மிரட்டும் வடிவமைப்பில் எஸ்8, எஸ்8 ப்ளஸ் - "எல்லாமே" வெளியானது.!
வெளியீட்டு தேதி நெருங்குவதையொட்டி சாம்சங் எஸ்8 மற்றும் எஸ்8 ப்ளஸ் கருவிகளின் அனைத்து அதிகாரப்பூர்வமான புகைப்படங்களும் வெளியானது.!
பேட்டரி வெடிப்பு போன்ற சம்பவங்களால் பாழாய்ப்போன சாம்சங் நிறுவனத்தின் பிராண்ட் பெயரை அதன் அடுத்த வெளியீடான எஸ்8 மற்றும் எஸ்8 ப்ளஸ் அறிமுகம் மீட்டெடுக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். நியூயார்க் நகரில் வரும் மார்ச் 29-ஆம் தேதி மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்களான கேலக்ஸி எஸ்8 அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இதனை தொடர்ந்து சாதனம் பற்றிய முழு பெருமைகள், அதன் தோற்றம், விவரக்குறிப்பு, அம்சங்கள் மற்றும் விலை ஆகிய அனைத்துமே வெளியாகிவிட்ட நிலையில் இப்போது அதன் அனைத்து அதிகாரப்பூர்வமான புகைப்படங்களும் வெளியாகி உள்ளது.

அமோஎல்இடி
எதிர்வரும் இந்த சாதனம் பற்றிய அண்மை தகவலின்கீழ் கேலக்ஸி எஸ்8 ஒரு 5.8 அங்குல (2960 X 1440 பிக்சல்கள்) சூப்பர் அமோஎல்இடி காட்சி கொண்டிருக்கும்.

ப்ளஸ் மாறுபாடு
உடன் இந்த தொலைபேசி ப்ளஸ் மாறுபாட்டில் ஒரு 6.2 அங்குல (2960 X 1440 பிக்சல்கள்) காட்சி கொண்டு வெளியாகும்.

ரேம்
இரண்டு மாதிரிகளுமே எக்சிநோஸ் 8895 அல்லது ஸ்னாப்டிராகன் 835 செயலி கொண்ட 4ஜிபி ரேம் இணைந்து இயக்கப்படலாம் மற்றும் மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக விரிவாக்கம் ஆதரவு கொண்ட 6ஜிபி உள்ளடக்க சேமிப்பை வழங்குகிறது.

ஆண்ட்ராய்டு
உடன் இந்த் ஸ்மார்ட்போன்கள் ஒரு 12எம்பி பின்புற சென்சார் மற்றும் ஒரு 8எம்பி முன்பக்க சென்சார் கொண்டிருக்கும் மற்றும் சமீபத்திய ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் கொண்டு இயங்கும்.

பேட்டரி
கேலக்ஸி எஸ்8 ஒரு 3000எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது; மறுபுறம், எஸ்8 பிளஸ் ஒரு 3500எம்ஏஎச் கொண்டிருக்கலாம்.

ஸ்கேனர்
உடன் இந்த மாதிரிகளில் ஒரு கருவிழி படலம்-ஸ்கேனர் மற்றும் டிஜிட்டல் குரல் உதவியாளர் (Bixby) இடம்பெறலாம். எனினும், இந்த கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள் முந்தைய மாதிரிகளை போல் இல்லாமால் ரியர் சென்சார் பொத்தான் கொண்டிருக்கும்.

விலை நிர்ணயம்
கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி எஸ்8+ ஆகிய கருவிகள் "பிளாக் ஸ்கை," "ஆர்க்கிட் கிரே" மற்றும் "ஆர்க்டிக் சில்வர்" ஆகியுய நிற மறுபாடுகளில் முறையே சுமார் ரூ.58,000/- மற்றும் சுமார் ரூ.65,000/- என்ற விலை நிர்ணயம் பெறலாம்.

மேலும் படிக்க
சியோமி மி 6 மற்றும் மி 6 ப்ளஸ் (விலை, மாறுபாடுகள், அம்சங்கள்).!?


Click it and Unblock the Notifications