Home
Mobile

100 நாள்களில் 20 மில்லியன் கேலக்ஸி எஸ் III போனை விற்ற சாம்சங்

By Karthikeyan
100 நாள்களில் 20 மில்லியன் கேலக்ஸி எஸ் III போனை விற்ற சாம்சங்

சாம்சங் நிறுவனம் கடந்த மே மாதம் கேலக்ஸி எஸ் III என்ற ஸ்மார்ட்போனைக் களமிறக்கியது. இந்த போனுக்கு உலக அளவில் மிகப் பெரிய வரவேற்பு காணப்பட்டது. மக்கள் இந்த போனை விரும்பி வாங்கினர். அதன் பலனாக கடந்த 100 நாள்களில் மட்டும் 20 மில்லியன் கேலக்ஸி III போன்கள் விற்பனையாகி இருக்கின்றன. இந்த தகவலை சாம்சங் உறுதிப்படுத்தி இருக்கிறது.

இதன் மூலம் ஐபோனை வீழ்த்தி இந்த போன் விற்பனையில் முதலிடத்திற்கு வந்திருக்கிறது. ஐரோப்பாவில் 6 மில்லியன் போனும், ஆசியாவில் 4.5 மில்லியன் போனும், வட அமெரிக்காவில் 4 மில்லியன் போனும் மற்றும் தென் கொரியாவில் 2.5 மில்லியன் போனும் விற்பனையாகி இருக்கின்றன.

கடந்த ஜூன் மாதம் வரை 24 மில்லியன் கேலக்ஸி எஸ் III போனும் மற்றும் 28 மில்லியன் கேலக்ஸி II போனும் விற்பனையானதாக சாம்சங் தெரிவித்திருந்தது.

வரும் செப்டம்பர் 12ல் ஆப்பிளின் ஐபோன் களம் இறங்க இருக்கிறது. இந்த சூழலில் கேலக்ஸி எஸ் IIIன் விற்பனை சற்று குறையும் என்று தெரிகிறது. இதைச் சரிக்கட்ட விரைவில் இந்த போனில் ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் இயங்கு தளத்தை அப்டேட் செய்ய இருக்கிறது சாம்சங்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X