'எமோஷன் சென்சிங்' தொழில்நுட்பத்துடன் ஸ்மார்ட்போன்: சாம்சங் திட்டம்

Posted By: Staff
'எமோஷன் சென்சிங்' தொழில்நுட்பத்துடன் ஸ்மார்ட்போன்: சாம்சங் திட்டம்

மொபைலுக்கென்று ஒரு தனி உலகமே உருவாகிவிட்டது. அந்த அளவு அதன் தொழில் நுட்பமும் பெருகிவிட்டது. புதிய புதிய தொழில் நுட்பங்களை கொடுத்து அசத்த, மொபைல் நிறுவனங்கள் தயாராகி கொண்டு இருக்கின்றன.

பல சிறந்த படைப்புகளை கொடுத்த சாம்சங் நிறுவனம், உணரும் தன்மையை கொண்ட ஒரு புதிய மொபைலை உருவாக்க திட்டமிட்டு இருக்கிறது. இந்த தகவல் நிச்சயம் வாடிக்கையாளர்களை குஷிப்படுத்தும். ஆப்பிள் ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்போனில் "சிரி" என்ற தொழில் நுட்பம் அனைவரையும் அசத்தியது போல, சாம்சங் உருவாக்க திட்டமிட்டு இருக்கும் இந்த இமோஷன் சென்சிடிவ் ஸ்மார்ட்போனும் வாடிக்கையாளர்கள் மத்தியல் பலத்த வரவேற்பை பெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இந்த புதிய இமோஷன் சென்சிடிவ் தொழில் நுட்பம், உணர்வுகளை புரிந்து கொள்ள கூடிய வல்லமை பெற்றது என்று

தகவல்கள் கூறுகின்றன. இந்த புதிய தொழில் நுட்பம் கேட்பதற்கே ஸ்வாரசியமாகவும், இப்பொழுதே வாங்க வேண்டும் என்ற எண்ணத்தையும் கொடுக்கும். ஆனால் உணர்வுகளை புரிந்து கொள்ளும் இந்த ஸ்மார்ட்போன் வெளியாக சில கால அவகாசம் தேவைப்படுகிறது.

சாம்சங் நிறுவனத்தின் இந்த இமோஷன் சென்சிடிவ் வசதி கொண்ட ஸ்மார்ட்போன் வெளி வந்தால், நிச்சயம் மொபைல் மார்கெட்டையே அதிர செய்யும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி எஸ்-2 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக இருக்கும்.

சாம்சங் நிறுவனத்தின் இந்த புதிய திட்டம் நிறைவான பின்னர் இதை பற்றி இன்னும் அதிக தகவல்களை பார்க்கலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot