தீபாவளிக்கு முன்பே சரவெடி : அதிரடி விலைகுறைப்பில் சாம்சங் ஸ்மார்ட்போன்கள்.!

Written By:

தீபாவளி வேறு வருகிறது; செப்டம்பர் மாதம் வேறு முடிய போகிறது - எதாவது ஸ்மார்ட்போன் விலைகுறைப்பு ஏற்படுமா என்று காத்திருக்கும் நபரா நீங்கள்.? அப்போது அதிர்ஷசாலி தான் நீங்கள்.!

தீபாவளிக்கு முன்பே சரவெடி : அதிரடி விலைகுறைப்பில் சாம்சங் கருவிகள்.!

சாம்சங் நிறுவனம் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வண்ணம் அதன் "சாம்சங் ஷாப் அனிவெர்சரி சேல்" விற்பனையை அறிவித்துள்ளது. இன்று அதாவது செப்டம்பர் 25 தொடங்கி செப் 30-அம தேதி வரை நடைபெறும் இந்த விற்பனையில் கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி எஸ்8 ப்ளஸ் உட்பட அதன் பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலைக்கு கிடைக்கின்றன.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
கேலக்ஸி எஸ்8 ப்ளஸ்

கேலக்ஸி எஸ்8 ப்ளஸ்

இந்த விற்பனையில் சாம்சங் கேலக்ஸி எஸ்8 ப்ளஸ் ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் வேரியண்ட் ஆனது ரூ.60,900/-க்கு என்ற விலைக்கு கிடக்கிறது. மறுகையில் கேலக்ஸி எஸ்8 ஆனது ரூ.53,900/-க்கு கிடைக்கிறது.

ரூ.4,000/- கூடுதல் கேஷ்பேக்

ரூ.4,000/- கூடுதல் கேஷ்பேக்

சாம்சங் நிறுவனத்தின் ஆண்டு விற்பனையின் ஒரு பகுதியான இந்த விற்பனையில் விலைக்குறைப்பு தவிர இந்த இரண்டு கைபேசிகளை, எச்டிஎப்சி கடன் அட்டை கொண்டு வாங்குபவர்களுக்கு ரூ.4,000/- கூடுதல் கேஷ்பேக் சலுகையும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி ஆன் மேக்ஸ்

சாம்சங் கேலக்ஸி ஆன் மேக்ஸ்

சாம்சங் நிறுவனத்தின் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை தவிர்த்து, ரூ.16,900/- மதிப்பு கொண்ட சாம்சங் கேலக்ஸி ஆன் மேக்ஸ் ஆனது ரூ.1000/- விலைக்குறைப்பை பெற்று ரூ.15,900/-க்கு கிடைக்கிறது.

கேலக்ஸி ஆன் நெக்ஸ்ட்

கேலக்ஸி ஆன் நெக்ஸ்ட்

மறுபுறம், நிறுவனத்தின் கேலக்ஸி ஆன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனின் 64ஜிபி மாறுபாடிற்கு ரூ.2,000/- விலைக்குறைப்பு நிகழ்த்தப்பட்டு ரூ.13,900/-க்கு கிடைக்கிறது. கூடுதலாக, ஐசிஐசிஐ கிரெடிட் கார்ட் வைத்திருப்பவர்களுக்கு இந்த விற்பனையில் 5 சதவிகித தள்ளுபடியும் கிடைக்கும்.

கேலக்ஸி ஆன்7 ப்ரோ மற்றும் கேலக்ஸி ஜே3 ப்ரோ

கேலக்ஸி ஆன்7 ப்ரோ மற்றும் கேலக்ஸி ஜே3 ப்ரோ

பட்ஜெட் வரம்பிற்குள், ரூ.8,990/- மற்றும் ரூ.7,990/-க்கு விற்கப்பட்ட கேலக்ஸி ஆன்7 ப்ரோ மற்றும் கேலக்ஸி ஜே3 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்கள் விலைக்குறைப்பிற்கு பின்னர் முறையே ரூ.7,590/- மற்றும் ரூ.7,090/-க்கு கிடைக்கும்.

கேலக்ஸி ஆன் 7 மற்றும் கேலக்ஸி ஆன்5 ப்ரோ

கேலக்ஸி ஆன் 7 மற்றும் கேலக்ஸி ஆன்5 ப்ரோ

மேலும் ரூ.7,200/- மற்றும் ரூ.7,490/-க்கு விற்கப்பட்ட கேலக்ஸி ஆன் 7 மற்றும் கேலக்ஸி ஆன்5 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்கள் விலைக்குறைப்பிற்கு பின்னர் முறையே ரூ.6,590/- மற்றும் ரூ.6,490/-க்கு கிடைக்கும்.

கேலக்ஸி ஆன் 5

கேலக்ஸி ஆன் 5

இந்த சலுகையின் ஒரு பகுதியாக, ரூ.6,900/-க்கு விற்கப்பட்ட கேலக்ஸி ஆன் 5 ஸ்மார்ட்போன் ஆனது விலைகுறைக்கப்பட்டு ரூ.5,990/- வாங்குவதற்கு கிடைக்கும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Samsung Shop Anniversary Sale: Discounts on Galaxy S8+, Galaxy S8, and More. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot