Home
Mobile

Selfie கேமராவை தூக்குவது முதல் புதிய Note மாடல் வரை.. Samsung செய்யும் 3 முக்கிய மாற்றங்கள்!

சாம்சங் (Samsung) நிறுவனத்தின் முதல் ட்ரை போல்ட் ஸ்மார்ட்போனின் (Tri Fold Smartphone) மாடல் பெயர் குறித்து, நேற்று வெளியான சூப்பரான தகவலை தொடர்ந்து, தற்போது இன்னொரு சாம்சங் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் (Flagship Smartphone) குறித்த தரமான அப்டேட் வெளியாகி உள்ளது.

சாம்சங் நிறுவனம் அதன் லேட்டஸ்ட் கேலக்ஸி எஸ்25 சீரீஸை (Samsung Galaxy S25 Series) அறிமுகம் செய்து முழுதாக 1 மாதம் கூட ஆகவில்லை. அதற்குள் நெக்ஸ்ட் ஜெனெரேஷன் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா (Samsung Galaxy S26 Ultra) ஸ்மார்ட்போனை பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Samsung செய்யும் 3 முக்கிய மாற்றங்கள்!

கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் எர்லி ப்ரோடோடைப்கள் (Early Prototypes) வழியாக, இந்த ஸ்மார்ட்போனை டிஸ்பிளேவில் செல்பீ கேமராவிற்கான கட்அவுட் இல்லை என்பது காண முடிந்தது. அதற்கான காரணம் தற்போது தெரிய வந்துள்ளது. சாம்சங் தனது அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் அண்டர் டிஸ்பிளே செல்பீ கேமராவை (Under Display Selfie Camera) அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

அண்டர் டிஸ்பிளே செல்பீ கேமரா பற்றிய இந்த வதந்தி உண்மையாக இருந்தால், சாம்சங் போன்களுக்கான வடிவமைப்பு அணுகுமுறையில் இது ஒரு மிகப்பெரிய மாற்றமாக இருக்கும். இந்நிறுவனம் ஏற்கனவே அதன் போல்டபிள் போன்களில் (கேலக்ஸி இசட் ஃபோல்ட் சீரீஸில்)அண்டர் டிஸ்பிளே கேமராக்களை பரிசோதித்துள்ளது. ஆனால் இந்த தொழில்நுட்பம், புகைப்படங்களின் தரத்தில் சமரசம் செய்வதால் அடிக்கடி விமர்சிக்கப்படுகிறது.

ஆக சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி எஸ் 26 அல்ட்ராவில் என்ன செய்ய போகிறது என்பதை பார்க்க சுவாரசியமாக இருக்கும். சாம்சங் அதன் பயனர்களை ஏமாற்றுவதை தவிர்க்க (போட்டோ குவாலிட்டியை அதிகரிக்க) கேமராவின் செயல்திறனை மேம்படுத்த வேண்டும்; குறிப்பாக செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்கு முன்னுரிமை கொடுப்பவர்களை ஈர்க்கும்படி இருக்க வேண்டும். அப்படி இருந்தால் கேலக்ஸி எஸ் 26 அல்ட்ராவின் அண்டர் டிஸ்பிளே செல்பீ கேமரா கண்டிப்பாக ஹிட் அடிக்கும்!

சாம்சங் நிறுவனம் இந்த புதிய டிசைன் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னேறும் பட்சத்தில், ஏற்கனவே இந்திய சந்தைக்கு வெளியே அண்டர் டிஸ்பிளே கேமராக்கள் கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட நுபியா போன்ற பிராண்டுகளுக்கு கடும் நெருக்கடி ஏற்படலாம். சில வதந்திகள் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது கேலக்ஸி எஸ்26 நோட் (Samsung Galaxy S26 Note) என மறுபெயரிடப்படலாம் என்றும் பரிந்துரைக்கின்றன.

ஆகமொத்தம் சாம்சங் சில முக்கிய மற்றும் பெரிய மாற்றங்களை செய்ய திட்டமிட்டுள்ளது போல் தெரிகிறது. முன்னரே குறிப்பிட்டபடி சாம்சங் அதன் முதல் ட்ரை-ஃபோல்ட் ஸ்மார்ட்போனிலும் பணியாற்றி வருகிறது. பலரும் இது இஸட் சீரீஸ்-ன் கீழ் தான் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால் ஒரு சமீபத்திய லீக் ஆனது சாம்சங்கின் ட்ரை-ஃபோல்ட் போன் ஆனது முற்றிலும் புதிய சீரீஸின் கீழ் அறிமுகமாகும் என்பதை பரிந்துரைக்கிறது.

லீக்கர் yeux1122 வழியாக கிடைத்த தகவலின்படி, சாம்சங் அதன் ட்ரை-ஃபோல்ட் போனுக்கு சாம்சங் கேலக்ஸி ஜி ஃபோல்ட் (Samsung Galaxy G Fold) என்று பெயரிடலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் இருபுறமும் மடிக்கும் போது 9.96 இன்ச் அகலமும் 6.54 இன்ச் உயரமும் கொண்டதாக இருக்கலாம் என்றும், இது ஹூவாய் மேட் எக்ஸ்டி மாடலை போலவே 298 கிராம் எடை கொண்டதாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

கேலக்ஸி ஜி ஃபோல்ட் ஸ்மார்ட்போன் ஆனது இடது மற்றும் வலது பக்கங்களில் இருந்து உள்நோக்கி மூடப்படும்படி வடிவமைக்கப்படலாம். இந்த வடிவமைப்பானது மூடப்படும்போது உள்பக்கமாக இருக்கும் டிஸ்பிளேவிற்கு பாதுகாப்பை கொடுக்கும். இந்த ஸ்மார்ட்போனின் பேக் பேனலில் ஒரு சிறிய கவர் டிஸ்பிளேவும் இடம்பெறலாம். இதன் மூலம் ஸ்மார்ட்போனை முழுமையாக திறக்காமலேயே அதை அக்செஸ் செய்ய முடியும்!

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Planning Biggest Changes Under Display selfie camera in Galaxy S26 Ultra
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X