Home
Mobile

வந்துட்டான்.. A-சீரீஸின் கீழ் புதிய Samsung 5ஜி ஸ்மார்ட்போன்.. அப்போ மிட்-ரேன்ஜ் மார்க்கெட்டும் காலி-ஆ!

சாம்சங் நிறுவனம் ஒரே நேரத்தில் அதன் பிளாக்ஷிப் போன்களின் மீது மட்டுமின்றி மிட்-ரேன்ஜ் மாடல்கள் மீதும் கவனம் செலுத்துவது போல் தெரிகிறது. இந்நிறுவனத்தின் நெக்ஸ்ட் ஜெனரேஷன் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் ஆன கேலக்ஸி எஸ்26 சீரீஸின் அறிமுகம் மற்றும் அம்சங்கள் குறித்த விவரங்கள் லீக் ஆன வேகத்தில்.. சாம்சங்கின் அடுத்த புதிய ஏ-சீரிஸ் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களும் லீக் ஆகியுள்ளன.

அது சாம்சங் கேலக்ஸி ஏ37 (Samsung Galaxy A37) ஸ்மார்ட்போன் ஆகும். இது சாம்சங்கின் இன்டர்னல் டெஸ்ட் சர்வர்களில் தோன்றியுள்ளது. இது சாம்சங் நிறுவனம் அதன் ஏ37 மாடலின் அறிமுகத்திற்கு தயாராகி வருவதை குறிக்கிறது. ஆனால் இது சாம்சங் கேலக்ஸி ஏ37 மாடலின் எந்த அம்சங்களையும் வெளிப்படுத்தவில்லை.

வந்துட்டான்.. A-சீரீஸின் கீழ் புதிய Samsung 5ஜி ஸ்மார்ட்போன்!

மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்கள் மத்தியில் கடுமையான போட்டிகள் நிலவுவதால் நிச்சயம் இது முன்னதாக வந்த ஏ36 உடன் ஒப்பிடும் போது நல்ல மேம்பாடுகளை பெறும். நினைவூட்டும் வண்ணம் கேலக்ஸி ஏ36 5ஜி ஸ்மார்ட்போனானது கேலக்ஸி ஏ56 5ஜி உடன் சேர்த்து கடந்த 2025 மார்ச் மாதத்தில் இந்தியாவில் அறிமுகமானது.

நினைவூட்டும் வண்ணம் சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்தியாவில் ரூ.32,999 க்கு அறிமுகமானது. இதோடு அறிமுகமான சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ரூ.41,999 என்கிற விலை நிர்ணயத்தை பெற்று இருந்தது.

சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி, சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி ஸ்மார்ட்போன்களின் முக்கிய அம்சங்கள்: சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி, சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி ஆகிய இரண்டுமே 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா விக்டஸ் பிளஸ் கிளாஸ் ப்ரொடெக்ஷன் உடனான 6.7-இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் (1080 x 2340 பிக்சல்ஸ்) சூப்பர் AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளன. மேலும் இரண்டுமே ஆட்டோ டிரிம், பெஸ்ட் ஃபேஸ், ஏஐ செலக்ட் மற்றும் ரீட் அலவுட் போன்ற ஏஐ அம்சங்களை ஆதரிக்கின்றன.

சிப்செட்டை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி ஆனது எக்ஸினோஸ் 1580 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, அதே நேரத்தில் சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி ஆனது ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 சிப்செட் உடன் வருகிறது. இரண்டுமே 12ஜிபி வரை ரேம், 256ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜை பேக் செய்கின்றன மற்றும்

கேமராக்களை பொறுத்தவரை கேலக்ஸி ஏ56 5ஜி ஆனது ஓஐஎஸ் ஆதரவுடன் 50எம்பி ப்ரைமரி சென்சார், 12எம்பி அல்ட்ராவைட் ஷூட்டர் மற்றும் 5 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி மாடலும் இதே போன்ற செட்டப்பை தான் கொண்டுள்ளது. ஆனால் 8 மெகாபிக்சல் அல்ட்ராவைட் சென்சாரை கொண்டுள்ளது. மேலும் இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 12 மெகாபிக்சல் செல்பீ கேமராக்கள் உள்ளன.

பேட்டரியை பொறுத்தவரை இரண்டுமே 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. மேலும் 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கின்றன மற்றும் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக ஐபி67 ரேட்டிங் கட்டமைப்பை கொண்டுள்ளன. கடைசியாக, கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை 5ஜி, 4ஜி LTE, வைஃபை, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளன.

சாம்சங் கேலக்ஸி எஸ்26 சீரீஸ் (Samsung Galaxy S26 Series) எப்போது அறிமுகமாகும்? சாம்சங் கேலக்ஸி எஸ்26, சாம்சங் கேலக்ஸி எஸ்26 பிளஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஆகிய 3 மாடல்களும் அடுத்த ஆண்டு தொடக்கத்திலேயே.. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் 2026 பிப்ரவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Testing New Mid Range Smartphone Could be Galaxy A37 5G What to Expect
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X