போனா வராது.. மே 30 குள்ள ஆர்டர் பண்ணா ரூ.12,000 மிச்சம்.. Samsung-ன் லேட்டஸ்ட் போன் மீது ஆபர்!
சாம்சங் நிறுவனம் இந்த மாத தொடக்கத்தில் அதன் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் (Samsung Galaxy S25 Edge) ஸ்மார்ட்போனை.. இதுவரை அறிமுகம் செய்யப்பட்டதிலேயே மிகவும் ஸ்லிம் ஆன கேலக்ஸி எஸ் சீரிஸ் ஸ்மார்ட்போனை உலகளவில் அறிமுகம் செய்து இருந்தது.
இந்த ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ விற்பனை தேதிக்கு முன்னதாகவே வாடிக்கையாளர்கள் தங்களுக்கான கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போன்களை பெற தொடங்கி உள்ளன. ஏனென்றால் இந்த ஸ்மார்ட்போனை ப்ரீ-ஆர்டர் செய்த வாடிக்கையாளர்களுக்கு சாம்சங் நிறுவனம் அதன் முன்கூட்டியே டெலிவரி (Samsung Galaxy S25 Edge Early Delivery) செய்ய தொடங்கியுள்ளது.

2025 மே 30 ஆம் தேதி வரை கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனிற்கான ப்ரீ ஆர்டர்களை (Samsung Galaxy S25 Edge Pre Order) சாம்சங் ஏற்றுக்கொள்ளும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும் ப்ரீ-ஆர்டர் செய்த வாடிக்கையாளர்களுக்கு சாம்சங் நிறுவனம் ரூ.12,000 மதிப்புள்ள ஸ்டோரேஜ் அப்கிரேட் சலுகையையும் (Storage upgrade offer) வழங்குகிறது.
இதன் மூலம் வாடிக்கையாளர்கள் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையில் 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனை ப்ரீ-ஆர்டர் செய்யலாம். மேலும் வாங்குபவர்கள் 9 மாதங்கள் வரையிலான நோ காஸ்ட் இஎம்ஐ சலுகையையும் (No Cost EMI Offer) பெறலாம். நினைவூட்டும் வண்ணம் இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனின் 12GB + 256GB ஆப்ஷன் ரூ.1,09,999 க்கும், 12GB + 512GB ஆப்ஷன் ரூ.1,21,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டைட்டானியம் ஜெட் பிளாக் (Titanuium Jet Black), டைட்டானியம் ஐசி ப்ளூ (Titanuium Ice Blue) மற்றும் டைட்டானியம் சில்வர் (Titanuium Silver) 3 ஆகிய கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும் சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்களை பொறுத்தவரை, இது QHD+ ரெசல்யூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2,600 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ் உடனான 6.7-இன்ச் AMOLED பேனலை கொண்டுள்ளது. இது கார்னிங் கொரில்லா கிளாஸ் செராமிக் 2 ப்ரொடெக்ஷனால் பாதுகாக்கப்படுகிறது.
சிப்செட்டை பொறுத்தவரை இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்டை (Snapdragon 8 Elite) கொண்டுள்ளது. இது மற்ற கேலக்ஸி எஸ்25 சீரீஸ் ஸ்மார்ட்போன்களில் காணப்படும் அதே சிப் ஆகும். ஸ்டோரேஜை பொறுத்தவரை இது 256GB மற்றும் 512GB UFS 4.0 ஸ்டோரேஜ் விருப்பங்களுடன் 12GB LPDDR5x ரேம்-ஐ கொண்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை பின்புறத்தில் 200MP ப்ரைமரி சென்சார் மற்றும் 12MP அல்ட்ராவைடு சென்சார் (மேக்ரோ மோட் உடன்) உள்ளது. முன்பக்கத்தில் 12MP செல்பீ கேமரா உள்ளது. பேட்டரியை பொருத்தவ்ரு இது 25W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் 3,900mAh பேட்டரியை கொண்டுள்ளது. இந்த சார்ஜிங் வேகத்தில் சுமார் 30 நிமிடங்களில் 55 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும் என்று சாம்சங் கூறுகிறது.
சாஃப்ட்வேர்-ஐ பொறுத்தவரை இந்த போன் கேலக்ஸி ஏஐ அம்சங்களை கொண்ட ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான ஒன் யுஐ 7 உடன் வருகிறது. கவனிக்கப்பட வேண்டிய மற்ற முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இது 163 கிராம் எடையுள்ளதாக இருக்கிறது மற்றும் ஐபி68 நீர் மற்றும் தூசி எதிர்ப்பிறகான ரேட்டிங்கை கொண்டுள்ளது. மேலும் 5ஜி, வைஃபை 7 மற்றும் ப்ளூடூத் 5.4, டைட்டானியம் அலாய் பிரேம் ஆகியவற்றுடன் வருகிறது.
முன்னரே குறிப்பிட்டபடி சாம்சங் கேலக்ஸி எஸ்25 சீரீஸின் லேட்டஸ்ட் மாடல் ஆக அறிமுகம் செய்யப்பட்டுள்ள சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் மாடல் வெறும் 5.8 மிமீ தடிமன் கொண்ட ஸ்மார்ட்போன் ஆகும். அதாவது இதுவரை கேலக்ஸி எஸ் சீரிஸில் அறிமுகமானதிலேயே மிகவும் மெலிதான (Slimmest Phone) ஸ்மார்ட்போனாகும்.


Click it and Unblock the Notifications








