Samsung என்றால் விசுவாசம்.. 10 வருஷம் கழிச்சும் Update அனுப்பி இருக்கு.. கஸ்டமர்கள் நெகிழ்ச்சி.. 3 மாடலுக்கு!
விசுவாசம்னா என்னன்னு தெரியுமா என்று மற்ற ஸ்மார்ட்போன் பிராண்டுகளை பார்த்து கேட்கும் படியான.. ஒரு தரமான சம்பவத்தை செய்துள்ளது சாம்சங் (Samsung) நிறுவனம். அறிமுகமாகி ஏறக்குறைய ஒரு தசாப்தம் (10 ஆண்டுகள்) கடந்த நிலையில், சாம்சங் நிறுவனமானது 3 பழைய ஸ்மார்ட்போன்களுக்கு எதிர்பாராத விதமாக சாஃப்ட்வேர் அப்டேட் ஒன்றை ரிலீஸ் செய்துள்ளது.
அறிமுகமாகி 10 ஆண்டுகளுக்கு கழித்தும் அப்டேட் கிடைத்துள்ள ஸ்மார்ட்போன்கள் - சாம்சங் கேலக்ஸி எஸ்8 (Samsung Galaxy S8), சாம்சங் கேலக்ஸி எஸ்8 பிளஸ் (Samsung Galaxy S8 Plus) மற்றும் சாம்சங் கேலக்ஸி நோட் 8 (Samsung Galaxy Note 8) ஆகிய மாடல்கள் ஆகும்.

இந்த ஸ்மார்ட்போன்களுக்கான அதிகாரப்பூர்வ சாஃப்ட்வேர் சப்போர்ட் (Software Support) ஆனது பல ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தப்பட்டு இருந்தாலும், புதிய அம்சங்கள் ஏதுமின்றி வந்துள்ள இந்த அப்டேட் பயனர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இது பழமையான பிளாக்ஷிப் மாடல்களுக்கு சாம்சங் வெளியிட்டுள்ள ஒரு அரிதான அப்டேட் ஆகும்.
ஆண்ட்ராய்டு அத்தாரிட்டி (Android Authority) வழியாக கிடைத்துள்ள தகவலின்படி, அமெரிக்காவில் உள்ள வெரிஸான் (Verizon) நெட்வொர்க் சார்ந்த கேலக்ஸி எஸ்8 சீரிஸ் மற்றும் கேலக்ஸி நோட் 8 மாடல்களுக்கு இந்த புதிய ஃபார்ம்வேர் (firmware) கிடைக்க தொடங்கியுள்ளது. இந்த அப்டேட் செயல்திறன் மேம்பாடுகளில் கவனம் செலுத்துவதாக வெரிஸான்-இன் அதிகாரப்பூர்வ குறிப்புகள் தெரிவிக்கின்றன.
அதேவேளையில், இது ஒட்டுமொத்த சிஸ்டம் ஸ்டெபிலிட்டியையும் (System stability) மேம்படுத்துவதாக சாம்மிபேன்ஸ் (SammyFans) செய்தி வெளியிட்டுள்ளது. மேம்பாடுகள் குறித்த விரிவான விவரங்கள் இல்லையென்றாலும், பழமையான இந்த ஸ்மார்ட்போன்கள் தொடர்ந்து நம்பகத்தன்மையுடன் இயங்குவதை உறுதிசெய்யும் வகையில் சாம்சங் மென்பொருளை சீரமைத்துள்ளதாக தெரிகிறது.
நினைவூட்டும் வண்ணம் கேலக்ஸி எஸ்8 , கேலக்ஸி எஸ்8 பிளஸ் மற்றும் கேலக்ஸி நோட் 8 ,மாடல்கள் ஆனது கடந்த 2017 இல் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த ஸ்மார்ட்போன்களுக்கான கடைசி திட்டமிடப்பட்ட மென்பொருள் அப்டேட்கள் 2022 இல் வழங்கப்பட்டன. அதன்பிறகு, இந்த போன்கள் பல ஆண்டுகள் பழமையான ஆண்ட்ராய்டு வெர்ஷன்கள் மற்றும் செக்யூரிட்டி பேட்ச்களுடனேயே (security patches) இயங்கி வருகின்றன.
இந்த புதிய அப்டேட் வந்த பிறகும் கூட, இவை 2021 ஆம் ஆண்டின் செக்யூரிட்டி பேட்ச்களையே கொண்டுள்ளன; அதாவது, சமீபத்திய பாதுகாப்பு அச்சுறுத்தல்களிலிருந்து இவற்றுக்கு பாதுகாப்பு கிடைக்காது. இந்த அப்டேட்டின் மூலம் புதிய இன்டர்பேஸ் (interface) அல்லது கூடுதல் செயல்பாடுகளை பயனர்கள் எதிர்பார்க்கக்கூடாது. மாறாக, இது அன்றாட செயல்திறனை மேம்படுத்துவதையும், பின்னணியில் உள்ள நிலைத்தன்மை தொடர்பான சிக்கல்களை சரிசெய்வதையும் நோக்கமாக கொண்டுள்ளது.
அதிகாரப்பூர்வ ஆதரவு காலம் முடிந்து நீண்ட காலம் ஆன ஸ்மார்ட்போன்களுக்கு இத்தகைய அப்டேட்கள் வழங்கப்படுவது அரிது என்பதால், சாம்சங்கின் இந்த முடிவு எதிர்பாராத ஒன்றாக அமைந்துள்ளது. பேஸ்டைம் (FaceTime) மற்றும் ஐமெசேஜ் (iMessage) போன்ற சேவைகள் சரியாக செயல்படுவதை உறுதிசெய்ய, இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆப்பிள் (Apple) நிறுவனம் மிகவும் பழைய ஐபோன் 5எஸ் (iPhone 5s)மாடலுக்கு சாஃப்ட்வேர் அப்டேட் ஒன்றை வெளியிட்டது; அந்த நடவடிக்கையை போலவே இதுவும் அமைந்துள்ளது.
இப்படிப்பட்ட மிகவும் பழைய ஸ்மார்ட்போன்களை / ஐபோன் மாடலை இன்னுமும் பேக்கப் போன்கள் (Backup Phones) ஆக அல்லது இரண்டாம் நிலை போன்களாக (Secondary Phones) பயன்படுத்தும் உரிமையாளர்களுக்கு, இந்த அப்டேட் சிறியதாக இருந்தாலும் வரவேற்கத்தக்க ஒரு மேம்பாடாக அமைகிறது.


Click it and Unblock the Notifications