Home
Mobile

இளைய தலைமுறைகளை ஈர்க்க வரும் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்!

By Super
இளைய தலைமுறைகளை ஈர்க்க வரும் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்!

அகன்ற திரை கொண்ட புதிய ஸ்மார்ட்போனை வழங்க உள்ளது சாம்சங் நிறுவனம். சாதாரணமாக 3.5 இஞ்ச் திரை கொண்ட ஸ்மார்ட்போன்களே பார்ப்பதற்கு மிக பிரம்மாண்டமாக காட்சி அளிக்கிறது. சாம்சங் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய எஸ்பிஎச் எல்-300 ஸ்மார்ட்போன், 4 இஞ்ச் அகன்ற திரை வசதியினை கொடுக்கும். இதனால் 480 X 800 பிக்ஸல் திரை துல்லியத்தினை வழங்க முடியும்.

பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குவதாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களின் எதிர்பார்ப்பை இந்த ஸ்மார்ட்போன் பூர்த்தி செய்யும். இந்த இயங்குதளம் சிறப்பாக இயங்க இதில் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் டியூவல் கோர் க்ரெய்ட் பிராசஸரும் பொருத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.

5 மெகா பிக்ஸல் கேமரா கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 4 ஜிபி வரை மெமரி வசதியினையும் பெறலாம். இதில் ஜிபிஆர்எஸ் தொழில் நுட்பத்தில் பயன்படுத்தும் சவுகரியமும் உள்ளது. இதன் 3ஜி மற்றும் 4ஜி நெட்வொர்க் சவுகரியத்தினை பெற இந்த ஸ்மார்ட்போன் சிறப்பாக சப்போர்ட் செய்யும்.

இன்னும் வெளி வராத இந்த ஸ்மார்ட்போன் பற்றிய அதிக தகவல்கள் சரியாக வெளியாகவில்லை. அதிக தொழில் நுட்பத்தினை வழங்க இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மொபைல் மார்கெட்டில் மற்ற ஸ்மார்ட்போன்களுக்கு சரியாக ஈடு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த எஸ்பிஎச் எல்-300 ஸ்மார்ட்போனின் தயாரிப்பு வேலைப்பாடுகள் இன்னும் முடிவடையவில்லை. இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டால் மொபைல் மார்கெட்டில் சிறந்த இடத்தினை பிடிக்கும் என்று நம்பலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X