Home
Mobile

ஏப்ரல் 5: சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

கேலக்ஸி எஸ்10 5ஜி ஸ்மார்ட்போன் பொதுவாக ரூ.1.41 லட்சம் விலை மதிப்பில் வெளிவரும் என ஆன்லைனில் தகவல் வெளிவந்துள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் வரும் ஏப்ரல் 5-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த 5ஜி சாதனம் முதலில் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக் கொண்டுவரப்படும் எனவும், அதன்பின்பு தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஏப்ரல் 5: சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்

கேலக்ஸி எஸ்10 5ஜி ஸ்மார்ட்போனின் மென்பொருள் அமைப்பிற்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு ஆப்பிள் நிறுவனத்திற்கு கடும் போட்டியை ஏற்படுத்த தான் சாம்சங் நிறுவனம் தனது 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

5ஜி ஸ்மார்ட்போன்

5ஜி ஸ்மார்ட்போன்

இதேபோன்று ஹுவாய் நிறுவனம் தனது மடிக்கக்கூடி 5ஜி ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது,
இருந்தபோதிலும் சாம்சங் நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன் தான் உலகம் முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

5ஜி ஸ்மார்ட்போன்

5ஜி ஸ்மார்ட்போன்

கேலக்ஸி எஸ்10 5ஜி ஸ்மார்ட்போனில் எப்போதும் அமையும் சிப்செட் வழங்கப்பாடது எனவும், புதிய சிப்செட் அமைப்புடன் இந்த சாதனம் களமிறங்கும் எனவும் தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இணைய வேகத்திற்கு தகுந்தபடி இந்த
ஸ்மார்ட்போனின் சிப்செட் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.1.41 லட்சம்

ரூ.1.41 லட்சம்

கேலக்ஸி எஸ்10 5ஜி ஸ்மார்ட்போன் பொதுவாக ரூ.1.41 லட்சம் விலை மதிப்பில் வெளிவரும் என ஆன்லைனில் தகவல் வெளிவந்துள்ளது. இருந்தபோதிலும் கொடுக்கும் பணத்திற்கு தகுந்தபடி பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி ஏ40

கேலக்ஸி ஏ40

மேலும் இந்நிறுவனம் அன்மையில் அறிமுகம் செய்த கேலக்ஸி ஏ40 ஸ்மார்ட்போன் மாடல் இப்போது அதிக வரவேறப்பை பெற்றுள்ளது, அந்த சாதனத்தின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம். சாம்சங் கேலக்ஸி ஏ40 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 5.9-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். கேலக்ஸி ஏ40 ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை குவால்காம் எக்ஸிநோஸ் 7885 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பாரப்புகளை உருவாக்கியுள்ளது.

கேலக்ஸி ஏ40 கேமரா

கேலக்ஸி ஏ40 கேமரா

கேலக்ஸி ஏ40 ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 16எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 25எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சம் போன்ற பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது. கேலக்ஸி ஏ40 சாதனத்தில் 3100எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 4ஜி வோல்ட்இ, 3ஜி, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Samsung all set to launch the Galaxy S10 5G on April 5: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X