பிளிப்கார்ட் : மலிவு விலையில் சாம்சங் ஆன் நெக்ஸ்ட் அறிமுகம்.!
இக்கருவி 5.5-இன்ச் முழு எச்டி அளவு டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. மேலும் 2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
சாம்சங் நிறுவனம் தற்சமயம் 16ஜிபி கொண்ட சாம்சங் ஆன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடல் பிளிப்கார்ட் வழியே கிடைக்கும். மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
இதற்கு முன்பு 32ஜிபி மற்றும் 64ஜிபி கொண்ட சாம்சங் ஆன் நெக்ஸ்ட் மாடல் விற்பனை செய்யப்பட்டது, இவற்றின் விலை பொறுத்தவரை ரூ.15,990 மற்றும் 14,990-விலையில் விற்பனை செய்யப்பட்டது.

டிஸ்பிளே:
இக்கருவி 5.5-இன்ச் முழு எச்டி அளவு டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. மேலும் 2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன்
வெளிவந்துள்ளது.

கேமரா:
மேலும் கேலக்ஸி ஆன் நெக்ஸ்ட் பின்புற கேமரா பொறுத்தவரை 13 மெகா பிக்சல் கொண்டவை மற்றும் முன்புற கேமரா 8 மெகா பிக்சல்
கொண்டவை. அதன்பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

3ஜிபி ரேம்:
சாம்சங் கேலக்ஸி ஆன் நெக்ஸ்ட் 3ஜிபி ரேம் கொண்டுள்ளது மற்றும் 16/32/64ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது, கூடுதலாக 256ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
மற்ற மொபைல் மாடல்களில் இடம்பெற்றுள்ள இணைப்பு ஆதரவுகள் இதிலும் இடம்பெற்றுள்ளன. அவை வைஃபை, ப்ளுடூத், ஜிபிஎஸ், மைக்ரோயுஎஸ்பி போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன.

பேட்டரி :
சாம்சங் கேலக்ஸி ஆன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனில் 3,300எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, மேலும் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

விலை:
16ஜிபி கொண்ட சாம்சங் ஆன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,999-ஆக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல
தகவல்கள் ஆன்லைனில்வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications