அல்ட்ராவின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்?

சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா மாடலானது, தற்போதைய எஸ்22 அல்ட்ராவை போன்ற விலை நிர்ணயத்தையே பெறலாம். அதாவது ரூ.1,09,999 என்கிற விலையை சுற்றி எங்காவது ஒரு இடத்தில் அமரலாம்.

Best Mobiles in India

English summary
Samsung To Improve Smartphone Safety Using Dual Under Display Camera Facial Recognition

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X