Home
Mobile

ஆன்ட்ராய்டு வசதிகளை அழகாய் சுமந்து வரும் சாம்சங் போன்!

By Super
ஆன்ட்ராய்டு வசதிகளை அழகாய் சுமந்து வரும் சாம்சங் போன்!

ரெப் என்ற ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி உள்ளது சாம்சங் நிறுவனம். இந்த புதிய ஸ்மாட்ர்போன் ஆன்ட்ராய்டு வசதிகளை அருமையாக கொடுக்கும் என்று கருதப்படுகிறது.

இந்த ரெப் மொபைல் 3.2 இஞ்ச் எல்இடி டச் ஸ்கிரீன் வசதி கொண்டது. இதன் வெளித் தோற்றமே அனைவரையும் கவரும் வகையில் இருக்கிறது. சிறந்த தொழில் நுட்பத்தினை கொடுக்க இருக்கும் இந்த மொபைல் மிக குறைந்த விலையில் வரலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.

இந்த சாம்சங் ரெப் மொபைல் ஆன்ட்ராய்டு ஜின்ஜர்பிரீட் இயங்குதளத்தின் மூலம் செயல்படும். வெறும் 105 கிராம் எடை கொண்ட இந்த மொபைல் மிக எளிதாக கையாளக்கூடியதாக இருக்கும். 3.1 மெகா பிக்ஸல் கேமராவினை கொண்ட இந்த மொபைல், சிறந்த துல்லியத்தை வழங்கும்.

இதன் 1X சூம் தொழில் நுட்பத்தின் மூலம் எந்த புகைப்படத்தையும் தெளிவாக பார்க்கலாம். அருமையான வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் பெறலாம்.

இதில் 800 மெகா ஹெர்ட்ஸ் க்யூவல்காம் எம்எஸ்எம் 7627டி பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதன் 2ஜிபி மைக்ரோ கார்டு மூலம் தகவல்களை எளிதாக சேகரித்து கொள்ளலாம். 32ஜிபி வரை இதன் மெமரி வசதியினை விரிவுபடுத்தியும் கொள்ளலாம்.

லித்தியம் அயான் 1,500 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரியினால் 12.5 நாட்கள் டாக் டைம் வசதியினையும் மற்றும் 8 மணி நேரம் ஸ்டான்-பை வசதியினையும் கொடுக்கும்.

இந்த மொபைலில் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயம், இது சிடிஎம்ஏ 800 மற்றும் சிடிஎம்ஏ 1900 செலுலார் நெட்வொர்க் தொழில் நுட்பத்தை சப்போர்ட் செய்யும்.

இதன் யூஎஸ்பி வசதியின் மூலம் அதிக தகவல்களை கணினியில் இருந்து பதிவேற்றம் செய்யது கொள்வதற்கு, ஏதுவாக இருக்கும்.

அதோடு இதில் ஸ்டீரியோ புளூடூத் வசதியும் உள்ளதால் எந்த தகவல்களையும் எளிதாக நண்பர்களுடன் பரிமாறி கொள்ளலாம்.

இந்த மொபைல் ஆன்ட்ராய்டு தொழில் நுட்பம் கொண்டுள்ளதால், ஏராளமான ஆன்ட்ராய்டு அப்ளிக்கேஷன்களை டவுன்லோடு செய்து கொள்ளலாம். இந்தியாவில் இந்த மொபைலின் விலை குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X