Home
Mobile

எல்லா 'ஜி'யிலும் கலக்கும் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்!

By Super

எல்லா 'ஜி'யிலும் கலக்கும் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்!
கேலக்ஸி வரிசையில் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு, மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற சாம்சங் நிறுவனம் இப்போது சாம்சங் டிக்கல் என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

நவீன சவுகரியங்களை தொழில் நுட்பத்தில் கொடுக்கும் நிறுனங்களிடம் இருந்து வாடிக்கையாளர்கள் எப்போதும் புதுமையை எதிர் நோக்கிக் கொண்டே தான் இருப்பார்கள். அதன் அடிப்படையில் இந்த புதிய ஸ்மார்ட்போனில் என்ன புதுமை என்பதையும் பார்ப்போம்.

ஜிகாஹெர்ட்ஸ் சிங்கிள் கோர் கியூவல்காம் ஸ்னாப்டிராகன் எம்எஸ்எம்8665 பிராசஸருடன் உருவாக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போனில் எல்லோரும் எதிர்பார்க்கும் கூகுள் ஆன்டராய்டு 2.3.7 ஆப்பேரட்டிங் சிஸ்டத்தினை பெறலாம்.

ஸ்மார்ட்போன்கள் என்றாலே கொஞ்சம் விலை அதிகம் தான். ஆனால் கையில் ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் போதும் வேறென்ன வேண்டும் என்று தைரியமாக கேட்டும் அளவு நவீன தொழில் நுட்ப வசதிகளை பெற முடியும் என்பதும் உண்மை தான்.

உடனுக்குடன் புகைப்படங்களை அப்லோட் செய்யும் வழிமுறைகள் இன்று ஃபேஸ்புக் மாதிரியான எல்லா சோஷியல் மீடியாக்களிலும் உள்ளது.

சாம்சங் டிக்கல் மாதிரியான ஒரு ஜோரான கேமரா வசதி கொண்ட ஸ்மார்ட்போன் இருந்தால், எந்த தருணத்திலும் மனசுக்கு பட்டுன்னு தோன்றுகிற விஷயத்தை டக்குன்னு க்ளிக் செய்யலாம். அப்படி படபட ஃபிளாஷ்களை கொடுக்க இந்த 3.2 மெகா பிக்ஸல் கேமரா மட்டும் இல்லாமல் 1.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவையும் இந்த ஸ்மார்ட்போன் வழங்கும்.

ஜிபிஆர்எஸ், எட்ஜ் போன்ற தொழில் நுட்பமும் இதில் உள்ளதால் பிரவுசிங் தொழில் நுட்பத்தினை எளிதாக பெறலாம். 2ஜி, 3ஜி, 4ஜி போன்ற நெட்வொர்க் சவுகரியத்தினையும் சேர்த்து சாம்சங் டிக்கால் ஸ்மார்ட்போன் கொடுக்கும்.

நெட்வொர்க்குகளுக்கு சப்போர்ட் செய்யும் அளவிற்கு பேட்டரி தறம் கைகொடுக்க வேண்டும் என்பது அடுத்த மிக முக்கியமான இடத்தில் இருக்கிறது. இதில் வழங்க இருக்கும் லித்தியம்-அயான் பேட்டரி நிச்சயம், இந்த ஸ்மார்ட்போனில் இருக்கும் மற்ற தொழில் நுட்பங்களுக்கு சிறப்பாக துணை புரியும்.

இந்த ஸ்மார்ட்போனை ரூ.10,000 விலை கொண்டதாக இருக்கும். இந்த ஆண்டு ஜுன் மாதம் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகும் என்று

எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X