ஆற்றல் வாய்ந்த பேட்டரியுடன் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்

Posted By: Staff

ஆற்றல் வாய்ந்த பேட்டரியுடன் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்
அடுத்ததாக ஒரு சால்சிடைஸ் ஏ-887 என்ற ஸ்மார்ட்போனை வெளியிட்டிருக்கிறது சாம்சங் நிறுவனம். நவீன உலகத்திற்கு வாடிக்கையாளர்களை மாற்றி எடுத்துச் செல்லுகிறது சாம்சங் நிறுவனத்தின் புதிய படைப்புகள். தனது புதிய தயாரிப்புகளை நிறுத்தாமலும், இடைவெளி விடாமலும் தொடர்ந்து நடத்திக் கொண்டே இருக்கிறது சாம்சங்.

வாடிக்கையாளர்களுக்கு வேண்டிய தேவைகளைப் பூர்த்தி செய்யும் சாம்சங், தற்சமயம் வெளியிட்டுள்ள இந்த ஸ்மார்ட்மொபைல், அதிக தொழில் நுட்பம் கொண்டதாக இருக்கிறது.

சால்சிடைஸ் ஏ-887 மொபைல் 109 மிமீ உயரமும், 12.7 மிமீ தடிமனும், 5மிமீ அகலத்தையும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இனால் இந்த மொபைல் ஒரு முழுமையான வடிவமைப்பைப் பெற்றுள்ளது. வெறும் 94 கிராம் எடை கொண்ட இந்த மொபைல் 2ஜி மற்றும் 3ஜி வசதியுடன் மிகவும் ஸ்டைலாக நிற்கிறது.

இது டிஎப்டி டச் ஸ்கிரீன் வசதிக்கும், 256கே கலர்களுக்கும் சப்போர்ட் செல்வதால், கண்ணுக்கு இனிமையாக பல வகை வண்ணங்களுடன் இதில் உள்ள காட்சிகளைப் பார்க்க முடியும்.

எதையும் தொளிவாகக் காண 3.0 இஞ்ச் திரை கொடுக்கப்பட்டுள்ளது. 240 X 400 பிக்ஸல் திரை துல்லியத்தையும் இது வழங்குகிறது.2 மெகா பிக்ஸல் கேமராவுக்கு சப்போர்ட் செய்யும் இந்த மொபைல் 1600 X 1200 என்ற அதிகமான துல்லியத்திற்கு சப்போர்ட் செய்கிறது.

தகவல்களைக் குறித்து வைக்க பேப்பர், பேனா தேடிய காலம் போய் இப்பொழுது அனைவரும் மொபைலை தேடுகின்றனர். அனைத்துவிதமான தகவல்களையும் பதிவு செய்ய மொபைல்களில் மெமரி வசதி அவசியம். இந்த மொபைலில் 189எம்பி இன்டர்னல் மெமரி வசதி உள்ளது.

16ஜிபி வரை மெமரி வசதியினை விரிவுபடுத்திக் கொள்ளலாம். இதில் அட்வான்ஸ்டு ஏ2டிபி புளூடூத் வசதி உள்ளதால் எளிய முறையில் தகவல் பரிமாற்றம் செய்ய முடியும். சால்சிடைஸ் ஏ-887 ஸ்மார்ட்போனில் ஸ்டான்டர்டு 1,000 எம்ஏஎச் லித்தியம் அயான் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

மார்டன் அப்ளிக்கேஷன்களை பயன்படுத்த இந்த லித்தியம் பேட்டரி மிகவும் சிறந்த வகையில் உதவி புரிகிறது. இது 5 மணி நேரம் டாக் டைம் மற்றும் 250 மணி நேரம் ஸ்டேன்-பை டாக் டைம் வழங்குவதால் பேச்சு துண்டிக்கப்படாமல் இருக்கும்.

சாம்சங் நிறுவனத்தின் இந்த புதிய சால்சிடைஸ் மொபைல் ரூ.25,000 விலையில் இந்திய சந்தையில் கிடைக்கிறது. இத்தகைய அரிய வகை மொபைலைப் பெற்று எளிய வகையில் பயனடைய முடியும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot