ஸ்னாப்டிராகன் 821 செயலி உடன் வெளிவரும் சாம்சங் எஸ்எம் டபள்யு2018.!
சாம்சங் எஸ்எம் டபள்யு2018 பிளிப்போன் பொறுத்தவரை 2.15ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் ஸ்னாப்டிராகன்821 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 6.0.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சாம்சங் டபள்யு2017 பிளிப் போன் மாடலை சீனாவில் வெளியிட்டது சாம்சங் நிறுவனம் தற்போது சாம்சங் எஸ்எம் டபள்யு2018. இப்போது சாம்சங் எஸ்எம் டபள்யு2018 என்ற மாடலை அறிமுகப்படுத்த தயார் நிலையில் உள்ளது.
எதிர்பார்த்தப்படி சாம்சங் நிறவனம் கேலக்ஸி நோட் 8 மாடலை வரும் ஆகஸ்ட் 23ம் தேதி விற்பனைக்கு கொண்டுவரும் என தெரிவித்துள்ளது அதறக்கு பிறகு சாம்சங் எஸ்எம் டபள்யு2018 மாடலை அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளது.

4.2-இன்ச் டிஸ்பிளே:
இக்கருவி 4.2-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது,அதன்பின் (1920-1080)பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,
மேலும் இதன் வடிவமைப்புக்க தனிகவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 6.0.1
சாம்சங் எஸ்எம் டபள்யு2018 பிளிப்போன் பொறுத்தவரை 2.15ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் ஸ்னாப்டிராகன்821 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 6.0.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது.

4ஜிபி ரேம்:
சாம்சங் எஸ்எம் டபள்யு2018 பொதுவாக 4ஜிபி ரேம் மற்றும 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

12எம்பி ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, மேலும் முன்புற கேமரா 5மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை 802.11, ப்ளூடூத், 4ஜி வோல்ட், என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்
எனக் கூறப்படுகிறது.

2300எம்ஏஎச்:
சாம்சங் எஸ்எம் டபள்யு2018 பொறுத்தவரை 2300எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி ஒன்று இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது என சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. 155 கிராம் எடை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான பிளிப்போன்.


Click it and Unblock the Notifications