Home
Mobile

வந்து 1 மாசம் கூட ஆகாத லேட்டஸ்ட் Samsung 5ஜி போன் மீது ரூ.8000 விலை குறைப்பு.. எந்த மாடல்?

சாம்சங் (Samsung) நிறுவனம் அதன் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களில் ஒன்றான கேலக்ஸி எஸ்26 (Galaxy S26) மாடலின் மீது ஒரு "ரகசிய சலுகையை" (Secret Offer) வழங்குவதாக தெரிகிறது. நீங்கள் ஒரு கடைக்கு சென்று கேட்டால் தவிர, இந்த சீக்ரெட் ஆபர் பற்றி நீங்கள் கேள்விப்பட வாய்ப்பே இல்லை.

ஏனென்றால் ஆன்லைன் (Online) வழியாக, அதாவது சாம்சங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலோ அல்லது முக்கிய இ-காமர்ஸ் தளங்களில் இந்த ஆபர் பற்றி எந்த குறிப்பும் இல்லை, ஆனால் ஆஃப்லைன் (Offline) வழியாக வாங்குபவர்களுக்கு இந்த ஆபர் கிடைக்கிறது. என்ன சலுகை? இதோ விவரங்கள்:

லேட்டஸ்ட் Samsung 5ஜி போன் மீது ரூ.8000 விலை குறைப்பு.. எந்த மாடல்?

கேலக்ஸி எஸ்26 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன், கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ரூ.87,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், மார்ச் 21 முதல் மார்ச் 31 வரை, சில ரீடெயில் ஸ்டோர்களில், மேற்குறிப்பிட்ட அதே ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.79,999 க்கு வாங்க கிடைப்பதாக கூறப்படுகிறது.

இது சாம்சங் கேலக்ஸி எஸ்26 ஸ்மார்ட்போன் மீதான ரூ.8,000 நேரடி விலை குறைப்பாகும். இந்த ஆபரில் உள்ள சூட்சமம் என்னவென்றால், இது ரொக்கமாக மட்டுமே (Cash Only) செலுத்தக்கூடிய ஆபர் ஆகும். மேலும் இந்த ஆபர் வெளிப்படையாக விளம்பரப்படுத்தப்படவில்லை என்பதால் இந்த சலுகை உங்களுக்கு அருகில் இருக்கும் ரீடெயில் ஸ்டோர்களில் கிடைக்கிறதா என்பதை நேரடியாக கடை ஊழியர்களிடம் கேட்க வேண்டியிருக்கும்.

இந்த சீக்ரெட் ஆபர் குறித்த விவரங்களை முதலில் பகிர்ந்தது டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் தான் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான வாடிக்கையாளர்கள் "வசதியான மற்றும் எளிமையான" பர்சேஸிற்காக அமேசான் இந்தியா அல்லது பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் தளங்களையே அணுகுகின்றனர். ஆக அவ்வப்போது ரீடெயில் ஸ்டோர் கூட்டாளர்களை தக்கவைத்து கொள்ள, இதுபோன்ற ஸ்டோர் ஆபர்கள் (Store Offers) அறிவிக்கப்படுவது வழக்கம் தான்.

OPINION - இந்த சீக்ரெட் ஆபரை பயன்படுத்தி கொள்ளலாமா? கேலக்ஸி எஸ்26 சீரிஸ் ஆனது அனைத்து மாடல்களிலும் குறிப்பிடத்தக்க விலை உயர்வுகளுடன் அறிமுகமானது (முந்தைய மாடல்களுடன் ஒப்பிடும் போது). முன்பதிவு செய்தவர்கள் ஸ்டோரேஜ் அப்கிரேட் மற்றும் அறிமுக சலுகைகள் மூலம் சில கூடுதல் பலன்களை பெற்றனர்.

