ஐபோன் எக்ஸ்-ஐ விட மேம்பட்ட கேலக்ஸி எஸ்9: பிரதான அம்சங்கள் வெளியாகின.!

|

மறைமுகமாக நடந்து வந்த ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு இடையே போட்டியானது, கடந்த 2016-அம ஆண்டிலிருந்து மிகவும் வெளிப்படையாகவே நடக்கிறது. குறிப்பாக ஆன்-ஸ்க்ரீன் கைரேகை சென்சாரை யார் முதலில் தன் கருவிகளில் பொருத்துகிறார்கள் என்ற போட்டி மிக நெருக்கமாக நடந்தது.

ஐபோன் எக்ஸ்-ஐ விட மேம்பட்ட கேலக்ஸி எஸ்9: பிரதான அம்சங்கள் வெளியாகின.!

சாம்சங் அதன் கேலக்ஸி எஸ்8 மற்றும் நோட் 8 தொடரின் பின்னணியில் உடல் உணர்விகளைப் பயன்படுத்தியதால், ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் எக்ஸ்-ல் பேஸ்ஐடி அம்சத்தினை இடம்பெற செய்து போட்டியை முற்றிலும் வேறொரு கோணத்தில் எடுத்துச்சென்றது. இதன் விளைவாக விரல் நுண்ணறிவு அம்சமானது விரைவில் ஸ்மார்ட்போன்களை விட்டு வெளியேற்றப்படும் என்று பலர் நம்புகிறார்கள்.

ஒரு சில மாதங்கள் தொலைவில்

ஒரு சில மாதங்கள் தொலைவில்

இந்த மாற்றத்தை சாம்சங் நிறுவனமும் நிகழ்த்துமென சமீபத்திய அறிக்கையொன்று தெரிவித்துள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் வரவிருக்கும் முமுதன்மை சாதனங்களின் அதிகாரப்பூர்வ வெளியீடு - சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9 ப்ளஸ் வெளியீடு - ஒரு சில மாதங்கள் தொலைவிலேயே உள்ளது. ஆனால் கசிவுகள் மற்றும் வதந்திகள் ஏற்கனவே மேலோட்டமாகத் தொடங்கியுள்ளன.

90% நெருக்கமான திரை - உடல் விகிதம்

90% நெருக்கமான திரை - உடல் விகிதம்

கூறப்படும் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 ப்ளஸ் ஸ்மார்ட்போன்களில் அதன் மேல் மற்றும் கீழ் பெஸல்கள் கணிசமாக குறைக்கப்படுமென தெரிகிறது. அதாவது 90% நெருக்கமான திரை - உடல் விகிதம் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இந்த சாம்சங் தொலைபேசிகளானது ஆப்பிள் ஐபோன் எக்ஸ் சாதனத்தின் பேஸ்ஐடியை விட மேம்பட்ட க்ளியர் ஐடி செக்யூரிட்டி அம்சம் கொண்டுவர வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

க்ளியர் ஐடி

க்ளியர் ஐடி

அதனை உறுதி செய்யும் வண்ணம், உலக புகழ்பெற்ற பாதுகாப்பு நிறுவனமான சினாப்டிக்ஸ் (Synaptics) நேற்று (டிசம்பர் 12) வெளியிட்ட ஒரு அறிவிப்பில் ஆன்-ஸ்க்ரீன் கைரேகை சென்சாரின் அடுத்தக்கட்ட வளர்ச்சி ஒன்றை வெளிப்படுத்தியுள்ளது. கலிபோர்னியாவை அடிப்படையாகக் கொண்ட இந்த நிறுவனம், இந்த புதிய வளர்ச்சியை க்ளியர் ஐடி என்று அழைக்கிறது. மேலும் அந்நிறுவனம் ஒரு முழுமையான செயல்பாட்டுத் திரையில் கைரேகை சென்சரை உருவாக்கியிருப்பதாகவும் உறுதிப்படுத்தியுள்ளது

இன்பினிட்டி டிஸ்பிளே

இன்பினிட்டி டிஸ்பிளே

இருப்பினும் இந்த க்ளியர் ஐடி அம்சமானது, முழு தொடு கண்ணாடி உடனான ஒன்-டச் ஹை-ரெசல்யூஷன் ஸ்கேனிங்கை வழங்குமா.? பொத்தான்கள் இல்லாத ஒரு பெஸல்லெஸ் வடிவமைப்பை உறுதி செய்யுமா.? குறிப்பாக சாம்சங் நிறுவனத்தின் இன்பினிட்டி டிஸ்பிளேவை உறுதி செய்யுமா என்பது சார்ந்த விவரங்கள் ஏதுமில்லை.

கடுமையான விமர்சனங்கள்

கடுமையான விமர்சனங்கள்

இந்த விவரங்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அறிவிக்கப்படலாம். மேம்பட்ட திரை தொழில்நுட்பத்தில் சமரசம் அல்லது தவறான வடிவமைப்பு போன்ற கடுமையான விமர்சனங்களில், சாம்சங் சிக்கி கொள்ள விரும்பாது என்று நம்பலாம்.

பெஸல்லெஸ் திரை

பெஸல்லெஸ் திரை

மறுகையில், கைரேகை சென்சார் "விளையாட்டை" மாற்றியமைக்கும் சினாப்டிக்ஸ் நிறுவனத்தின் புதிய பயோமெட்ரிக் தொழில்நுட்பமானது ஸ்மார்ட்போன் சந்தையில் ஒரு புதிய முன்னோடியாய் திகழும் என்பதிலும், இவ்வகை கைரேகை சென்சார்கள், அதிவேக காட்சி அனுபவத்தை உறுதி செய்யும் பெஸல்லெஸ் திரையை வடிவமைக்க நிறுவனங்களுக்கு உதவும் என்பதிலும் சந்தேகம் வேண்டாம்.

இரட்டை இரட்டை லென்ஸ் கேமரா கட்டமைப்பு

இரட்டை இரட்டை லென்ஸ் கேமரா கட்டமைப்பு

இதர அம்சங்களை பொறுத்தமட்டில், கேலக்ஸி எஸ்9, எஸ்9+ ஸ்மார்ட்போன்கள் கேமரா தொகுதிக்கு அடுத்து ஒரு கைரேகை ஸ்கேனரை அமைக்கப்பெறலாம். சாம்சங் கேலக்ஸி எஸ்9 கருவியில் ஒற்றை லென்ஸ் கேமராவும், கேலக்ஸி எஸ்9+ கருவியில் இரட்டை இரட்டை லென்ஸ் கேமரா கட்டமைப்பும் இடம்பெறலாம்.

பல வண்ண விருப்பங்களில்

பல வண்ண விருப்பங்களில்

மேலும் ரெண்டர்களின் படி, இக்கருவிகள் மிக மெல்லிய பெஸல்களை கொண்டிருக்கும் என்று, அதாவது எட்ஜ் டூ எட்ஜ் இன்பினிட்டி டிஸ்பிளே கொண்டிருக்கும் என்பதை வெளிப்படுத்துகிறது. உடன் கேலக்ஸி எஸ்9, எஸ்9+ கருவிகளானது - மிட்நைட் பிளாக், சில்வர் டைட்டானியம், ஆர்க்கிட் ஆஷ், ஓஷன் ப்ளூ மற்றும் மேப்பிள் ப்ளூ - பல வண்ண விருப்பங்களில் வரும் என்பதையும் காட்சிப்படுத்துகிறது.

4ஜிபி / 6ஜிபி ரேம்

4ஜிபி / 6ஜிபி ரேம்

எஸ்9+ ஆனது ஒரு 6.2 அங்குல டிஸ்பிளேவை கொண்டிருக்க மறுகையில் உள்ள கேலக்ஸி எஸ்9 ஆனது ஒரு 5.8 அங்குல க்வாட் எச்டி சூப்பர் அமோஎல்இடி டிஸ்பிளே கொண்டிருக்கலாம். இரண்டு சாதனங்களுமே சமீபத்தில் அறிவிக்கப்பட்ட க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 845 செயலி (அமெரிக்க சந்தை) மற்றும் சாம்சங் நிறுவனத்தின் எக்ஸிநோஸ் 9810 (உலகளாவிய பதிப்பு) செயலி உடனான 4ஜிபி / 6ஜிபி ரேம் மற்றும் சில எண்ணிக்கையிலான உள்ளடக்க சேமிப்பு மாதிரிகள் கொண்டு இயங்கும்.

பிப்ரவரி 26, 2018-ல் தொடங்குகிறது

பிப்ரவரி 26, 2018-ல் தொடங்குகிறது

சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9+ ஆகியவைகள், அடுத்த 2018 ஆண்டு நடைபெறும் எம்டபுள்யூசி வர்த்தக நிகழ்ச்சியின் போது பார்சிலோனாவில் அறிமுகப்படுத்தப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வு அடுத்த பிப்ரவரி 26, 2018-ல் தொடங்குகிறது. முன்னதாக, இந்த சாதனங்கள் ஜனவரி மாதம் நிகழும் சிஇஎஸ் 2018 நிகழ்ச்சியில் துவங்கப்படுமென லீக்ஸ் தகவல்கள் வெளியானதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Galaxy S9 vs iPhone X: Samsung phone may come with Synaptics Clear ID security, more advanced than Apple FaceID. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X