டியூவல் சிம் வசதியுடன் புதிய ஆன்ட்ராய்டு சாம்சங் ஸ்மார்ட்போன்!

ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த நிறைய வாடிக்கையாளர்கள் விரும்புகின்றனர். அதே சமயம் டியூவல் சிம் நெட்வொர்க் வசதி கொண்ட ஸ்மார்ட்போனாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பதால் இங்கே ஒரு புதிய ஸ்மார்ட்போனை உருவாக்கி இருக்கிறது சாம்சங்.
எஸ்-5222 என்ற ஸ்மார்ட்போன் மூலம் புதிய வசதிகளை வழங்க உள்ளது சாம்சங். இந்த ஸ்மார்ட்போனின் வசதி பற்றிய பட்டியலில் முதலில் கூற வேண்டியது, இது ஒரு டியூவல் சிம் நெட்வொர்க் வசதி கொண்ட ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன். இந்த வசதியை கொண்டதற்காகவே வாடிக்கையாளர்களிடம் இருந்து பெரிய வரவேற்பை நிச்சயம் சாம்சங் எஸ்-5222 ஸ்மார்ட்போன் பெறும்.
இது வி2.1 ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டது. இந்த ஓஎஸ் எளிதாக இயங்க 1ஜிகாஹெர்ட்ஸ் கார்டெக்ஸ் ஏ-8 பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. தொடுதிரை வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் திரை, பயன்படுத்த வசதியாக இருக்க வேண்டும் என்பதற்காக இதில் 3.0 இஞ்ச் அகன்ற திரை வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் 280 X 320 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் தரும்.
சிறந்த கேமரா வசதியை தரும் உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட கேமராவினை தான் எல்லா வாடிக்கையாளர்களும் எதிர் பார்க்கின்றனர். அதனால் இதில் 3 மெகா பிக்ஸல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 1ஜிபி வரை இன்டர்னல் மெமரி வசதிக்கு சப்போர்ட் செய்யும் எஸ்-5222 ஸ்மார்ட்போனில், 16ஜிபி வரை எக்ஸ்டர்னல் மெமரியை விரிவுபடுத்தி கொள்ளலாம்.
இதற்கு இதன் மைக்ரோஎஸ்டி கார்டு ஸ்லாட் துணை புரிகிறது. 350 மணி நேரம் ஸ்டான்-பை டைம் கொடுக்கும், 1,000 எம்ஏஎச் பேட்டரி இதில் உள்ளது. இந்த சாம்சங் எஸ்-5222 ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,000மாக இருக்கும்.


Click it and Unblock the Notifications