4 கேமரா கொண்ட சாம்சங் ஸ்மார்ட் போன் அறிமுகம்.! எப்போ? எங்கன்னு தெரியுமா?

|

உலக எலெக்ட்ரோனிக்ஸ் சந்தையில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கும் சாம்சங் நிறுவனம் தனது அடுத்த புதிய கேலக்ஸி மாடலலை அறிமுகம் செய்ய போவதாகத் தகவல் வட்டாரங்கள் தெரிவித்து வந்த நிலையில், தற்போது அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

4 கேமரா கொண்ட சாம்சங் ஸ்மார்ட் போன் அறிமுகம்.! எப்போ? எங்கன்னு தெரியும

சாம்சங் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தனது அடுத்த அறிமுக விழாவிற்கான அறிவிப்பை இன்று டிவீட் செய்திருக்கிறது. இதன் படி சாம்சங் இன் அறிமுக விழா வரும் அக்டோபர் 11, 2018 ஆம் தேதி நடைபெறும் என்று உறுதி செய்திருக்கிறது.

"4எக்ஸ் ஃபன்"

சாம்சங் இன் இந்த அறிமுக விழாவிற்கான அழைப்பு பதிவு "4எக்ஸ் ஃபன்(4X Fun)" என்று டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்துடன் சாம்சங் நிறுவனம் சந்தோஷத்திற்கான நேரம் துவங்கட்டும் என்ற அடைமொழியுடன் டிவீட் செய்யப்பட்டுள்ளது.

நான்கு கேமரா ஸ்மார்ட் போன்

நான்கு கேமரா ஸ்மார்ட் போன்

இந்த டிவீட் சாம்சங் ரசிகர்களை உண்மையிலேயே சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. காரணம் என்னவென்றால் வெகு நாட்களாகச் சொல்லப்பட்டு வந்த சாம்சங் நிறுவனத்தின் நான்கு கேமரா கொண்ட ஸ்மார்ட் போன், இந்த விழாவில் அறிமுகம் செய்யப்படுமென்ற எதிர்பார்ப்பு தான் என்று சொல்லவேண்டு.

கேலக்ஸி ஈவென்ட்

கேலக்ஸி ஈவென்ட்

அன்மையில் நடந்த சாம்சங் கலந்தாய்வில் கூறப்பட்டது என்னவென்றால், சாம்சங் இன் புதிய கேலக்ஸி மாடல் அக்டோபர் 11 இல் நடக்கவிருக்கும் "ஏ கேலக்ஸி ஈவென்ட்(A Galaxy Event)" இல் மக்களுக்கு அறிமுகம் செய்யப்டுதுன்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ட்ரிபிள் கேமர-சாம்சங் கேலக்ஸி ஏ

ட்ரிபிள் கேமர-சாம்சங் கேலக்ஸி ஏ

இந்த விழாவில் சாம்சங் நிறுவனத்தின் முதல் நான்கு கேமரா கொண்ட ஸ்மார்ட் போன் அறிமுகம் செய்யப்படும். அத்துடன் சாம்சங் நிறுவனம் ட்ரிபிள் கேமரா செட்டப் உடன் கூடிய 32 மெகா பிக்சல் பின் கேமரா சென்சார் கொண்டன சாம்சங் கேலக்ஸி ஏ(Samsung Galaxy A 2018) எடிஷனை அறிமுகம் செய்யுமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கேலக்ஸி ஈவென்ட் சாம்சங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் நேரடி ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என்று நிறுவனம் தெரிவித்திருக்கிறது

Best Mobiles in India

English summary
Samsung's smartphone with four cameras may launch on October 11 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X