Home
Mobile

இதான் டா டிவிஸ்டு.. Samsung Galaxy S27 Series-ல் 4-வது மாடல்.. விலை கம்மியா, அதிகமா?

சாம்சங் (Samsung நிறுவனத்தின் பிளாக்ஷிப் கேலக்ஸி எஸ் சீரிஸ் ஆனது - பொதுவாக பேஸ், பிளஸ் மற்றும் அல்ட்ரா மாடல்கள் என மூன்று ஸ்மார்ட்போன்களுடன் வருகிறது. ஆனால் ​​அடுத்த ஆண்டு வரவிருக்கும் கேலக்ஸி எஸ்27 பேமிலி ஆனது - புதிய கேலக்ஸி எஸ்27 ப்ரோ (Galaxy S27 Pro) வேரியன்ட் உட்பட மொத்தம் நான்கு மாடல்களுடன் அறிமுகமாகும் என்று ஒரு புதிய லீக் தெரிவிக்கிறது.

அதாவது வரவிருக்கும் கேலக்ஸி எஸ்26 சீரீஸில் ஸ்டாண்டர்ட் கேலக்ஸி எஸ்27 (Galaxy S27), கேலக்ஸி எஸ்27 பிளஸ் (Galaxy S27 Plus), கேலக்ஸி எஸ்27 அல்ட்ரா (Galaxy S27 Ultra) மற்றும் புதிய கேலக்ஸி எஸ்27 ப்ரோ ஆகியவைகள் இடம்பெற வாய்ப்புள்ளது.

Samsung Galaxy S27 Series-ல் 4-வது மாடல்.. விலை கம்மியா, அதிகமா?

சாம்சங் நிறுவனம், கேலக்ஸி எஸ்27 ப்ரோவை ஒரு பிரீமியம் மாடலாக நிலைநிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இது அதன் பல அம்சங்களை ஹை-எண்ட் கேலக்ஸி எஸ்27 அல்ட்ராவுடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்புள்ளது. இந்த தகவல் தென்கொரிய ஆன்லைன் தளமான நேவரில் (Naver) இருந்து கிடைத்துள்ளது

எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தவரை, கேலக்ஸி எஸ்27 ப்ரோ மடல் ஆனது 6.4-இன்ச் டிஸ்பிளே கொண்ட ஒரு காம்பாக்ட் மாடலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த போனில் ஒரு புதிய கேமரா சென்சார், ஸ்லிம் டிசைன் மற்றும் கேலக்ஸி எஸ்26 பேஸ் மாடலில் உள்ளதை விட பெரிய பேட்டரி ஆகியவை இடம்பெற வாய்ப்புள்ளது.

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்27 ப்ரோவை, கேலக்ஸி எஸ்27 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்27 அல்ட்ரா மாடல்களுக்கு இடையில் நிலைநிறுத்தக்கூடும். இந்த புதிய ஸ்மார்ட்போன், கேலக்ஸி எஸ்27 அல்ட்ரா மாடலுடன் பெரும்பாலான ஹார்ட்வேர்களை பகிர்ந்துகொள்ளும் ஒரு உயர் ரக மாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ப்ரோ வேரியன்ட் எஸ் பென்-ஐ (S Pen) ஆதரிக்காது என்று கூறப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்26 5ஜி (Samsung Galaxy S26 5G) ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: 6.3 இன்ச் அளவில், ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட Infinity-O Dynamic AMOLED டிஸ்பிளே கிடைக்கிறது. ஸ்மூத் யூசேஜ் கொடுக்க 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் பிரீமியம் அவுட்புட் கொடுக்க மொபைல் டிஜிட்டல் நேச்சுரல் இமேஜ் என்ஜின் தொழில்நுட்பம் கிடைக்கிறது.

டிஸ்பிளே பாதுகாப்புக்காக கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) வழங்கப்பட்டுள்ளது. அதிவேக பர்ஃபாமென்ஸ் கொடுக்க டெகா கோர் எக்ஸினோஸ் 2600 (Deca Core Exynos 2600) பிராசஸர் மற்றும் கேமிங், கிராபிக்ஸ் அவுட்புட் கொடுக்க எக்ஸ்கிளிப்ஸ் 960 ஜிபியு (Xclipse 960 GPU) கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) உள்ளது.

சாம்சங்கின் ஒன் யுஐ 8.5 (One UI 8.5) கிடைக்கிறது. ரியரில் டிரிபிள் செட்டப் (Triple Setup) உள்ளது. 50 எம்பி பிரைமரி கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா (Ultra-Wide Camera), 10 எம்பி டெலிபோட்டோ கேமரா (Telephoto Camera) கிடைக்கிறது. பிரைமரி மற்றும் டெலிபோட்டோ கேமராக்களுக்கு ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி கிடைக்கிறது.

ஆட்டோ போகஸ், 3X ஆப்டிகல் ஜூமிங், 2X ஆப்டிகல் குவாலிட்டி ஜூமிங் மற்றும் 30X டிஜிட்டல் ஜூமிங் கிடைக்கிறது. கூடுதலாக பிரைமரி கேமராவில் 8K வீடியோ ரெக்கார்டிங், நைட்டோகிராபி (Nightography) மற்றும் ஹரிசாண்டல் லாக் (Horizontal Lock) கிடைக்கின்றன. முன்பக்கத்தில் 4K வீடியோ ரெக்கார்டிங் செய்யக்கூடிய 12 எம்பி செல்பீ ஷூட்டர் கொடுக்கப்பட்டு உள்ளது.

4300mAh கேபாசிட்டி கொண்ட பேட்டரி மற்றும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுத்துள்ளது. மொபைல் ஹீட்டாவதை தடுக்க வேப்பர் சேம்பர் (Vapor Chamber) டெக்னாலஜி கொடுக்கப்பட்டுள்ளது. வெறும் 7.2 எம்எம் தடிமன் மற்றும் 167 கிராம் எடை மட்டுமே கொண்டிருப்பதால் லைட் வெயிட் மாடலாக இருக்கிறது. டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்க IP68 ரேட்டிங் உள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Reportedly to launch New Galaxy S27 Pro Under Galaxy S27 Series What to Expect
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X