Home
Mobile

அவசரபட்டியே குமாரு.. இந்த தகவலை Samsung Galaxy S25 விற்பனைக்கு வர்றதுக்கு முன்னாடி சொல்லி இருக்க கூடாதா?

சாம்சங் (Samsung) நிறுவனம் தனது லேட்டஸ்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களான கேலக்ஸி எஸ்25 சீரிஸின் விற்பனையை தொடங்கி சில நாட்கள் தான் ஆகின்றது. இந்த சீரீஸின் கீழ் மொத்தம் 3 மாடல்கள் அறிமுகமாகின: கேலக்ஸி எஸ்25, கேலக்ஸி எஸ்25 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா.

தற்போது இந்த 3 ஸ்மார்ட்போன்களுமே சாம்சங் வலைத்தளம், அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ஆப்லைன் ரீடெயில் ஸ்டோர்கள் வழியாக விற்பனையாகி வருகின்றன. இதற்கிடையில் அடுத்துவரும் கேலக்ஸி எஸ்26 சீரீஸ் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த தகவல் "அடப்பாவி சாம்சங், கேலக்ஸி எஸ்25 சீரீஸ் விற்பனைக்கு முன்னாடி இதை சொல்லி இருக்க கூடாதா?" என்று கேட்கத்தூண்டும் படியாக உள்ளது.

Galaxy S25 விற்பனைக்கு வர்றதுக்கு முன்னாடி இதை சொல்லி இருக்க கூடாதா?

ஒரு புதிய அறிக்கையானது, சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி எஸ்26 சீரீஸ் வழியாக அதன் எக்ஸினோஸ் சிப்களை மீண்டும் கொண்டு வர உள்ளதாம். திபெல் (TheBell) வழியாக எங்களுக்கு கிடைத்துள்ள சமீபத்திய அறிக்கையின்படி, தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் அதன் எக்ஸினோஸ் சிப்பிகளை மீண்டும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

இவைகள் அடுத்த 2026 ஆம் ஆண்டு அறிமுகமாகும் பிரீமியம் ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகம் செய்யப்படலாம் இந்த சிப்செட் எக்ஸினோஸ் 2600 (Exynos 2600) ஆக இருக்கலாம். சாம்சங் நிறுவனம் இந்த சிப்செட்டை அதன் எஸ்எப்2 2என்எம் ப்ராசஸை பயன்படுத்தி உருவாக்க போகிறது, இது 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் உற்பத்திக்காக நிலைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சிப்செட் ஆனது ஸ்மார்ட்போனின் செயல்திறனை 12% ஆகவும், ஆற்றல் செயல்திறனை 25% ஆகவும் மேம்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது 3என்எம் எஸ்எப்3 உடன் ஒப்பிடும்போது 5% சிறியதாகவும் இருக்கும். எல்லாம் சரியாக நடந்தால் இப்பொது விற்பனையாகும் சாம்சங் கேலக்ஸி எஸ்25 சீரீஸை விட சாம்சங் கேலக்ஸி எஸ்26 சீரீஸ் ஆனது வேற லெவல் பெர்பார்மென்ஸை வழங்கும்.

கேலக்ஸி எஸ்25 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: 6.2-இன்ச் டிஸ்ப்ளே, 12 ஜிபி ரேம், 256 ஜிபி மற்றும் 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், மிதமான பயன்பாட்டின் கீழ் ஒரு நாள் முழுவதும் நீடிக்கும் 4,000mAh பேட்டரி, முன் மற்றும் பின் இரண்டிலும் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரொடெக்ஷன்.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 ஸ்மார்ட்போனின் இந்திய விலை (Samsung Galaxy S25 Price in India) விவரங்கள்:
12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.80,999
12 ஜிபி ரேம் +512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.92,999

கேலக்ஸி எஸ்25 பிளஸ் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: 6.7-இன்ச் டிஸ்பிளே, 4,900mAh பேட்டரி, 12ஜிபி ரேம் மற்றும் 256GB மற்றும் 512GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள், வெண்ணிலா எஸ்25 மாடலில் உள்ளதை போலவே 50 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் + 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 10 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 12 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா..

சாம்சங் கேலக்ஸி எஸ்25 பிளஸ் ஸ்மார்ட்போனின் இந்திய விலை (Samsung Galaxy S25 Plus Price in India) விவரங்கள்:
12 ஜிபி ரேம் +256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.99,999
12 ஜிபி ரேம் +512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.1,11,999

கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: பெரிய 6.9 இன்ச் டிஸ்ப்ளே, எஸ் பென் சப்போர்ட், டைட்டானியம் பில்ட் மற்றும் கார்னிங்கின் கொரில்லா ஆர்மர் 2 பாதுகாப்பு, 5000mAh பேட்டரி, 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி, 512 ஜிபி மற்றும் 1 டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள், 200 மெகாபிக்சல் பிரைமரி சென்சார்.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் இந்திய விலை (Samsung Galaxy S25 Ultra Price in India) விவரங்கள்:
12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.1,29,999
12ஜிபி ரேம் + 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ. 1,41,999
12ஜிபி ரேம் + 1 டிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ. 1,65,999

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Returning to Exynos Chipset Galaxy S26 Series Pack Exynos 2600 Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X