சாம்சங் வருகையால் பீதி : விலைக்குறைப்பு, புதிய அறிமுகம் என அச்சத்தில் ஆப்பிள்.!

Written By:

ஒருபக்கம் மிகவும் எதிர்பார்க்கப்படும் சாம்சங் எஸ்8 கருவிக்காக வாடிக்கையாளர்களாகிய நாம் ஆவலோடு காத்துக்கொண்டு கிடக்கிறோம் மறுபக்கம் அதே சாம்சங் எஸ்8 கருவியின் அறிமுக நாள் நெருங்குவதையொட்டி பீதியில் உறைந்துபோய் கிடக்கும் ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் மற்றும் ஐபாட் ஆகிய கருவிகளின் மீது விலைக்குறைப்பை நிகழ்த்தியதோடு நில்லாமல் அட்டகாசமான புதிய வண்ணத்திலான ஐபோன் 7 மற்றும் 7 ப்ளஸ் ஆகிய கருவிகளை அறிமுகம் செய்துள்ளது.

அப்படியாக சாம்சங் வருகையால் பீதி கொண்ட ஆப்பிள் நிறுவனம் என்னென்ன நடவடிக்கைகளையும், என்னென்ன கருவிகளில் என்னென்ன விலைக்குறைப்புகளையும், என்னென்ன அறிமுகங்களையும் நிகழ்த்தியுள்ளது என்பதை பற்றிய விரிவான தொகுப்பே இது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
புதிய சிவப்பு

புதிய சிவப்பு

வரும் மார்ச் 29-ஆம் தேதி சாம்சங் நிறுவனத்தின் எஸ்8 கருவி வெளியாகிறது. அதன் விளைவாய் நேற்று (செய்வாய்க்கிழமை) ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 7 மற்றும் 7 பிளஸ் கருவியின் ஒரு புதிய சிவப்பு நிற மாறுபாட்டை அறிமுகம் செய்துள்ளது.

விலையேற்றம் செய்யாமல் அறிமுகம்

விலையேற்றம் செய்யாமல் அறிமுகம்

உடன் சமீபத்தில் அதன் ஐபோன் எஸ்இ கருவியின் அதிக அளவிலான சேமிப்பு மாதிரிகளை விலையேற்றம் செய்யாமல் அறிமுகம் செய்ததும் குறிப்பிடத்தக்கது உடன் ஒரு புதிய வீடியோ எடிட்டிங் டூல் கொண்ட ஒரு புதிய ஐபாட் கருவியையும் அறிமுகம் செய்துள்ளது.

எய்ட்ஸ் நோய்

எய்ட்ஸ் நோய்

இந்த லிமிடெட் எடிஷன் ஆன சிவப்பு ஐபோன்கள் ஆனது எய்ட்ஸ் நோய்க்கு திரான உலகளாவிய போராட்டத்தின் நிதி பங்களிபிற்காக நிகழ்த்தப்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது. உடன் இந்த சிவப்பு நிற கருவிகள் மீதான பணி சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டுவிட்டது என்றும் கூறியுள்ளது.

இந்தியாவிலும்

இந்தியாவிலும்

மார்ச் 24-ஆம் தேதி உலகம் முழுவதிலும் உள்ள ஆன்லைன் கடைகளில் கிடைக்கும் இந்த ரெட் ஐபோன் 7 மற்றும் 7 ப்ளஸ் கருவிகளின் 128ஜிபி மற்றும் 256ஜிபி பதிப்புகள் சுமார் ரூ.49,000/- என்ற விலை நிர்ணயத்தில் தொடங்கலாம். தொலைபேசிகள் அதே தினத்தில் இந்தியாவிலும் கிடைக்கும்.

அதே விலையில் அறிமுகம்

அதே விலையில் அறிமுகம்

பழைய சேமிப்பு வகைகளான 16 ஜிபி மற்றும் 64 ஜிபி மாடல்களுக்கு பதிலாக ஐபோன் எஸ்இ கருவிகளின் புதிய 32 ஜிபி மற்றும் 128ஜிபி மாறுபாடுகள் அதே விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இக்கருவிகளும் மார்ச் 24-ஆம் தேதி முதல் சுமார் ரூ.26,000/- என்றவொரு ஆரம்ப விலையில் கிடைக்கும்.

மலிவான விலை

மலிவான விலை

உடன் ஆப்பிள் நிறுவனம் வரும் வெள்ளிக்கிழமை அன்று பழைய ஐபாட் ஏர் 2 கருவிக்கு மாற்றாக வெறும் 329 டாலர்கள் என்ற ஒரு மலிவான விலையில் 9.7 அங்குலம் கொண்ட ஐபாட் ஒன்றை விற்பனை செய்யவுள்ளது.

அம்சங்கள்

அம்சங்கள்

இந்த புதிய ஐபாட் ஆனது 32 ஜிபி சேமிப்பு மற்றும் ஒரு ஆப்பிள் ஏ 9 சிப் மற்றும் பழைய தொடர் உடன ஒப்பீட்டளவில் வெளிச்சமாக இருக்கும் மற்றும் ஒரு 9.7 அங்குல ரெட்டினா டிஸ்ப்ளே கொண்டு மூன்று வண்ணங்களில் கிடைக்கும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ரூ.5000/- கேஷ்பேக் ஆபருடன் அதிரடி விலைக்குறைப்பில் ஐபோன் எஸ்இ.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Samsung S8 effect? Apple cuts prices on iPhone SE, iPad, launches RED iPhone 7 & 7 Plus. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot