ஸ்மார்ட்போன்களுக்கான புதிய சாட்டிங் சாப்ட்வேர்: சாம்சங் அறிமுகம்

இந்த சாம்சங் சாட்ஆன் அப்ளிக்கேஷன் வசதியை எல்லா ஆன்ட்ராய்டு ப்ளாட்ஃபார்மிலும் அப்லோடு செய்து கொள்ள முடியும். பிளாக்பெர்ரி ஓஎஸ், படா ஆப்பரேட்டிங் சிஸ்டம், ஆப்பிள் ஐஓஎஸ் போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் இந்த சாம்சங் சாட்ஆன் அப்ளிக்கேஷன் வசதியை உபயோகப்படுத்த முடியும்.
இதன் மூலம் ஒரே சமயத்தில், ஒரே மெசேஜை பலபேருக்கு அனுப்ப முடியும். அதேபோன்று, குரூப் கால் என்று கூறப்படும் குழுவினருக்கிடையிலான சாட்டிங் வசதியையும் இந்த சாப்ட்வேர் வழங்கும்.
இந்த வசதியின் ஒரு முக்கிய அம்சம் எஸ்எம்எஸ் கட்டணத்தை குறைக்க முடியும். இதனை ப்ரூப் பேஸிஸ் என்றும் சொல்லலாம்.
இந்த சாட்ஆன் வசதியின் மூலம் டெக்ஸ்ட் டிராயிங், ஃபோட்டோ ஷேரிங், கேலன்டர் ஷேரிங், கான்டாக்ட் அப்ளிக்கேஷன், வீடியோ ஷேரிங் போன்ற ஏராளமான வசதிகளையும் கொடுக்க முடியும்.
இந்த மெசேஜிங் சேவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த வசதியினை எல்லா சாம்சங் ஸ்மார்ட்போனிலும் அப்டேட் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications