Home
Mobile

புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் - சாம்சங் அறிவிப்பு

By Super
புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் - சாம்சங் அறிவிப்பு
மற்ற மொபைல் உற்பத்தியாளர்களையும் வியக்க வைக்கும் வகையில் புதிய ஆன்ட்ராய்டு போனை சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தவிருக்கிறது. எப்போதுமே, சாம்சங் மொபைல்களுக்கு தரத்திற்காகவும் அதன் செயல்திறனுக்காகவும் தேவை அதிகம். அதை மனதில் வைத்து உயர்ந்த தரத்தில் 3ஜி ஆன்ட்ராய்டு சாம்சங் எஸ்- 3770 என்ற புதிய ஸ்மார்ட் போனை களமிறக்குகிறது.

சாம்சங் எஸ்-3770ன் தொடுதிரை டிஎப்டி தொழில் நுட்பத்துடன் 240 X 320 பிக்ஸல் ரிசலூசன் கொண்ட ட்ஸ்பிளேயைக் கொண்டிருக்கும். இதன் யூசர் இன்டர்பேஸ் ஒரு புதிய அனுபவத்தைக் கொடுக்கும். மேலும் இது அசர வைக்கும் பல தரமான சிறப்பம்சங்களுடன் வருகிறது.

குறிப்பாக, இது தரமான படங்கள் எடுக்கக்கூடிய 2 மெகா பிக்ஸல் கேமரைவைக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் நாம் தரமான வீடியோ படங்களை எடுக்க முடியும். இதன் வீடியோ மற்றும் ஆடியோ ப்ளேயர்கள் மூலம் எல்லா வீடியோ மற்றும் ஆடியோ பார்மட்டுகளையும் இயக்க முடியும். மேலும் இதன் எப்எம் ரேடியோ ஆர்டிஎஸ் செயல்பாட்டைக் கொண்டது. மேலும் இதன் 3.5 எம்எம் ஜாக் மூலம் கூடுதல் ஸ்பீக்கர்களை இணைத்துக்கொள்ளலாம். 16 ஜிபி வரை விரிவுபடுத்தக்கூடிய அளவுடன், தக்க இண்டர்னல் மெமரி சேமிப்பைக் கொண்டுள்ளது.

தகவல் பரிமாற்றத் தொடர்பிற்காக சிறந்த ப்ளூடூத் மற்றும் வைஃபை வசதியையும் பெற்றுள்ளது. அதுபோல், 7.2 எம்பிபிஎஸ் அளவு 3ஜி நெட்வொர்க் வசதியையும் வழங்கும். மேலும், ஐஎம், டபுள்யுஎபி, புஷ் இமெயில் போன்ற அனைத்து வசதிகளையும் வழங்கி வாடிக்கையாளர்களைத் திக்குமுக்காட வைக்கப்போகிறது.

பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் செல்லும் வசதிகளும் இந்த மொபைலில் உள்ளது. மின் திறனைப் பார்த்தால் இது, 1,000 எம்ஏஎச் பேட்டரியை பெற்றுள்ளது. அதனால் இது 6 மணி நேரம் பேசும் வசதியை கொடுக்கும். மேலும், இதன் ஸ்டாண்டர்டு பேட்டரி பேக்கப் 350 மணி நேரமாகும். இதன் விலை அறிவிக்கப்படாத நிலையில் இது வாடிக்கையாளர்களின் ஆர்வத்தைக் கிளறிவிட்டிருக்கிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X