ஐபோன் எக்ஸ்-லாம், கேலக்ஸி நோட் 9 முன்னால ஒரு எலிக்குஞ்சு போல.!

தற்போது வெளியாகியுள்ள ஒரு காப்புரிமை புகைப்படத்தின் படி, சாம்சங் அதன் ஸ்மார்ட்போன்களின் திரையில் துளைகளை கொண்டிருக்கிறது.

|

இந்த 2018-ஆம் ஆண்டில் ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள், டிஸ்பிளே தொழில்நுட்பத்தின் அடிப்படையை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வார்கள் என்பதை உறுதி செய்யும் லீக்ஸ் ஒன்று வெளியாகியுள்ளது. அனைவரின் கணிப்புகளையும் நிஜமாக்கும் வண்ணம் இந்த மாற்றத்தை, புரட்சிமிக்க சாம்சங் நிறுவனமே ஆரம்பித்து வைத்துள்ளது.

ஐபோன் எக்ஸ்-லாம், கேலக்ஸி நோட் 9 முன்னால ஒரு எலிக்குஞ்சு போல.!

​​கடந்த ஆண்டு முழுவதும் 'முழுத்திரை' ஸ்மார்ட்போன்களின் வருகை அதிகரித்ததால் இந்த 2018-ஆம் ஆண்டு வேற லெவல் டிஸ்பிளே தொழில்நுட்பம் எதிர்நோக்கப்படுகிறது.

ஐபோன் எக்ஸ்-லாம், கேலக்ஸி நோட் 9 முன்னால ஒரு எலிக்குஞ்சு போல.!

தற்போது வெளியாகியுள்ள ஒரு காப்புரிமை புகைப்படத்தின் படி, சாம்சங் அதன் ஸ்மார்ட்போன்களின் திரையில் துளைகளை கொண்டிருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி நோட் 9

சாம்சங் கேலக்ஸி நோட் 9

இந்த துளைகளானது முன்பக்க கேமரா மற்றும் ஐரிஸ் ஸ்கேனர் போன்ற கூறுகளை இணைத்துக்கொள்வதற்காக அமைக்கப்பட்டிருக்கலாம் என்பது ஒருபக்கமிருக்க இது சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனாக இருக்கலாம் என்னது இரட்டிப்பு சுவாரஸ்யம்.

வன்பொருள் கூறு

வன்பொருள் கூறு

சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ், கடந்த மே 12, 2017 அன்று உலக அறிவுசார் சொத்து நிறுவனத்தில் (WIPO) அதன் காப்புரிமை ஒன்றை கோரியுள்ளது. அந்த காப்புரிமையின் வரைபடமானது காட்சிப்படும் அனைத்து வன்பொருள் கூறுகளையும் (every visible hardware) டிஸ்பிளேவிற்கு அடியில் உட்பொதிக்கும் கருத்தியல் சாதனத்தை வெளிப்படுத்துகிறது.

How to download your e-Adhaar using UIDAI - Official Website in Tamil.?
கைரேகை சென்சார்

கைரேகை சென்சார்

முன்பக்க கேமரா மற்றும் கருவிழி ஸ்கேனரை தவிர, கைரேகை சென்சார் அம்சமும் டிஸ்பிளேவின் கீழே உட்பொதிக்கப்படும் என்பதை இந்த காப்புரிமை வெளிப்படுத்துகிறது. இப்படியாக டிஸ்பிளேவின் கீழ் கைரேகை சென்சார் தொழில்நுட்பத்தை பதிக்கும் முதல் நிறுவனம் சாம்சங் அல்ல.

விவோ எக்ஸ்20 பிளஸ்

விவோ எக்ஸ்20 பிளஸ்

சமீபத்தில், விவோ நிறுவனம் அதன் விவோ எக்ஸ்20 பிளஸ் ஸ்மார்ட்போனில் டிஸ்பிளேவின்கீழ் கைரேகை சென்சார் கொண்டு, ஸ்மார்ட்போன்களுக்கான சீன சான்றிதழ் வலைத்தளமான டிஇஎன்ஏஏ (TENAA) பட்டியலில் காணப்பட்டதென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இன்பினிட்டி டிஸ்பிளே

இன்பினிட்டி டிஸ்பிளே

இவ்வகையான தொழில்நுட்பமானது சாம்சங் ஸ்மார்ட்போன்களில் இடம்பெறுமானால் அதுவொரு சாத்தியமான பெஸல்லெஸ் டிஸ்பிளேவை வடிவமைக்க உதவும். அதாவது தற்போதையை 18.5: 9 விகிதம் என்கிற புதிய பாணியானது பழையதாகி, சாம்சங் நிறுவனத்தின் வரவிருக்கும் இன்பினிட்டி டிஸ்பிளே ஸ்மார்ட்போன்களானது 21: 9 என்கிற காட்சி விகிதத்தை கொண்டிருக்கலாம்.

வரும் மாதங்களில்

வரும் மாதங்களில்

மேலும் இந்த சாம்சங் காப்புரிமையானது, தொலைபேசியின் மேல் வலதுபுறத்தில் ஒலிபெருக்கியை வைத்திருப்பதாக தெரிவிக்கிறது. மேற்கூறப்பட்டுள்ள அனைத்து அம்சங்களுடன் கேலக்ஸி நோட் 9 இந்த ஆண்டு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. ஆகமொத்தம் வரும் மாதங்களில் சாம்சங் நிறுவனத்தின் ஒரு புத்தம் புதிய வடிவமைப்பு பாணியை நாம் காண்போம்.

ஒரு 'உச்சநிலை' தேவை

ஒரு 'உச்சநிலை' தேவை

இப்போது வரையிலாக, ஐபோன் எக்ஸ் மற்றும் எசென்ஷியல் போன் போன்ற பிளாக்ஷிப் கருவிகளால் கூட 'உண்மையான பெஸல்லெஸ்' அனுபவத்தை அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடியவில்லை. ஏனெனில் அவைகளின் முன்பக்க கேமரா மற்றும் பிற தேவையான உணரிகளின் மீதான ஒரு 'உச்சநிலை' தேவைப்படுகிறது. அந்த தேவையையா சாம்சங் நிறுவனம் பூர்த்தி செய்யுமென நம்புகிறோம்.

Best Mobiles in India

English summary
Samsung Patent Details Holes Under Display for Front Cameras; Expected on the Galaxy Note 9. Read more aout this in Tamil Gizot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X