ப்ரீ-ஆர்டரில் கேல்கஸி நோட்-2!

By Super
|
ப்ரீ-ஆர்டரில் கேல்கஸி நோட்-2!

கேலக்ஸி நோட்-2 ஸ்மார்ட்போன் எப்போது நமது நாட்டில் அறிமுகமாகும் என்று காத்திருந்தவர்களுக்கு சந்தோஷமான செய்தி என்று தான் சொல்ல வேண்டும். சாம்சங் இந்தியா ஆன்லைன் ஸ்டோரில், கேல்கஸி நோட்-2 ஸ்மார்ட்போனை ப்ரீ-ஆர்டரில் பெறலாம்.

இந்த 5.5 இஞ்ச் திரை வசதியினை வழங்குவதோடு, மேம்படுத்தப்பட்ட எஸ்-பென் வசதியினையும் இதில் பெற முடியும். இதன் அகன்ற திரை 1280 X 720 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் கொடுக்கும். ப்ரீ-ஆர்டரில் இந்த கேலக்ஸி எஸ்-2 ஸ்மார்ட்போனுடன் ரூ. 2,399 விலை மதிப்புள்ள எஸ்-பென் டாக் இலசமாக வழங்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதியினை வழங்கும். இந்த இங்குதளம் சிறப்பாக இயங்க இதில் 1.6 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் கார்டெக்ஸ் ஏ-9 பிராசஸரையும் பயன்படுத்த முடியும்.

இதில் 8 மெகா பிக்ஸல் கேமரா மட்டும் அல்லாமல் செகன்டரி கேமராவாக 1.9 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினையும் பெற முடியும். சாம்சங் இந்தியா ஆன்லைன் ஸ்டோரில் இந்த கேலக்ஸி நோட்-2 ஸ்மார்ட்போனை ப்ரீ-ஆர்டர் செய்ய ரூ. 5,000 முன்பணம் செலுத்த வேண்டும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X