ஆப்பிள் ஐபோன்களை காலி செய்ய சீன அரசாங்கத்திற்கு இவ்ளோ ஆர்வமா.?

ஒன்று க்வால்காம் ஸ்னாப்டிராகன் 845 கொண்டும் மற்றொன்று சாம்சங் எக்ஸிநோஸ் 9810 கொண்டும் இயங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

|

சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் மீதான ஆர்வம் களைகட்டியுள்ளது. ஏனெனில் மிகவும் எதிர்பார்க்கப்படும் சாம்சங் நிறுவனத்தின் அடுத்தகட்ட ஸ்மார்ட்போன் ஆன கேலக்ஸி நோட் 9 ஆனது உலகின் மிகப்பெரிய சந்தையில் - சீனாவில் - வெளியாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐபோன்களை காலி செய்ய சீன அரசாங்கத்திற்கு இவ்ளோ ஆர்வமா.?

எந்தவிதமான லீக்ஸ் தகவல்களையும் தவறவிடாத கழுகு கண்களை கொண்ட டச்சு தளமான LetsGoDigital மூலம் வெளியாகி உள்ள தகவலின் படி, சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஆனது மொத்தம் இரண்டு பதிப்புகளில், சீனாவின் அரசாங்க சான்றிதழ் தளமான சிஎம்ஐஐடி-ல் (சீனா தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் - China Ministry of Industry and Information Technology) காணப்பட்டுள்ளது.

சீனாவின் அரசாங்க தளம் என்பதால், மாடல் எண்களை தவிர்த்து வேறு எந்த விவரங்களையும் (அதாவது பிரதான அம்சங்களை) காண முடியவில்லை. காணப்பட்டுள்ள 'SM-N9600' மற்றும் 'SM-N9608' என்கிற மாடல் எண்களின் படி, சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஆனது இரண்டு மடல்களில், ஒன்று க்வால்காம் ஸ்னாப்டிராகன் 845 கொண்டும் மற்றொன்று சாம்சங் எக்ஸிநோஸ் 9810 கொண்டும் இயங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுவாரசியம் என்னவெனில், இந்த இரண்டு மாடல்களுமே இந்திய சந்தையில் விற்பனைக்கு வர அதிக வாய்ப்புள்ளது. இதற்கு முன்னர் வெளியான தகவல்களில் இருந்து, சாம்சங் கேலக்ஸி நோட் 9-ன் சில அம்சங்களை அறிய முடிகிறது. அதன்படி, சாம்சங் கேலக்ஸி நோட் 9 தான் டிஸ்பிளேவினுள் உட்பொதிக்கப்பட்ட (இன்பில்ட்) கைரேகை சென்சார் கொண்டு வெளியாகும் முதல் "மாஸ்-மார்க்கெட் ஸ்மார்ட்போன்" ஆகும், அதாவது பரந்த அளவிலான மக்களை சென்று அடையக்கூடிய ஒரு ஸ்மார்ட்போன் என்று அர்த்தம்.

ஆப்பிள் ஐபோன்களை காலி செய்ய சீன அரசாங்கத்திற்கு இவ்ளோ ஆர்வமா.?

இது தவிர, கேலக்ஸி நோட் 9-ல் இதுவரை இல்லாத அளவிலான ஒரு மிகப்பெரிய பேட்டரி இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கேலக்ஸி நோட் 7-ல் எழுந்த பேட்டரி பற்றாக்குறை விமர்சனங்களில் இருந்து கற்றுக்கொண்ட ஒரு பாடமாக இருக்கலாம். ஆக மொத்தம், சாம்சங் நிறுவனம் அதன் பழமைவாதம் மிக்க பல அம்சங்களை இம்முறை மாற்றி அமைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இறுதியாக, சாம்சங் அதன் கேலக்ஸி எஸ்9-ல் புதிய புத்திசாலித்தனமான இரட்டை துளையிட்ட பின்புற கேமரா அமைப்பை கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனிற்கும் கொண்டு வரலாம். ஆனால் அதன் செல்பீ கேமராவினுள் சில அதிர்ச்சியூட்டும் மேம்பாடுகள் நிகழ்த்தப்படலாம். வெளியாகவிருக்கும் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஆனது, ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எக்ஸை ஸ்தம்பிக்க வைக்குமா.? எதிர்த்து போராடுமா.? என்பது அதன் விலை நிர்ணயத்தை பொறுத்தே அமையும்.

இதற்கிடையில், சாம்சங் நிறுவனத்தின் சமீபத்திய தலைமை ஸ்மார்ட்போன்களான கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9 ப்ளஸ்- அறிமுகத்தை தொடர்ந்து, தரச்சான்றிதழ் தளமான கீக்பென்ச்சில், மாடல் எண் SM-G8750 என்கிற பெயரின்கீழ் ஒரு புதிய கேலக்ஸி எஸ்9 ஸ்மார்போன் காணப்பட்டது. அது கேலக்ஸி எஸ்9 மினி என்கிற பெயரின்கீழ் வெளியாகும் என்று வதந்திக்கப்படுகிறது. ஆம், பல ஆண்டுகளாக பேசப்பட்டு வரும் கேலக்ஸி மினி தொடர் இந்த ஆண்டு நிச்சயமாக வெளியாகி விடும் என்பது போல் தான் தெரிகிறது. கீக்பென்ச் தளத்தில் காட்சிப்பட்ட இந்த வரவிருக்கும் மினி சாம்சங் ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் சில பட்டியலிடப்பட்டுள்ளது.

சிங்கிள் கோர் டெஸ்டில் 1619 புள்ளிகளையும், மல்டி-கோர் டெஸ்டில் 5955 புள்ளிகளையும் பெற்றுள்ள கேலக்ஸி எஸ்9 மினி ஆனது, 4ஜிபி அளவிலான ரேம் மற்றும் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஓசி உடனான 1.84 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் செயலி கொண்டு இயங்கும்.

நீங்கள் ஆன்லைனில் வாங்குவது திருடப்பட்ட கருவியா..? Simple tips

ஆண்ட்ராய்டு 8.0.0 ஓரியோ ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட இந்த எஸ்9 மினி பற்றிய விலை மற்றும் கிடைக்கும் தன்மை பற்றிய எந்த தகவலும் இல்லை என்பது ஒருபக்க இருக்க, மறுகையில் கேலக்ஸி மினி ஸ்மார்ட்போன் பற்றிய லீக்ஸ் தகவல் வெளியாவது ஒன்றும் முதல் முறையல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளாகவே மினி பதிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டு வருவதும் பின்னர் தள்ளிப்போவதும் வழக்கம் தான் என்பதால், இதை ஒரு நிச்சயமற்ற ஸ்மார்ட்போனாகவே பார்க்க முடிகிறது.

Best Mobiles in India

English summary
Samsung's Galaxy Note 9 Suddenly Confirmed By Chinese Government. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X