ஆனால் ஆபர் காலத்திற்கு பிறகு முழு விலையில் எஸ்26 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை வாங்கியவர்கள் "விலை உயர்வை" ஒரு குறையாகவே பார்க்கின்றனர். இந்த கட்டத்தில் தான் ரீடெயில் ஸ்டோர்களில் கிடைக்கும் சீக்ரெட் ஆபர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மேலோட்டமாக பார்த்தால் ரூ.8000 தள்ளுபடி என்பது நல்ல ஆபர் தான்!

ஆனால் ஒரு கடைக்கு சென்று ஆன்லைன் பேமண்ட் (Online Payment) எதுவும் இல்லாமல், ரொக்கமாக பணம் செலுத்தினால் மட்டுமே இந்த ஆபர் கிடைக்கும் (அதுவும் எல்லா கடைகளிலும் கிடைக்குமா அல்லது கிடைக்காதா என்பது தெரியாது என்றால்) - உண்மையில் இது அவ்வளவு சிறப்பான ஆபராக தோன்றுவதில்லை.

ஒருவேளை இந்த ஆபர் உங்களுக்கு அருகில் இருக்கும் கிடைத்தாலும் ஸ்டாக்கை (கையிருப்பை) பொறுத்து தான் கேலக்ஸி எஸ்26 ஸ்மார்ட்போனின் கிடைக்கும் தன்மையும் இருக்கும் என்பது இன்னொரு சிக்கல். எல்லாவற்றை விட முக்கியமாக நீங்கள் வாய் விட்டு கேட்டாலே தவிர, சில ரீடெயில் விற்பனையாளர்கள் இந்த ஆபர் பற்றி குறிப்பிடாமல், உங்களுக்கு ஒரு ஸ்மார்ட்போனை விற்கவும் வாய்ப்புள்ளது

வெகு சிலருக்கு ரொக்கமாக கொடுப்பதில் எந்த சிக்கலும் இருக்காது. அவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த சலுகை மார்ச் மாத இறுதி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், ஏற்கனவே எஸ்26 மாடலை வாங்க நினைத்திருந்தால், அருகிலுள்ள கடைக்கு சென்று இந்த ஆபர் குறித்து விசாரிப்பது நல்லது

அதற்கு முன்பாக ஆன்லைன் வழியாக தற்போது கிடைக்கும் வங்கி சலுகைகள் அல்லது எக்ஸ்சேஞ்ச் சலுகைகளுடன் மேற்கண்ட சீக்ரெட் ஆபரை ஒப்பிட்டு பார்ப்பதையும் உறுதிப்படுத்தி கொள்ளுங்கள், ஏனெனில் சில நேரங்களில் நாம் எதிர்பார்ப்பதை விட அதிக ஆபர் அல்லது டிஸ்கவுண்ட் ஆன்லைன் வழியாகவே அல்லது இகாமர்ஸ் தளங்களில் கிடைக்கும்.

சாம்சங் கேலக்ஸி எஸ்26 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120 ஹெர்ட்ஸ் 6.3-இன்ச் FHD பிளஸ் டைனமிக் AMOLED 2X டிஸ்பிளே
- சாம்சங்கின் சொந்த 2என்எம் எக்ஸினோஸ் 2600 சிப்செட்
- ட்ரிபிள் ரியர் கேமரா
- 50எம்பி ப்ரைமரி வைட் ஆங்கிள் கேமரா (எப்/1.8, OIS)

- 10எம்பி டெலிபோட்டோ கேமரா (எப் /2.4, OIS, 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம்)
- 12எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா (எப்/2.2, 120 டிகிரி பீல்ட் ஆப் வியூ)
- 12எம்பி செல்பீ கேமரா (எப்/2.2, 26மிமீ போக்கல் லெங்த்)
- 4300mAh லித்தியம்-ஐயன் பேட்டரி
- 25W வயர்டு சார்ஜிங்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Secret Offer Galaxy S26 Rs 8000 Price Drop in Offline Stores But There is a Catch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X