விண்டோஸ் இயங்குதளத்தில் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்கள்!

சாம்சங் நிறுவனம் புதிதாக விண்டோஸ் இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதில் ஒடிஸி மற்றும் மேக்ரோ என்ற புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது சாம்சங் நிறுவனம்.
இந்த 2 ஸ்மார்ட்போன்களும் விண்டோஸ்-8 இயங்குதளத்தில் இயங்கும் ஸ்மார்ட்போனாக இருக்கும். சாம்சங் நிறுவனத்தின் ஒடிஸி ஸ்மார்ட்போன் 4.65 இஞ்ச் அகன்ற திரை வசதியினை கொடுக்கும். அகன்ற திரையினை மட்டும் அல்லாது இதில் சிறந்த திரை துல்லியத்தினையும் பெறலாம்.
ஒடிஸி ஸ்மார்ட்போனில் சூப்பர் அமோல்டு திரை தொழில் நுட்பத்தினை எளிதாக பெறலாம். சிறப்பான திரை தொழில் நுட்பத்தினை கொடுக்கும் இந்த ஒடிஸி ஸ்மார்ட்போனில் 8 மெகா பிக்ஸல் கேமராவினை பயன்படுத்தலாம்.
இன்னும் இந்த ஒடிஸி ஸ்மார்ட்போனில் சிறப்பான ஸ்மார்ட்போனில் என்எப்சி தொழில் நுட்பத்தினையும் பெற முடியும். இதில் பணபரிவர்த்தனைகளை எளிதாக பயன்படுத்தலாம்.
இந்த சாம்சங் நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போனான மேக்ரோ ஸ்மார்ட்போன் 4 இஞ்ச் திரையினை வழங்கும். எஸ்-அமோலெட் டபிள்யூவிஜிஏ திரை தொழில் நுட்பத்தினை கொடுக்கும் இந்த ஸ்மார்ட்போன் 5 மெகா பிக்ஸல் கேமராவினை கொடுக்கும்.
திரையிலும், கேமரா வசதியிலும் ஒடிஸி ஸ்மார்ட்போனைவிட சற்று குறைந்ததாக, இந்த சாம்சங் மேக்ரோ ஸ்மார்ட்போன் இருக்கும் என்று கருதப்படுகிறது. இருப்பினும் மேக்ரோ ஸ்மார்ட்போன் சிறந்த தொழில் நுட்ப வசதியினை வழங்கும்.
இங்கு கூறப்படும் 2 ஸ்மார்ட்போன்களுமே 1.5 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸரினை கொண்டதாக இருக்கும். விண்டோஸ்-8 இயங்குதளத்தில் இயங்கும் சாம்சங் நிறுவனத்தின் இந்த புதிய ஸ்மார்ட்போன்கள் எல்டிஇ தொழில் நுட்பத்தினை வழங்கும்.
அதிகமாக ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு வெளியாகும் சாம்சங் ஸ்மார்ட்போன் பட்டியல்களில் இந்த புதிய ஒடிஸி மற்றும் மேக்ரோ விண்டோஸ் ஸ்மார்ட்போன்கள் கொஞ்சம் வித்தியாசமானதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications