Home
Mobile

ஐபோன் எக்ஸ்-க்கு போட்டியாக வெளியாகும் சாம்சங் எக்ஸ் 'போல்டபில்' ஸ்மார்ட்போன்.!

போல்டபில் ஸ்மார்ட்போன்கள் என்பது சாத்தியமானது தானா.? அது உருவாக்கம் பெறுகிறது என்பதற்கான ஆதாரங்கள் ஏதேனும் உண்டா.?

By Muthuraj

2013-ஆம் ஆண்டில் சாம்சங் நிறுவனம் அதன் நெகிழ்வான டிஸ்பிளே கான்செப்ட்டை வெளிப்படுத்தும் முன்புவரை மடங்கக்கூடிய டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போன்கள் சாத்தியமில்லை என்ற கருத்தே நிலவி வந்தது. "முடியாது" என்ற எல்லைகளை தாண்டும் நோக்கம் கொண்டதாய் சாம்சங் நிறுவனம் செயல்பாடுகள் இருந்தாலும் கூட மடங்கும் ஸ்மார்ட்போன்களை பொறுத்தமட்டில் அதன் மீதான எதிர்பார்ப்புகள் கிட்டத்தட்ட இறந்துவிட்டன என்றே கூறவேண்டும்.

ஐபோன் எக்ஸ்-க்கு போட்டியாக வெளியாகும் சாம்சங் எக்ஸ் 'போல்டபில்'.!

இந்நிலைப்பாட்டில் சமீபத்தில் வெளியான தகவலொன்று, சாம்சங்க நிறுவனத்தின் போல்டபில் ஸ்மார்ட்போன்கள் விரைவில் உயிர்பெற இருப்பதாய் அறிவிக்கின்றன. அதென்ன அறிக்கை.? போல்டபில் ஸ்மார்ட்போன்கள் என்பது சாத்தியமானது தானா.? அது உருவாக்கம் பெறுகிறது என்பதற்கான ஆதாரங்கள் ஏதேனும் உண்டா.?

சான்றிதழ் பெற்றுள்ளது

சான்றிதழ் பெற்றுள்ளது

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் போல்டபில் ஸ்மார்ட்போன் ஆனது இப்போது சாம்சங் நிறுவனத்தின் வீட்டு சந்தையில், அதாவது தென் கொரியாவில் சான்றிதழ் பெற்றுள்ளது.

மாடல் எண் எஸ்எம்-ஜி888

மாடல் எண் எஸ்எம்-ஜி888

லெட்ஸ்கோடிஜிட்டல் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின் படி, இந்த தொலைபேசி மாடல் எண் எஸ்எம்-ஜி888 என்ற பெயரை தாங்கி, கொரிய தேசிய வானொலி ஆராய்ச்சி முகமையில் (NRRA) காணப்பட்டுள்ளது.

உலகளாவிய எல்டிஇ தொடர்

உலகளாவிய எல்டிஇ தொடர்

மேலும், தாக்கல் செய்யப்பட்ட சாதனத்தில் "உலகளாவிய எல்டிஇ தொடர்புக்கான ரேடியோ உபகரணங்கள்" உள்ளதென்றும் பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் வைஃபை கூட்டணி ஒன்றிலும் காணப்பட்டுள்ளது.

இடையிலேயான ஒரு சாதனம்

இடையிலேயான ஒரு சாதனம்

துரதிருஷ்டவசமாக, தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் எந்த குறிப்பிடத்தக்க வடிவமைப்பை பெறும் என்ற விவரம் எதுவும் வெளிப்படவில்லை. ஆனால் முன்னர் வெளியான கருத்துக்களின்படி இந்த மடக்கக்கூடிய டிஸ்பிளே தொழில்நுட்பமானது, ஒரு டேப்ளெட் சாதனத்திற்கும் - ஸ்மார்ட்போனுக்கும் இடையிலேயான ஒரு சாதனமாகவும் அறிமுகமாகலாம்.

சாம்சங் கேலக்ஸி எக்ஸ்

சாம்சங் கேலக்ஸி எக்ஸ்

சாம்சங் நிறுவனத்தின் கனவு கருவியான போல்டபில் ஸ்மார்ட்போன் ஆனது "சாம்சங் கேலக்ஸி எக்ஸ்" என்றும் அழைக்கப்படலாம் என்னு சில வதந்திகள் தெரிவிக்கின்றன.

அடுத்த 2018-ல் வெளியாகலாம்

அடுத்த 2018-ல் வெளியாகலாம்

உலகம் முழுவதும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எக்ஸ் அதிகம் பேசப்படும் நிலைபாட்டில் சாம்சங் நிறுவனமும் அதன் எக்ஸ் சாதனம் ஒன்றை அதுவும் போல்டபில் ஸ்மார்ட்போனாக வெளியிடவும் வாய்ப்புள்ளதாகவே தோண்றுகிறது, அதுவும் அடுத்த 2018-ல் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Samsung’s foldable Galaxy phone gets certified in S.Korea, may launch in 2018. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X