சாம்சங் S4 ன் சிறப்பு அம்சங்கள்

By Keerthi
|

ஸ்மார்ட்போன் உலகின் ஜாம்பவானான சாம்சங் புதிதாக அறிமுகபடுத்தியுள்ள கேலக்ஸி S4, ஆண்ராய்டு உலகில் ஒரு மைல்கல் என்றே கூறலாம். அந்த அளவுக்கு இதில் பல சிறப்பம்சங்கள் உள்ளன.

இதில் ஆண்ராய்டு 4.2.2 ஜெல்லீ பீன் OS உள்ளது. 13 எம்.பி கேமராவுடன் கூடிய இந்த செல்போன் மிகத் துல்லியமாக படங்களை எடுக்கக் கூடியது.

Click Here For New Samsung Galaxy S4 Gallery

சாம்சங் S4 ன் சிறப்பு அம்சங்கள்

Click Here For New Samsung Galaxy S4 Gallery

சாம்சங் இந்த ஆண்டு மார்ச்சில் தான் இந்த செல்போன் குறித்த தனது அறிவிப்பை வெளியிட்டது. சொன்ன மாதிரியே ஏப்ரலில் இந்த மொபைலை சந்தைக்குக் கொண்டு வந்துவிட்டது.

எதிர்பார்த்ததைப் போலவே இது பெரும் வரவேற்பையும் பெற்றுவிட்டது. மேலும் ஆண்ட்ராய்ட் சந்தையில் இது தனக்கான ஒரு நிரந்தர இடத்தையும் பெற்றுவிட்டது என்றே கூறலாம்.

வரும் மாதங்களில் 10 கோடி ஸ்மார்ட்போன்களை விற்க சாம்சங் திட்டமிட்டுள்ளது.

கேலக்ஸி முன்று மாடல்களில் கிடைக்கிறது. இவை ஆக்டா ப்ராஸஸரில் இயங்ககூடியது. ஆக்டா ப்ராஸஸர் அதி விரைவாக இயங்ககூடியது. இதில் புல் எச்டி சூப்பர் ஸ்கிரீன் உள்ளது. இந்த ஸ்கீரின் பிக்ஸல்ஸ் 441.46!. இது மிகத் துல்லியமான கிளாரிடியைத் தரக்கூடியது.

16 ஜிபி இன்பில்ட் மெமரி உள்ளது. அதே நேரத்தில் 64 ஜிபி வரையிலான மெமரி கார்டையும் பயன்படுத்தலாம். இதன் சிறப்பம்சம் என்னவென்றால் 13 எம்.பி கேமரா மிக துல்லியமாக படம் பிடிக்கும் திறன் கொண்டதோடு, ஆட்டோபோகஸுடன் கிடைக்கிறது.

இதனுடன் LED FLASH மற்றும் 1080P அளவிலான வீடியோ ரெக்கார்டிங் வசதியும் உண்டு.

மற்றுமொர் சிறப்பம்சம் இதன் ஸ்டீரியோ ஆடியோ எபெக்ட், மிகத் துல்லியமான ஒலியை நமக்கு தருகிறது.

சாம்சங் கேலக்ஸியின் விலை ரூ. 43,000 முதல் ரூ. 45,000 வரை மாடலை பொறுத்து.

சாம்சங் கேலக்ஸி சிறப்பம்சங்கள்:

  • 2GB ரேம்
  • WI-FI டைரக்ட் DLNA.
  • ஸ்டாண்டார்டு 3.5MM ஆடியோ ஜாக் உள்ளது.
  • USB போர்ட் மேம்படுத்தப்பட்டுள்ளது
  • LI-ION 2600mAh பேட்டரி பேக்கப் உள்ளது.
Best Mobiles in India

Read more about:

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X