Home
Mobile

சாம்சங் ஹை வேரியண்ட் ஸ்மார்ட்போன்கள்: ஒப்பீட்டு அலசல்

By Super

சாம்சங் ஹை வேரியண்ட் ஸ்மார்ட்போன்கள்: ஒப்பீட்டு அலசல்
விதவிதமான தொழில் நுட்பங்களுடன் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் ஆற்றல் வாய்ந்த இரண்டு ஸ்மார்ட்போன்கள் என்றால், சாம்சங் ஆம்னியா டபிள்யூ மற்றும் கேலக்ஸி டபிள்யூ என்று தாராளமாக கூறலாம்.

ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இரண்டு ஸ்மார்ட்போன்களும் வித்தியாசப்படுகிறது. கேலக்ஸி டபிள்யூ ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 2.3.5 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. ஆம்னியா டபிள்யூ மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் 7.5 மேங்கோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் சிறந்த

தொழில் நுட்ப வசதியினை பெறலாம்.

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் 3.7 இஞ்ச் திரை வசதி கொண்டது தான். ஆனால் தொழில் நுட்பத்தில் சற்று வித்தியாசம் உள்ளது. சாம்சங் கேலக்ஸி டபிள்யூ டிஎப்டி தொடுதிரை வசதியையும், சாம்சங் ஆம்னியா அமோல்டு தொடுதிரை வசதியையும் பெற்றுள்ளது. இதனால் 480 X 800 பிக்ஸல் திரை துல்லியத்தினை கொடுப்பதோடு, 16 மில்லியன் கலர்களுக்கு சப்போர்ட் செய்கிறது.

இந்த 2 ஸ்மார்ட்போன்களுமே டியூவல் கேமரா வசதியினை கொண்டது. இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 5 மெகா பிக்ஸல் கேமராவும், விஜிஏ செகன்டரி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த 5 மெகா பிக்ஸல் கேமராவினால் 2592 X 1944 பிக்ஸல் துல்லியத்தினை பெறலாம். இனி மனதுக்கு பிடித்த காட்சிகளை க்ளிக் செய்யலாம்.

ஆம்னியா டபிள்யூ ஸ்மார்ட்போனில் 8ஜிபி வரை இன்டர்னல் வசதியும், 512எம்பி ரேம் வசதியும் உள்ளது. இதனால் ஸ்டோரேஜ் வசதி பற்றிய கவலையே இல்லை. சாம்சங் கேலக்ஸி டபிள்யூ ஸ்மார்ட்போன் 1.7ஜிபி இன்டர்னல் வசதியை கொண்டுள்ளது. ஆம்னியா டபிள்யூ ஸ்மார்ட்போன் போலவே கேலக்ஸி டபிள்யூ ஸ்மார்ட்போனும் 512எம்பி ரேம் வசதியை கொண்டுள்ளது.

சாம்சங் ஆம்னியா டபிள்யூ ரூ.18,500 ஒட்டிய விலையில் கிடைக்கும். சாம்சங் கேலக்ஸி டபிள்யூ ஸ்மார்ட்போனும் இதே விலை கொண்டதாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X