Home
Mobile

சாம்சங் கேலக்சி எஸ்8, எஸ்8+ மீது கற்பனை செய்து பார்க்க முடியாத விலை குறைப்பு.!

சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 ப்ளஸ் ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்தை தொடர்ந்து, இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ்8 மற்றும் எஸ்9 ப்ளஸ் ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது

By Muthuraj

சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 ப்ளஸ் ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்தை தொடர்ந்து, இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ்8 மற்றும் எஸ்9 ப்ளஸ் ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

கேலக்சி எஸ்8, எஸ்8+ மீது கற்பனை செய்து பார்க்க முடியாத விலை குறைப்பு.!

சாம்சங் நிறுவனம், இந்த விலைக்குறைப்பை அதன் சில்லறை விற்பனையாளர்களுக்கு அறிவித்துள்ளதுடன், நிறுவனத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளத்திலும் புதிய விலையை காட்சிப்படுத்தியுள்ளது.

64ஜிபி மாடல்.!

64ஜிபி மாடல்.!

சாம்சங் நிறுவனத்தின் வலைத்தளத்தின்படி, கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போனின் 64ஜிபி மாடல் ஆனது இப்போது ரூ.49,990/-க்கு வாங்க கிடைக்கும். மறுகையில் உள்ள கேலக்ஸி எஸ்8 ப்ளஸ்-ன் 64ஜிபி மாடல் ஆனது ரூ.53,990/-க்கு வாங்க கிடைக்கிறது.

128ஜிபி மாடல்.!

128ஜிபி மாடல்.!

சாம்சங் கேலக்ஸி எஸ்8 ப்ளஸ்-ன் 128 ஜிபி மாடல், இப்போது ரூ.64,900/-க்கு வாங்குவதற்கு கிடைக்கிறது. எனினும், சாம்சங் ஆன்லைன் ஸ்டோர் பட்டியலில் கேலக்ஸி எஸ்8 (128ஜிபி மாடல்) விலையில் இன்னும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை.

ரூ.11,000/- என்கிற தள்ளுபடி.!

ரூ.11,000/- என்கிற தள்ளுபடி.!

முந்தைய விலைகளுடன் ஒப்பிடுகையில், கேலக்ஸி எஸ்8 மீது ரூ.8000/- தள்ளுபடியும், எஸ்8 ப்ளஸ் மீது ரூ.11,000/- தள்ளுபடியும் கிடைக்கிறது. கேலக்ஸி எஸ்8 ப்ளஸ்-ன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மாடல் மீது ரூ.6000/- வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்இடி இன்பினிட்டி டிஸ்பிளே.!

எல்இடி இன்பினிட்டி டிஸ்பிளே.!

ப்ளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட மற்ற ஆன்லைன் ஸ்டோர்களில் விலைகள் இன்னும் புதுப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிரதான அம்சங்களை பொறுத்தவரை, கேலக்ஸி எஸ்8 மற்றும் எஸ்8 ப்ளஸ் ஸ்மார்ட்போன்கள், முறையே 5.8 இன்ச் மற்றும் 6.2 இன்ச் க்யூஎச்டி+ சூப்பர் அமோ எல்இடி இன்பினிட்டி டிஸ்பிளே கொண்டுள்ளது. இதன் டிஸ்பிளேக்கள் 1440 × 2960 அளவிலான பிக்சல் தீர்மானம் மற்றும் ஒரு 18: 9 விகிதத்துடன் வருகிறது என்பதும், இரண்டு ஸ்மார்ட்போன்களுமே கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கேமராத்துறை.!

கேமராத்துறை.!

சாம்சங் எக்ஸினோஸ் 8895 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி எஸ்8 ப்ளஸ் ஆனது 4ஜிபி அல்லது 6ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. கேமராத்துறையை பொறுத்தவரை, கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி எஸ்8 ப்ளஸ் ஆகிய இரண்டும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் ஒரு எப் / 1.7 துளை கொண்ட 12எம்பி 'டூயல் பிக்சல்' பின்புற கேமராக்கள் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், ஆட்டோ போகஸ் மற்றும் எப் / 1.7 துளை கொண்ட ஒரு 8எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது.

ஐரிஸ் ஸ்கேனிங் டெக்னாலஜி.!

ஐரிஸ் ஸ்கேனிங் டெக்னாலஜி.!

முறையே 3000எம்ஏஎச் மற்றும் 3500எம்ஏஎச் பேட்டரிகள் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன்கள், 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் வி5.0, யூஎஸ்பி டைப் சி, என்எப்சி (NFC) மற்றும் ஜிபிஎஸ் போன்ற இணைப்பு விருப்பங்களை வழங்குகிறது. கேலக்ஸி எஸ்8 தொடரின் மற்ற பொதுவான சிறப்பம்சங்களை பொறுத்தவரை, ஐரிஸ் ஸ்கேனிங் டெக்னாலஜி, பின்புற கைரேகை ஸ்கேனர், வயர்லெஸ் சார்ஜ் மற்றும் நிறுவனத்தின் சொந்த பிக்ஸ்பை விர்ச்சுவல் அசிஸ்டென்ட், தூசு மற்றும் நீர் எதிர்ப்பிற்காக ஐபி68 சான்றிதழ் ஆகியவைகள் ஆகும்.

Best Mobiles in India

English summary
Samsung Slashes the Prices of Galaxy S8 and S8+ in India. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X