Home
Mobile

புது போன் சீக்கிரமா வாங்கிடுங்க.. விலை உயரும் Samsung ஸ்மார்ட்போன், டேப்லெட்.. எந்தெந்த மாடல்கள்.. ஏன்?

கடந்த டிசம்பர் மாத இறுதியில் வெளியான ஐடிசி-யின் (ITC) கணிப்புகள் ஆனது 2026 ஆம் ஆண்டு பிசி துறை முழுவதும் குறிப்பிடத்தக்க விலை உயர்வை காணக்கூடும் என்று தெரிவித்து இருந்தன. இதற்கிடையில் சாம்சங் (Samsung) நிறுவனத்தின் டிவைஸ்கள் (ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்கள் மற்றும் லேப்டாப்கள்) தற்போதைய விலையில் நீண்ட காலம் நீடிக்காமல் போகலாம் என்கிற தகவல் கிடைத்துள்ளது

ஏன் விலை உயரும்? அதிகரித்து வரும் கூறு செலவுகள் (Component costs) காரணமாக, சாம்சங் நிறுவனம் அதன் ஸ்மார்ட்போன், டேப்லெட் மற்றும் லேப்டாப் சீரிஸின் சில பகுதிகளின் விலைகளை உயர்த்தத் தயாராகி வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, ஏஐ துறையின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மெமரி விலைகள் (Memory prices) கடும் அழுத்தத்தில் உள்ளன.

விலை உயரும் Samsung ஸ்மார்ட்போன், டேப்லெட்.. எந்தெந்த மாடல்கள்.. ஏன்?

ஜெனரேட்டிவ் ஏஐ யின் (Generative AI) விரைவான விரிவாக்கம் ஆனது தரவு மையங்கள் (data centres) மற்றும் ஏஐ ஆக்ஸலரேட்டர்களில் (AI accelerators) பயன்படுத்தப்படும் உயர் அலைவரிசை நினைவகத்திற்கான (High bandwidth memory - HBM) பெரும் தேவையை ஏற்படுத்தி உள்ளது.

இது வழக்கமான மெமரி சில்லுகளுக்கான (Conventional Memory chips) விலைகளையும் உயர்த்தி உள்ளது. மறுகையில் விநியோகம் ஆனது வேகத்தை தக்கவைக்க போராடுவதால், உற்பத்தியாளர்கள் ஸ்மார்ட்போன் கள், டேப்லெட்டுகள் மற்றும் லேப்டாப்கள் போன்ற ரேம்-ஹெவி தயாரிப்புகளுக்கு (RAM Heavy Products) அதிக பில்களை எதிர்கொள்கின்றனர்.

மெமரி மட்டுமே - செலவை அதிகரிக்கும் ஒரே காரணம் அல்ல. ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே பேனல்கள் மற்றும் மேம்பட்ட கேமரா மாட்யூல்கள் கூட அதிக விலை கொண்டவைகளாக உள்ளன. அதே நேரத்தில் போட்டி தீவிரமடைவதால் தொழிலாளர் செலவுகள் மற்றும் சந்தைப்படுத்தல் செலவுகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக நடுத்தர அளவிலான பிரிவில், குறைந்த லாபம் ஈட்டும் பிராண்டுகள், "இந்த செலவுகளை" வாங்குபவர்களின் தலையில் கட்டுகின்றன.

எந்தெந்த சாம்சங் ஸ்மார்ட்போன்களின் விலைகள் உயரும்? இந்தியாவில், சில கேலக்ஸி ஏ-சீரிஸ் மாடல்களில் ரூ.2,000 வரை விலை உயர்வுகளை கொண்டுவர்ற சாம்சங் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்தாண்டு அறிமுகம் செய்யப்பட உள்ள கேலக்ஸி எஸ்26 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது ஏற்கனவே உள்ள எஸ்25 சீரீஸை விட அதிக விலையில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போதைக்கு உள்ள நினைவக விநியோக நிலைமை ஆனது 2027 நெருங்கும் வரை முழுமையாக சீரடையாது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இப்போதைக்கு பல சாம்சங் தயாரிப்புகள் தள்ளுபடி விலையில் விற்கப்படுகின்றன. குறிப்பாக கேலக்ஸி இஸட்ஃபோல்ட் 7, கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா, கேலக்ஸி வாட்ச் 8 மற்றும் சாம்சங்கின் ஓ எல்இடி டிவிகள் போன்ற மாடல்கள் பல சந்தைகளில் தற்காலிக விலைக் குறைப்புகளை காண்கின்றன. ஆனாலும் இது நீடிக்காது என்பது போல் தெரிகிறது.

ஐடிசி கணிப்புகள் என்ன கூறுகிறது? ஐடிசி ஆய்வாளர்கள் - இந்த பிரச்சினையின் மையப்புள்ளியை "மெமரி சூப்பர் சைக்கிள்" என்று குறிப்பிடுகிறார்கள். டிரேம் (DRAM) என்று சுருக்கமாக அழைக்கப்படும் டைனமிக் ரேண்டம் அக்சஸ் மெமரி (Dynamic Random Access Memory) மற்றும் தொடர்புடைய காம்போனென்ட்களுக்கான தேவை கூர்மையாக அதிகரித்து வருகிறது.

ஏஐ சேவையகங்கள், ஏஐ திறன் கொண்ட பிசிக்கள் மற்றும் விண்டோஸ் 10 உடன் இணைக்கப்பட்ட மேம்படுத்தல்கள் பிசி-களுக்கு கிடைக்கும் ஆதரவுகளை முட்டுச்சந்துக்கு தள்ளுகின்றன. இருப்பினும், விநியோகம் தொடர்ந்து ஒரு போராட்டமாக உள்ளது. ஐடிசி மேற்கோள் காட்டிய தொழில்துறை சமிக்ஞைகளின்படி, மெமரி விலைகள் ஏற்கனவே உயர்ந்து வருகின்றன.

இது மேலும் அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது. கிராபிக்ஸ் கார்டுகள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் கேமிங் பொருட்கள் கூட இந்த தொடர்ச்சியான மெமரி பற்றாக்குறை மற்றும் விலை உயர்வால் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லெனோவா (Lenovo), டெல் (Dell), எச்பி (HP), ஏசர் (Acer) மற்றும் ஆசஸ் (ASUS) உள்ளிட்ட பல முக்கிய பிசி தயாரிப்பாளர்களும் கடுமையான சந்தை நிலைமைகள் குறித்து எச்சரித்துளதாக கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Smartphones Tablets Laptops To Soon Get Price Hike due to rising Component costs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X