சாம்சங் நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.!
சாம்சங் கேலக்ஸி ஏ20 ஸ்மார்ட்போன் இப்போது ஆண்ட்ராய்டு 10 புதுப்பிப்பைப் பெறுவதாக கூறப்படுகிறது. புதுப்பிப்பு சமீபத்திய பிழைத்திருத்தங்கள் மற்றும் மார்ச் 2020 ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்புடன் சமீபத்திய ஒன்யூஐ 2.0 ஐக் கொண்டுவருகிறது.

இந்த புதுப்பிப்பு இப்போது ரஷ்யா, உக்ரைன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளில் வெளிவருவதாக சாம்மொபைல் தெரிவித்துள்ளது. இந்த புதுப்பிப்பு எதிர்வரும் நாட்களில் மற்ற நாடுகளை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் சாம்சங்
கேலக்ஸி ஏ20 ஸ்மார்ட்போனிற்கான ஒன் யுஐ 2.0 உடன் ஆண்ட்ராய்டு 10 கிடைப்பதற்கான காலக்கெடு இன்னும் அறியப்படவில்லை

சாம்சங் கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எச்டி பிளஸ் இனிபினிட்டி-வி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1560 * 720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 450எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் +8எம்பி செகன்டரி சென்சார் +5எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ்,செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகள் இவற்றில் இடம்பெற்றுள்ளது.

ஆதரவுகள் கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் வாட் பாஸ்ட் சார்ஜிங் உள்ளது, 4ஜி வோல்ட்இ,யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications